இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கறைப்படிந்த பைபிள்

படம்
கறைப்படிந்த பைபிள் கிறிஸ்தவர்: பைபிளில் கறைப்படிந்து விட்டது என்பதற்கு ஆதாரம் இருக்கா? முஸ்லீம்  : இருக்கு கிறிஸ்தவர்: என்ன ஆதாரம் முஸ்லீம்:  இயேசு பேசிய மொழி என்ன? கிறிஸ்தவர் : அராமிக் முஸ்லீம் : புதிய ஏற்பாட்டின் மூல மொழி அராமிக்கா? கிறிஸ்தவர்:  இல்லை முஸ்லீம் : முந்தைய தீரக்கதரிசிகளின் போதனைகள் அவர்களது தாய்மொழியில் கொடுக்கப்பட்டு இருக்கும்போது இயேசுவின் போதனைகள் அவரது தாய்மொழியில் இல்லாமல் சிலை வணக்கம் புரியும் கிரேக்கர்களின் மொழியில் இருந்தால் அது கலப்படம் இல்லாத இயேசுவின் போதனை என்று எவ்வாறு சொல்ல முடியும்?  சிந்திப்பவர்களுக்கு இதில் ஆதாரம் உள்ளது. கிறிஸ்தவர்  :   ❓❔❔❔❓❓❓

சோதனையே இறைவனை நெருங்கும் வழி

படம்
🌪 சோதனையே இறைவனை                     நெருங்கும் வழி 🌪 இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் 'மரணத்தை 'சுவைத்தே ஆக வேண்டும் என்பது போல் சோதனைகளையும் சுவைத்தே ஆக வேண்டும்.மனிதன் கற்றல் ,ஆராய்ந்து அறிதல் ,கற்பித்தலுக்காகப் படைக்கப்பட்டவன் ஆனால் தனக்கு சோதனை நிகழும்போது அல்லாஹ் தன்னை தண்டித்து விட்டான் என்னும் புலம்பல் வார்த்தைகள் தான் ஏராளம். ⭐ வறுமை, நோய் ,உயிரினும் உணர்விலும் மேலானவர்களின் இழப்பு அனைத்தும் சோதனைகளே. "அல்லாஹ்வின் நல்லாசியும், நற்கிருபையும் பொறுமையாளார்களுக்கே உரியது ". அல்லாஹ் கூறுகிறான் ; 💎உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 67:2) ✍நிழல் போன்ற சோதனைகளால் உண்மை நிலையை இறை நம்பிக்கையாளர்கள்  இழந்து விடக் கூடாது என்பதற்காக நபியின் வாழ்வு   திருமறை அடிப்படையில் நம்மை வழி நடத்துகின்றது . 💎பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சய...

உடைந்த திரித்துவம்.

படம்
உடைந்த திரித்துவம். இறைவன் சர்வ வல்லமையுள்ளவன். பரிபூனணமானவன். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை தேர்ந்தெடுத்தான். மனிதர்கள் தங்களது அறியாமையாலும், அத்தூதர் மீது கொண்ட பாசத்தாலும்  தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இறைவனால் அனுப்பப்பட்ட  அத்தூதர்களையே இறைவன் என்று சொல்பவர்களை நம்மால் காணமுடிகிறது. இதுப்போன்று இறைவன் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர் தான் இயேசு. இயேசு தன் வாழ்நாளில் தானே இறைவன் என்று எப்போதும் சொல்லியது இல்லை. இருந்தாலும் அவர் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவரையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இயேசு உட்பட அனைத்து தீரக்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட ஒரே இறை கொள்கை  இயேசுவின் காலத்திற்கு பிறகு சில கிறிஸ்தவர்களால்  திரித்துவமாக வழிகேடாயிற்று. ஆயினும் அவர்கள் வேதம் என்று நம்பும்  பைபிளும் திரித்துவத்திற்கு எதிராக தான் நிற்கிறது. பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூவரும் தனித்தனி நபர்களாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்று சில கிறிஸ்தவர்கள் கூறி கொண்டாலும் இதற்கா...

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவனா?

