பழைய ஏற்பாடு திரித்துவ(Echad) தேவனை போதிக்கிறதா?

பழைய ஏற்பாடு திரித்துவ தேவனை போதிக்கிறதா? ✍எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவத்தை பழைய ஏற்பாட்டில் புகுத்த கிறிஸ்தவர்கள் கையாளும் தந்திரம் தான் Echad என்ற சொல் ஆகும். 👉இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே(Echad) கர்த்தர். (உபாகமம் 6:4) ✍Echad என்ற சொல் ஒன்று என்று மொழிப்பெயர்க்கப்பட்டாலும், அது பன்மையில் ஒருமை என்று அர்த்தம் கொண்டது என்பதே கிறிஸ்தவர்களின் வாதம். இந்த வாதத்தை பயன்படுத்தி உபாகமம் 6:4இல் சொல்லப்பட்ட கர்த்தர் ஒருவரே தேவன் என்பது திரித்துவ தேவனை உள்ளடக்கும் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். Echad என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்று சொல்வதற்கு கீழ்க்கண்ட வசனங்களை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர். 👉அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 2:24) 👉அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; (ஆதியாகமம் 11:6) ⭐⭐⭐⭐⭐⭐ ✍Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் பயன்படுத்தப...