குர்ஆன் சாத்தானின் வார்த்தையா??

💎💎 குர்ஆன் சாத்தானின் வார்த்தையா??💎💎



✍அல்லாஹ்வின் இறுதி வேதமான குர்ஆனை நிராகரிக்க தள்ளப்பட்ட தூதனின் அதாவது சாத்தானின் வார்த்தை தான் குர்ஆன் என்று அவதூறு பிரச்சாரத்தை குர்ஆனுக்கு எதிராக செய்கின்றனர். இவர்களது இந்த பிரச்சாரம் இயேசுவின் அடிப்படை போதனைகளுக்கு முரணானது. அது எவ்வாறு என்பதை இனி காண்போம்.

✍இன்று எவ்வாறு கிறிஸ்தவர்கள் முஹம்மது நபி மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்களோ அதுப்போன்று தான் இயேசுவின் போதனைகளை கண்டு வெறுப்புற்ற யூதர்களும் இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்று கூறி புறக்கணித்தனர். அதற்கு பதிலாக இயேசு அளித்த பதில் தான் கீழ்கண்ட வசனம்.

➡️25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

➡️26. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
(மத்தேயு 12)

✍இதே பொருளில் அமைந்த வசனங்கள் மாறகுவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

➡️23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?

➡️24. ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
(மாற்கு 3)

✍மேற்கண்ட வசனத்தில் சாத்தான் தனக்குத்தானே விரோதமாய் எழும்பி மாட்டான் என்று இயேசு கூறுகிறார். இதை உண்மைப்படுத்தும் விதமாக குர்ஆனும் மனித குலத்தின் விரோதியாக சாத்தானை அடையாளப்படுத்துவதோடு, அவனை பின்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கிறது.

⭐ சாத்தான் மனித குல விரோதி என்றும், அவனது அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் என்று போதிக்கும் குர்ஆன் வசனங்கள்.

💎ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
(அல்குர்ஆன் 2:168)

💎நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
(அல்குர்ஆன் 2:208)

💎ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 24:21)

⭐குர்ஆனை ஓதுவதற்கு முன்பு விரட்டப்பட்ட சாத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட சொல்லும் குர்ஆன் வசனம்.

➡️மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.
(அல்குர்ஆன் 16:98)

✍சாத்தானை குறித்து தெளிவான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட வசனங்கள் இதுப்போன்று ஏராளம் உண்டு. குர்ஆன் சாத்தானின் வார்த்தை என்றால் அவன் எவ்வாறு தனக்கு விரோதமாய்  பேசுவான் என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

✍இயேசுவின் போதனைகளுக்கு முரணாக செயல்படும் கிறிஸ்தவர்கள், இந்த முறையும் இயேசுவின் போதனைகளை தங்களது செருப்பால் மிதித்து விட்டு, சாத்தானை மனித குலத்தின் விரோதி என்று சொல்லும் குர்ஆனை சாத்தானின் வார்த்தை என்று அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். கிறிஸ்தவர்களின் இந்த அவதூறு பிரச்சாரம் உண்மை என்றால் சாத்தான் தனக்கு விரோதமாய் எழும்பமாட்டான் என்ற இயேசுவின் போதனை பொய் என்றாகிவிடும். இதில் யார் சொல்வது உண்மை? கிறிஸ்தவர்கள் சொல்வதா அல்லது இயேசு சொல்வதா? பைபிளை ஆழமாக படிப்போர் இயேசு சொல்வதே உண்மை என்று நம்பினால், குர்ஆனையும் இறைவேதம் என்று நிச்சயம் நம்புவார்கள்.

💎நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் 17:107)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்