படம்
பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவனா? மத்தேயு 9: 6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தப்படுத்துபவன் இறைவன் மட்டுமே. இயேசு மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருந்ததால் இயேசுவை இறைவன் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர். மத்தேயு 9:6இல் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் பூமியில் இயேசுவுக்கு உண்டு என்பதாக சொல்கிறது. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு இருப்பதால் இயேசு இறைவனாகி விடுவாரா என்ற கேள்விக்கு பைபிளின் மற்ற வசனங்களை படிக்கும்போது பதில் கிடைத்து விடுகிறது. இயேசு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சுயமாக கொண்டிருக்கவில்லை. அந்த அதிகாரம் இயேசுவுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்டது. அதனால் தான் இயேசுவோடு வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். மத்தேயு 9:8. ஜனங்கள் அதைக்க...

இயேசு இறந்தவர்களை உயிர்த்தெழ செய்வதால் இறைவனாகி விடுவாரா?

படம்
இயேசு இறந்தவர்களை உயிர்த்தெழ செய்வதால் இறைவனாகி விடுவாரா?  இயேசு தனது வாழ்நாளில் பல அற்புதங்களை செய்துள்ளார். அதில் மிக முக்கியமானது இறந்தவர்களை உயிர்ப்பித்தலும் ஒன்று. இறந்தவர்களை உயிர்ப்பித்தல் என்பது இறைவன் மட்டுமே செய்யும் காரியம் என்பதால் அதை செய்த இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு   கிறிஸ்தவர்கள்  ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இயேசு அந்த அற்புதத்தை கர்த்தரின் அனுமதி கொண்டு தான் செய்கிறாரே தவிர சுயமாக செய்யவில்லை என்பதை பைபிள் தெளிவாக சொல்கிறது. இயேசுவை விசுவாசம் கொண்டு இயேசுவோடு வாழ்ந்த மக்களும் இயேசு அத்தகைய அற்புதங்களை சுயமாக செய்யவில்லை .... கர்த்தர் தான் அத்தகைய அற்புதங்களை செய்கிறார் என்பதையும் அறிந்து வைத்து இருந்தனர். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளக்கூடிய இன்றைய கிறிஸ்தவர்கள் கர்த்தரின் அனுமதியின் அடிப்படையில் தான் இயேசு அற்புதங்கள் நிகழ்த்தினார் என்ற உண்மையை மறைத்து இயேசுவை இறைவன் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதன் உண்மை தன்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் நோக்கத்தில் தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. மார்த்தாளின் சகோத...

பவுல் அல்லாஹ்வின் தூதரா?

படம்
பவுல் அல்லாஹ்வின் தூதரா? இயேசு கொண்டு வந்த மார்க்கத்தை சிதைத்தவர் தான்  பவுல் என்ற இஸ்லாமியர்களின் பிரச்சாரத்தினால் விரக்தியடைந்த கிறிஸ்தவர்கள் தங்களது மதத்தின் தூணான பவுலை காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். முஸ்லீம்களை சமாளிக்க முடியாத கிறிஸ்தவர்கள்   இறுதியில் பவுல் அல்லாஹ்வின் தூதர் என்று குர்ஆன் சொல்வதாக  இஸ்லாத்தின் பக்கம் தஞ்சம் புகுந்துள்ளனர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரமான குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் பவுல் என்ற பெயர் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தின் இரண்டாவது ஆதாரமான நபி மொழி எனும் ஹதிஸ்களிலும் பவுல் பற்றி சொல்லப்படவில்லை. அப்படியிருந்தும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மார்க்கத்தை சிதைத்த பவுலை காப்பாற்ற தப்ஸீர்கள் மற்றும் இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களின் சுயக்கருத்துகளின் பக்கம் ஓடுகின்றனர். குர்ஆன்  36:14 வசனத்திற்கு கொடுக்கப்பட்ட இப்னு கதிரீன்   தப்ஸீரையே தங்கள் தவறான வாதத்திற்கு ஆதாரமாக வைக்கின்றனர். ஆனால் அந்த ஆதாரமும் அவர்களின் நம்பிக்கைக்கு விரோதமாக தான் உள்ளது.  குர்ஆன் 36:14  நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அ...

இயேசுவின் சரீரம் தேவத்துவம் பெற்று இருந்ததா????

