லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்ற முஸ்லீம் பெண்கள்

லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்ற முஸ்லீம் பெண்கள்





✍மர்வா பலஹா, நூஹ் முஸ்தபா மற்றும் அமீரா அல்-யாதீபி என்கிற மூன்று எகிப்திய முஸ்லீம் பெண் விஞ்ஞானிகளும் 2018ஆம் ஆண்டிற்கான லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்றனர்.

✍இந்தத் துறையில் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளை சார்ந்த மற்ற  பெண்களும் கலந்து கொண்டனர்.

✍பெண் விஞ்ஞானிகளுக்காக 19 ஆண்டுகளுக்கு முன்னர் எல்'ஓரெல்-யுனெஸ்கோ தொடங்கப்பட்டது. இது இளம் பெண்களை விஞ்ஞான துறையில் நுழைய ஊக்கமளிக்கவும் மற்றும் பெண் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கவும் இது ஆரம்பிக்கப்பட்டது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍ #மர்வா_பலாஹா  ஒரு எகிப்திய மருந்தாளர் மற்றும் வேதியியலாளர். புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய செல்களை வடிவமைத்தல் மற்றும் கட்டமைக்கக்கூடியவர். இந்த செல்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு மாற்று மருந்தாக பயன்படுகின்றது. 

✍அந்த செல்கள் பரிசோதிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள புற்றுநோய் சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.

✍நுரையீரல் புற்றுநோய்களின் சிகிச்சையில் உயிரணுக்களின் வடிவத்தையும் அவற்றின் இரசாயன சூத்திரத்தையும் இணைக்கும் ஒரு மாதிரியை அவர் உருவாக்கியுள்ளார். அவரது ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் நேரம் மற்றும் பணத்தை சேமிக்கும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍#டாக்டர்_நூஹா_முஸ்தபாவை பொறுத்தவரையில், அவர் அனாலிட்டிக் வேதியியல் துறையில் ஆய்வாளராகவும், அசுயூட் மருந்தியல் பள்ளியில் பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். அவர் பகுப்பாய்வு வேதியியல் முக்கியத்துவத்தை உணர்ந்து, ​​அவர் தனது நேரத்தை பல்வேறு மருந்துகளை பகுப்பாய்வு செய்வது, அவற்றின் கூறுகளை நிர்ணயிக்கும் புதிய வழிமுறைகளை உருவாக்க அர்ப்பணித்தார்.

✍முஸ்தபாவின் நோக்கம் மருத்துவ கூறுகளை பிரிக்க புதுமையான, மிகவும் துல்லியமான மற்றும் மலிவான முறைகள் உருவாக்குதல் மற்றும் விஷத்தன்மைக்கு அவற்றின் எதிர்வினைகளை சோதிக்கும் முயற்சியாக இருந்தது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍இறுதியாக, #டாக்டர்_அமிரா_அல்_யாஜிபி, பகுப்பாய்வு சார்ந்த மருந்து வேதியியல் துறையில் ஆய்வாளராகவும், அலெக்ஸாண்ட்ரிய பல்கலைக்கழகத்தில் மருந்தக பள்ளியில் உதவி பேராசிரியராகவும் உள்ளார்.

✍மிக துல்லியமாக டி.என்.ஏ அழிவைக் கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டறிந்தார். டிஎன்ஏ அழிவு என்பது  புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும். இத்தகைய அசாதாரண அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே  தடுக்க உதவும்.

✍தற்போதுள்ள டிஎன்ஏ அழிவை கண்டறியும் சோதனை  முறைகள் மிகுந்த விலை மதிப்பு கொண்டது. டாக்டர் அமிரா அல்-யாஜிபியின் புதிய முறை செலவை குறைக்கும் மற்றும்  துல்லியமானது.

💎(ஆதாரம்: https://egyptindependent.com/3-egyptian-women-win-loreal-unesco-science-award/)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்