முஹம்மது நபியை womanizer என்று சொல்லும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மறுப்பு

 முஹம்மது நபியை womanizer என்று சொல்லும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மறுப்பு







... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. 


(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours) Source 


இஸ்லாமிய சரித்திர அறிஞர் அல் தபரி " The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.


👉(கிறிஸ்தவர்களின் தவறான மொழியாக்கம்) முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். 

இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால்

👉முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்",👈 இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். 

இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார்.


மேற்கண்ட செய்தியை சுட்டிக்காட்டி முஹம்மது நபி அவர்கள் பெண் பித்துப் பிடித்தவர் என்று கிறிஸ்தவர்கள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனுடைய உண்மை நிலை குறித்து என்று ஆய்வு செய்வோம்.


1️⃣ முதலாவதாக மேற்கண்ட செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸாஹிபுநிஷா என்கிற சொல் பல மனைவிகளுக்கு சொந்தகாரர் என்கிற அடிப்படையில் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது தவிர womanizer என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் இந்த இடத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் womanizer என்ற சொல்லுக்கு பதிலாக polygamist என்கிற சொல்லையே பயன்படுத்தி வேண்டிய இருக்க வேண்டும்.  Womanizer என்று சொல்வதாக இருந்தால் அரபியில் زير نساء(ஜிர்நிஷா) என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தாமல், பல மனைவிகளை கொண்டவர் எனும் அர்த்தம் தரும் ஸாஹிபுநிஷா என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.


2️⃣ இரண்டாவதாக இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதும் கிடையாது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெரும் ஹிஷாம் பின் முஹம்மது பின் அஸ்ஸாயிப் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் மூலமாக அறிவிக்கப்படும் இச்செய்தி நிராகரிக்கப்பட்டதாகும்.


1.இப்னு ஈராக் தனது புத்தகமான Tanzīh al-Share'ah 1/123 இல், அவர் எழுதுகிறார், Hisham b. Muhammad b. al-Sa'ib al-Kalbi al-Akhbari al-Nisābah பொய்யர் என்று குற்றப்படுத்துகிறார்.


2. அல்-தரகுத்னி தனது al-Du'afa w'al Matrūkūn 3/135 புத்தகத்தில் அவரைக் குறிப்பிடுகிறார், அதாவது அவர் பலவீனமானவர்/நிராகரிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்.


3. அல்-தஹாபி கூறுகிறார்: இவர் அவரது தந்தை போன்று நிராகரிக்கப்பட்ட அறிவிப்பாளர்களில் ஒருவர் (Matrūkūn).


3️⃣ மூன்றாவதாக அல் தபரி ஆங்கில மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாளர் அதே பகுதியில் கீழே குறிப்பில் womanizer என்கிற சொல்லுக்கு முகமது நபி பலதார திருமணம் செய்தவர் என்கிற அர்த்தத்தையே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்தவ மத வியாபாரிகள் இதனை மறைத்து முஹம்மது நபிக்கு எதிராக தவறான முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு நூலின் மொழிபெயர்ப்பாளர் ஒரு சொல்லை ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் மொழிபெயர்த்து இருக்கும் பொழுது, அதனை மறைத்து வேறு அர்த்தமாக சித்தரித்து மக்களிடையே தவறான முறையில் பிரச்சாரம் செய்வது எந்த வகையிலும் நியாயம் கிடையாது என்பதை கிறிஸ்தவ தர்க்கவியலாளர்கள் உணர வேண்டும்.


4️⃣ நான்காவதாக இன்னும் வேறு சில அறிவிப்புகளில் மற்ற மனைவியார்களுடன் சேர்ந்து வாழும் பொறுமை இல்லாதவள் என்று லைலா பின்ந் அல் காத்திமிடம் அவரது இன மக்கள் அறிவுறுத்தியதால், முஹம்மது நபியிடம் திரும்ப சென்று, "நீங்கள் பலதார திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதித்து இருக்கின்றான் ஆனால் அதே சமயம் தான் ஒரு வசைபாடக்கூடிய  பெண் என்பதால் தன்னை இந்த திருமணத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று முகமது நபியிடம் கூறி திருமண விலக்கு பெற்றதாக மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


كَانَتْ لَيْلَى بِنْتُ الْخَطِيمِ وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبِلَهَا وَكَانَتْ تَرْكَبُ بُعُولَتَهَا رُكُوبًا مُنْكَرًا وَكَانَتْ سَيِّئَةَ الْخُلُقِ فَقَالَتْ : لَا وَاللَّهِ لَأَجْعَلَنَّ مُحَمَّدًا لَا يَتَزَوَّجُ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ ، وَاللَّهِ لَآتِيَنَّهُ وَلَأَهَبَنَّ نَفْسِي لَهُ ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ مَعَ رَجُلٍ مِنْ أَصْحَابِهِ فَمَا رَاعَهُ إِلَّا بِهَا وَاضِعَةً يَدَهَا عَلَيْهِ ، فَقَالَ : " مَنْ هَذَا أَكَلَهُ الْأَسَدُ ؟ " فَقَالَتْ : أَنَا لَيْلَى بِنْتُ سَيِّدِ قَوْمِهَا ، قَدْ وَهَبْتُ نَفْسِي لَكَ ، قَالَ : " قَدْ قَبِلْتُكِ ، ارْجِعِي حَتَّى يَأْتِيَكِ أَمْرِي " فَأَتَتْ قَوْمَهَا فَقَالُوا : أَنْتِ امْرَأَةٌ لَيْسَ لَكِ صَبْرٌ عَلَى الضَّرَائِرِ ، وَقَدْ أَحَلَّ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْكِحَ مَا شَاءَ ، فَرَجَعَتْ فَقَالَتْ : إِنَّ اللَّهَ قَدْ أَحَلَّ لَكَ النِّسَاءَ وَأَنَا امْرَأَةٌ طَوِيلَةُ اللِّسَانِ وَلَا صَبْرَ لِي عَلَى الضَّرَائِرِ وَاسْتَقَالَتْهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " قَدْ أَقَلْتُكِ "


(இப்னு சாத், 10வது பாகம்: 9927)

ஆதாரம்: https://islamarchive.cc/H_76249


👉 முஹம்மது நபி Womanizer ஆக இருந்திருந்தால் லைலா தனது திருமணத்தை முறிக்கும்படி கேட்டுக் கொண்டபோது, அதை முறிக்காமல் அப்பெண்ணை அனுபவித்து விட்டு அதன் பிறகு திருமண உறவை முறித்து இருக்கலாம். முகமது நபி அவ்வாறு ஒரு முடிவு எடுத்து இருந்தால் அதை தடுப்பதற்கு எவராலும் இயலாத காரியமாக இருந்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தே முஹம்மது நபியின் கண்ணியம் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மக்காவில் ஒரே இறைவன் என்கிற சத்திய பிரச்சாரத்தை மேற்கொண்ட பொழுது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக மக்கத்து காபிர்கள் பெண்களையும் பொன்னையும் அதிகாரத்தையும் தருவதாக எடுத்துச் சொல்லியும் கூட தனது ஓரிறை பிரச்சாரத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து, அதனால் ஊர் விலக்கம் செய்யப்பட்டு இலைகளைத் தின்று வாழக்கூடிய  சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்தான் முஹம்மது நபி என்பதை மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட ஒருவர் மீது Womanizer என்கிற குற்றச்சாட்டு பொய்யான ஒன்றே ஆகும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


#womanizer

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்