தோரா மனித கரங்களால் கறைப்படியவில்லை என்று முஹம்மது நபியவர்கள் நம்பினார்களா?
தோரா மனித கரங்களால் கறைப்படியவில்லை என்று முஹம்மது நபியவர்கள் நம்பினார்களா?
கிறிஸ்தவ மிஷனரிகள் கீழ்கண்ட ஹதீஸை தவறான முறையில் விளக்கப்படத்தி முஹம்மது நபியவர்கள் தனது காலத்தில் யூதர்கள் வைத்திருந்த தோராவை முழுமையான இறை வேதம் என்று நம்பினார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் உண்மைத்தன்மையை கீழே காண்போம்.
Narrated Abdullah Ibn Umar:
A group of Jews came and invited the Messenger of Allah (ﷺ) to Quff. So he visited them in their school.
They said: AbulQasim, one of our men has committed fornication with a woman; so pronounce judgment upon them. They placed a cushion for the Messenger of Allah (ﷺ) who sat on it and said: Bring the Torah. It was then brought. He then withdrew the cushion from beneath him and placed the Torah on it saying: I believed in thee and in Him Who revealed thee.
He then said: Bring me one who is learned among you. Then a young man was brought. The transmitter then mentioned the rest of the tradition of stoning similar to the one transmitted by Malik from Nafi'(No. 4431).
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، أَنَّ زَيْدَ بْنَ أَسْلَمَ، حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَتَى نَفَرٌ مِنْ يَهُودَ فَدَعَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْقُفِّ فَأَتَاهُمْ فِي بَيْتِ الْمِدْرَاسِ فَقَالُوا يَا أَبَا الْقَاسِمِ إِنَّ رَجُلاً مِنَّا زَنَى بِامْرَأَةٍ فَاحْكُمْ بَيْنَهُمْ فَوَضَعُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وِسَادَةً فَجَلَسَ عَلَيْهَا ثُمَّ قَالَ " ائْتُونِي بِالتَّوْرَاةِ " . فَأُتِيَ بِهَا فَنَزَعَ الْوِسَادَةَ مِنْ تَحْتِهِ فَوَضَعَ التَّوْرَاةَ عَلَيْهَا ثُمَّ قَالَ " آمَنْتُ بِكِ وَبِمَنْ أَنْزَلَكِ " . ثُمَّ قَالَ " ائْتُونِي بِأَعْلَمِكُمْ " . فَأُتِيَ بِفَتًى شَابٍّ ثُمَّ ذَكَرَ قِصَّةَ الرَّجْمِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ عَنْ نَافِعٍ .
Grade: Hasan (Al-Albani) حسن (الألباني) حكم :
Reference : Sunan Abi Dawud 4449
In-book reference : Book 40, Hadith 99
English translation : Book 39, Hadith 4434
தமிழ் மொழியாக்கம்:
அப்துல்லா இப்னு உமர் அறிவிப்பதாவது:
யூதர்கள் ஒரு குழு வந்து அல்லாஹ்வின் தூதரை (ﷺ) குஃப்பில் சந்திக்க அழைத்தது. எனவே அவர் அவர்களை அவர்களின் பள்ளியில் பார்வையிட்டார்.
அவர்கள் சொன்னார்கள்: அபுல்காசிம், எங்கள் ஆண்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்துள்ளார்; எனவே அவர்கள் மீது தீர்ப்பை சொல்லவும். அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்கு ஒரு மெத்தை வைத்தார்கள். அவர்கள் அதன்மேல் அமர்ந்து: தோராவை கொண்டு வாருங்கள் என்றார்கள். பின்னர் அது கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர் தனக்கு அடியில் இருந்து மெத்தை விலக்கி, தோராவை அதன் மீது வைத்தார்: நான் உன்னையும் உன்னை வெளிப்படுத்தியவனையும் நம்புகிறேன் என்று கூறினார்கள்.
பின்னர் அவர்: உங்களிடையே கற்ற ஒருவரை என்னிடம் கொண்டு வாருங்கள். பின்னர் ஒரு இளைஞன் அழைத்து வரப்பட்டான். பின்னர் அறிவிப்பாளர் நாஃபியிலிருந்து மாலிக் சொல்லியதைப் போலவே கல்லெறியும் பாரம்பரியத்தை குறிப்பிட்டார் (எண் 4431).