படம்
இயேசுவின் சரீரம் தேவத்துவம் பெற்று இருந்ததா???? கொலோசெயர் 2:9  ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. இயேசு தேவன் என்பதற்கு மேலே உள்ள பைபிள் வசனத்தை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் கட்டுகின்றனர்.  அதாவது இயேசுவின் மனித உடலினுள் தேவத்துவம் பரிபூரணம் பெற்று இருந்தது என்று இந்த வசனம் சொல்வதால் இயேசுவை இறைவன் என்கின்றனர். இந்த வசனம் சொல்ல வரும் செய்தி என்னவென்பதை பைபிளின் மற்ற வசனங்களை கொண்டு ஆராயலாம். கொலோசெயர் 2:9 வசனத்தின் படி   இயேசுவின் மனித உடலில்  தேவத்துவம் என்பது கடவுள் என்ற அடிப்படையில் பரிபூரணத்தோடு இருந்திருந்தால் ஏன் இயேசுவுக்கு மறுமை நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை? ''அந்த நாளையும், அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்: பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.''(மத்தேயு – 24:36) பிதாவைத் தவிர வேறு யாருமே அந்த நாளை (நியாயத்தீர்ப்பு நாளை) அறியமாட்டார்கள் என்று இயேசுவே கூறியுள்ளார். இயேசு கடவுளாக இருந்தால் அதை அவர் அறிந்திருப்பாரல்லவா? இயேசு ஏன் தன்னை காட்டிலும் தன் பிதா ...

இயேசு ஆல்பா ஒமெகா இல்லை-பாகம் 4

படம்
இயேசு ஆல்பா ஒமெகா இல்லை-பாகம் 4 வெளி 22:13. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். இந்த வசனத்தையும்  கிறிஸ்தவர்கள் தவறான முறையில் இயேசுவோடு சம்பந்தப்படுத்தி இயேசுவை ஆல்பா ஒமெகா என்கின்றனர்.  இந்த வசனம் கர்த்தரை குறித்து தான் பேசுகிறது என்பதை இந்த அத்தியாயத்தை படிப்பவர் புரிந்து கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனத்தில் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது இயேசுவின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகின்றனர். 12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று தூதன் வழியாக பேசுவது கர்த்தர் தான் என்பது இந்த அத்தியாயத்தில் 6 மற்றும் 7 வசனங்களை படிப்போர் புரிந்து கொள்வர். 6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகியதேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார். 7. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப...

இயேசு ஆல்பா ஒமெகா இல்லை - பாகம் 3

படம்
இயேசு ஆல்பா ஒமெகா இல்லை  இயேசு ஆல்பா ஒமெகா இல்லை என்பதை ஏற்கனவே இரண்டு பதில்களில் இருவேறு வசனங்களை குறித்து பேசியிருந்தோம். இப்போது வெளிப்படுத்தின சுவிசேஷம் 21:6ஐ பற்றி பார்ப்போம். இந்த வசனம் இயேசுவை ஆல்பா ஒமெகா என்று சொல்வதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். உண்மை நிலையோ வேறு மாதிரி இருக்கிறது. வெளிப்படுத்தின சுவிசேஷத்தை பொருத்தவரையில் கர்த்தர், இயேசு, தூதன் மற்றும் யோவான் என  4 பேச்சாளர்கள் உள்ளனர். அந்த வசனத்துக்குரிய  பேச்சாளர் யார் என்பதை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் இயேசுவை ஆல்பா என்றும் ஒமெகா என்றும் கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாக இருக்கிறது என்பதை முன்பே நாம் சொல்லியிருந்தோம். அதேப் போன்ற தவறை தான் இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர். எந்த வசனத்தை முன்பின் வசனங்களோடு சேர்த்து படிக்கும்போது தான் அந்த வசனம் சொல்ல வந்த விசயத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இந்த வசனத்தையும் அதன் முன்பின் வசனங்களோடு படிக்கும்போது கர்த்தரை பற்றி தான் பேசுகிறது என்பதை பாமரனும் புரிந்து கொள்ளலாம். வெளி 21:6. அன்றியும், அவர் என்னை நோக்கி...

ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தாரா?