1. இந்த ஹதிஸ் ஸஹீஹ் கிடையாது. இது ஒரு ஹஸன் தர ஹதிஸ் மட்டுமே. இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஹிஷாம் பின் சாத் என்பவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீத்தை விவரிப்பதில் தவறுகளைச் செய்பவர் என்று அறியப்படுபவர்.
2. மேற்கண்ட அறிவிப்பில் உள்ள தோராவைப் எடுத்து, நான் உன்னை நம்புகிறேன் என்று முஹம்மது நபி அவர்கள் கூறியதாக வரும் செய்தி இட்டுக்கட்டப்பட்ட ஒன்று ஆகும். இச்செய்தி நம்பகமான அறிவிப்பாளர்கள் மூலமாக நம்மிடம் வரவில்லை என்று இப்னு ஹாஷம் தனது நூலான Al-Fisal fe al-Milal wa al-Ahwaa wa al-Nihal இல் குறிப்பிடுகின்றார்.
3. அதுமட்டுமில்லாமல் இதே ஹதிஸ் மற்ற அறிவிப்பாளர்கள் மூலமாக ஆதாரப்பூர்வமான (ஸஹீஹ்) ஹதீஸ்களில்(ஸஹீஹ் புஹாரி:3635, 4556, 6819, 6841, 7543, ஸஹீஹ் முஸ்லிம்: 3503, 3505) பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தோராவை மெத்தையின் மீது வைத்து "நான் உன்னையும், உன்னை வெளிப்படுத்தியவனையும் நம்புகிறேன்" என்று கூறியதாக எந்த வித அறிவிப்பும் இல்லை. இதன் மூலம் அபூதாவூதில் பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதிஸை ஆதாரப்பூர்வமானதாக ஏற்று கொள்ள முடியாது.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது' என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.
ஸஹீஹ் புகாரி : 3635.
அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
4. ஒரு வாதத்திற்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது எடுத்துக் கொண்டாலும் கூட அந்த ஹதீஸை மனித கரங்களால் கறை படியவில்லை என்ற அர்த்தத்தில் தான் முஹம்மது நபி அவர்கள் நம்பினார்கள் என்று ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. முஹம்மது நபியவர்கள் தோராவை மெத்தை மீது வைத்து நான் உன்னையும், உன்னை அனுப்பியவனையும் நம்புகிறேன் என்று சொல்லி இருப்பதால் அந்த வேதத்தில் எந்த விதமான மனிதனது சொந்தக் கருத்துக்களும் இல்லை என்றும் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. தோரா மனித கறைபடிந்த வேதம் என்பதின் அர்த்தம் அதில் மனிதனது சொந்த கருத்துக்கள் இருப்பதுபோல ஏராளமாக அல்லாஹ்வின் வார்த்தைகளும் இருக்கின்றன என்பதே அதன் அர்த்தமாகும். இதன் காரணமாக யூதர்களிடமிருந்த அந்த தோராவில் அல்லாஹ்வின் வார்த்தைகளும் இருக்கின்றன என்றே முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். தோராவை மெத்தையின் மீது வைத்து உன்னையும், உன்னை அனுப்பியவனையும் நம்புகிறேன் என்று முஹம்மது நபி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்திற்கு கொடுத்த மரியாதை தானே தவிர அதில் உள்ள கறை படிந்த மனித வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை கிடையாது. ஒரு புத்தகத்தில் அல்லாஹ்வின் வார்த்தை சொற்பமாக இருந்தாலும் அதுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது ஒரு நம்பிக்கையாளனின் கடமையாகும்.
5. மேலும் பல்வேறுபட்ட அல்குர்ஆன் வசனங்களும்(2:79, 3:78, 3:187, 4:46, 4:157, 5:13-15, 5:41) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்(ஸஹீஹ் புகாரி: 7523, சில்சிலா அல்-ஹதித் அல்-ஸஹிஹ் 2832, 2694) வேதம் முந்திய வேதங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களால் கறைப்பட்டுவிட்டன என்று தெளிவாக போதிக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது அபூதாவூதில் உள்ள இந்த ஹதீஸைக் கொண்டு முஹம்மது நபியவர்கள் முந்தைய வேதங்கள் மனித கரங்களால் கறை படியவில்லை என்று நம்பினார்கள் என்று ஒருபோதும் வாதிட முடியாது.
#இஸ்லாத்தின்_பார்வையில்_பைபிள்
கருத்துகள்
கருத்துரையிடுக