படம்
ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தாரா? ✍ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தார் என்பதற்கு கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர். ➡️யோவான் 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ➡️57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். ➡️58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ✍பூமிக்கு மனிதனாக வருவதற்கு முன்பே  இயேசு இருந்துள்ளார். அதனால்தான்  ஆப்ராஹம் இயேசுவை கண்டதாகவும் இதன் காரணமாக இயேசு இறைவன் என்றும் இந்த வசனத்தின் மூலம்  கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.  இதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம். ✍ஆப்ராஹமுக்கு முன்பே இருப்பதால் ஒருவர் இறைவன் ஆகிவிட முடியாது. உதாரணத்திற்கு வானவர்கள் சாத்தான் போன்றவர்கள் ஆப்ராஹமுக்கு முன்பே இருந்துள்ளனர். ஆப்ராஹமுக்கு முன்பே இருந்தால் இறைவன் என்று சொல்வது குருட்டு வாதமாகும். இதன் அர்த்தம் இயேசு ஆப்ராஹமுக்கு முன்பே இ...

இயேசு ஆல்பா ஒமெகா இல்லை.பாகம் 2

படம்
இயேசு ஆல்பா ஒமெகா இல்லை. வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8, 11; 21:6; மற்றும்  22:13 இல் இயேசு தன்னைத்தானே ஆல்பா ஒமெகா என்று வெளிப்படுத்தினார்  என்பதாக பெரும்பாலான கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. அதன் உண்மை தன்மையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  நாம் ஏற்கனவே வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:11இன் மூலப்பிரதியில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை என்பதை பார்த்து இருந்தோம். Rev 1:11 இல் சொல்லப்பட்ட ஆல்பா மற்றும் ஒமெகா என்பது இடைச்செருகல் என்பதை பைபிள் அறிஞர்களே ஏற்றுக் கொண்ட விசயம். அதனால்தான் பெரும்பாலான பைபிள் பாதிப்புகளில் அந்த வசனத்தில் ஆல்பா ஒமெகா என்று சொல்லப்படவில்லை. வெளிப்படுத்தின சுவிசேஷம் 1:8 மேற்கண்ட வசனம் கர்த்தரை பற்றி பேசுகிறது. இயேசுவை பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை.  அதேசமயம் இந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதற்கு பைபிளே போதுமான ஆதாரமாகும். வெளிப்படுத்தின சுவிசேஷத்தை பொருத்தவரையில் கர்த்தர், இயேசு, தூதன் மற்றும் யோவான் என  4 பேச்சாளர்கள் உள்ளனர். அந்த வசனத்துக்குரிய  பேச்சாளர் யார...

தவறான மொழிப்பெயர்ப்பினால் ஏமாற்றப்படும் கிறிஸ்தவர்கள்

படம்
தவறான மொழிப்பெயர்ப்பினால் ஏமாற்றப்படும் கிறிஸ்தவர்கள் 11. அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. Saying, I am Alpha and Omega, the first and the last: and, What thou seest, write in a book, and send it unto the seven churches which are in Asia; unto Ephesus, and unto Smyrna, and unto Pergamos, and unto Thyatira, and unto Sardis, and unto Philadelphia, and unto Laodicea. கிறிஸ்தவ உலகில் கிம் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகமான கிறிஸ்தவர்களால் படிக்கப்படுகின்ற பைபிள் மொழிப்பெயர்ப்பாக கிங் ஜேம்ஸ் வெர்ஷன் உள்ளது. இதன் நம்பகத் தன்மையை குறித்து கிறிஸ்தவ அறிஞர்கள் பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.     இந்த மொழிபெயர்ப்பில் உள்ள பல வசனங்கள் பைபிள் அறிஞர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.  இது ...

இயேசு ஒரேபேறான குமாரனா?

படம்
 இயேசு ஒரேபேறான குமாரனா? இயேசு இறை மகனா psalms 82 6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். பைபிளில் ஒருவரை தேவன் என்று என்றோ அல்லது தேவனின் மகன் என்று சொல்வதினால் அவரை இறைவன் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்றும் கர்த்தரின் மகன் என்று குறிப்பிட்டுள்ளதில்  இருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம். இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மகிமைப்படுத்தும் விதமாகவே இதுப்போன்ற சொல்லாடலை பைபிள் பயன்படுத்துகிறது.    john 3 16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16ல் இருந்து யெகோவா தேவன் நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக பூமியில் இறங்கி வந்தார் என்பதை நிரூபிக்க கிறிஸ்தவர்கள்  முயல்கிறார்கள். இயேசு கடவுளுடைய தனித்த மகனாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவரை கடவுளுக்கு ஒரே மகனாக ஆக்குகிறார்கள். ஆனால் அவர்களின் வேதம...

பைபிள் காமெடிகள்: கடுகளவு விசுவாசத்தால் மரமும் நகருமாம்..!

படம்
கடுகளவு விசுவாசத்தால் மரமும் நகருமாம்..!  உளறும் பைபிளால் குழம்பும் கிறிஸ்தவம்..!! ✍இன்றைய உலகில் கிறிஸ்தவ மதமே பெரும்பான்மையாக உள்ளது. மூவரில் ஒருவர் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் பெருமையடிக்கும் அளவுக்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். ✍இந்த கிறிஸ்தவர்களுக்கிடையே பல்வேறு பிரிவுகளும் உண்டு. அவர்கள் ஒரு ஒரே பிரிவு மற்றொரு பிரிவை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே உண்மை கிறிஸ்தவர்கள் மற்ற பிரிவுகள் உண்மை கிறிஸ்தவம் இல்லை என்று சொல்வார்கள். ✍இன்னும்  சிலரோ பெயரளவில் கிறிஸ்தவர்களாகவும் உண்மையில் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுபவர்களாகவும் இருப்பர். இத்தகைய கிறிஸ்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம். இதுப்போன்ற பிரிவுகள் எல்லா மதங்களிலும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.  அத்தகைய பிரிவுகளை அந்தந்த மதங்களின...

பைபிளில் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு ஆராதனை செய்பவரே.!

படம்
பைபிளில் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு ஆராதனை செய்பவரே.! இயேசுவும் கர்த்தருக்கு ஊழியம்  செய்பவரே. பைபிளில் சொல்லப்பட்டுள்ள  இறைமகன் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு அதாவது கர்த்தருக்கு சமமானவராக காட்ட பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவத்தை பொறுத்தவரையில் இரண்டு வகை கருத்துகள் உண்டு. ஒன்று வேதம் சொல்வது. மற்றொன்று வேதத்தில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சார்ந்தது. இறை மகன் என்ற சொல்ல கர்த்தருக்கு சமமாக்குவது என்பது வேதத்தின் கருத்து அல்ல. அது கிறிஸ்தவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவர்களின் வேதத்தோடு முற்றிலும் முரண்படுகிறது. எந்த ஒரு நம்பிக்கைக்கும் வேதம் தான் ஆதாரமாக இருக்க வேண்டும். ஆனால் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு சமம் என்று கிறிஸ்தவர்கள்  சொல்வது கிறிஸ்தவர்களின் குருட்டு நம்பிக்கை தானே தவிர பைபிள் அதனை ஆதரிக்கவில்லை.  பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தாவீது போன்ற தனிமனிதர்களும் இன்னும் இஸ்ரவேல் என்ற ஒட்டுமொத்த சமூகமும் கூட கர்த்தரால் இறை மகன் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சாதாரண மனிதர்களாக பார்க்கும் கிறிஸ்தவர்கள் பைபிளில் இயேச...

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

படம்
அல்லாஹ்வின் வாக்குறுதிகள் ⭐⭐அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய  அல்லாஹ்வின் திருப்பெயரால்....⭐⭐ ➡️நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான். அல்குர்ஆன் 3:9 ✍அல்லாஹ்வின் வாக்குறுதியே என்றும் உண்மையானது. அதில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. உண்மையாளனான அல்லாஹ் தம் அடியார்களுக்கு பல வாக்குறுதிகளை தந்துள்ளான். அதில் இந்த உலகில் அடியார்களின் தன்னம்பிக்கையை திடப்படுத்தக்கூடிய அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம். ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🔴 அடியார்கள் நினைவு கூறும்போது அல்லாஹ்வும் தம் அடியார்களை நினைவு கூறுகின்றான். ➡️அல்குர்ஆன் 2:152 ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். ✍ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமானவர்கள் தம்மை நினைவு கூறுவதை விரும்புவான்.  ஒரு விசுவாசிக்கு தன்னை படைத்தவன் தன்னை பற்றி நினைவு கூறுவதை இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் காட்டிலும் விரும்புவான். அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல  அல்லாஹ், அடியார்கள் தம்மை நினைவு கூறும்போது தமது அடியார்களை தாமும்  நினைவு கூறுவதாக வாக்களித்துள்ளான் . மேலு...