கல்லெறி தண்டனை சட்டம் குர்ஆனில் இல்லையா?
✍கல்லெறிதல் தண்டனை சட்டம் என்பது இறைவனால் மாற்றப்பட்ட சட்டம் ஆகும். திருமணமான விபச்சாரம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை சட்டம் முகமது நபிக்கு அருளப்பட்டது என்றும், அதை நபியின் தோழர்கள் மனனம் செய்து ஓதி வந்தார்கள் என்பதையும், பிறகு அதன் ஓதல் முறை ரத்து செய்யப்பட்டு, சட்டம் மட்டும் நடைமுறையில் இருந்து வந்தது என்பதை இது சம்பந்தமாக வருகின்ற ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
☞3492. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் #அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 29. குற்றவியல் தண்டனைகள்
✍இந்த ஹதிஸில் ரஜ்ம் சட்டம் முஹம்மது நபிக்கு அருளப்பட்பதில் இருந்தது என்றே சொல்லப்பட்டுள்ளது. முஹம்மது நபிக்கு வேதம் மற்றும் ஞானம்(ஹதிஸ்கள்) அருளப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் நஜ்ம் சட்டம் வந்தபோது நபியின் தோழர்கள் குர்ஆனோடு எழுதி வைக்கலாமா என்று கேட்டதற்கு, நபி கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதுப்பற்றி தான் உமர் அவர்கள் பிற்காலத்தில் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதில்(#ஹதிஸ்கள்) நஜ்ம் வசனம் இருந்தது. #பிற்காலத்தில்_சில_மக்கள் வேதத்தில் அந்த தண்டனை சட்டம் இல்லை என்று சொல்லி புறக்கணித்து விடக்கூடாது என்ற அடிப்படையிலே இவ்வாறு சொன்னார்.
நபியவர்களும் கல்லெறிதல் தண்டனை சட்டத்தை குர்ஆனில் எழுத வேண்டாம் என்று சொல்லியுள்ளார். அதற்கான ஆதாரம்.
☞It is reported in a narration from Kathir bin Salt that: Zaid (b. Thabit) said: 'I heard the Messenger of Allah say, 'When a married man or woman commit adultery stone them both (to death)', (hearing this) Amr said,
فقال عمرو : لما نزلت أتيت النبي صلى الله عليه وسلم فقلت : أكتبها ؟ فكأنه كره ذلك
'When this was revealed I came to Prophet and asked if I could write it, he (the Prophet) disliked it.' (Mustadrik Al-Hakim, Hadith 8184. Hakim called it Sahih).
தமிழாக்கம்: கதிர் பின் சால்த் அவர்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: ஜைத் (பின் தாபித்) அவர்கள் கூறினார்கள்: 'திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் இருவரையும் கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். அம்ர்(ரலி) கூறினார்கள்: எப்போது இச்சட்டம் அருளப்பட்டதோ அப்போது நான் நபியவர்களிடம் வந்து இதை எழுதட்டுமா என்று கேட்டேன். அவர் (நபி ஸல்) அதை விரும்பவில்லை.
✍இந்த சட்டம் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட இருந்தாலும் பிறகு நபியின் கட்டளைப்படி குர்ஆனின் ஓதலில் இருந்து நீக்கப்பட்டு, ஹதிஸ்களின் வழியாக பாதுக்காக்கப்பட்டு இன்றும் எங்கும் நடைமுறைப்படுத்தப்படும் சட்டமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் நபியே உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்துள்ளோம் என்று சொல்லியுள்ளார். இதன் அர்த்தம் குர்ஆன் அல்லாத முறையிலும் நபியவர்களுக்கு செய்திகள் இறைவனிடமிருந்து அருளப்பட்டு இருந்தது என்பதாகும்.
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
(அல்குர்ஆன் : 3:164)
அல்லாஹ்வின் தூதர் எதை கொடுக்கிறாரோ அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், எதை விலக்குகிறாரோ அதை விட்டும் விலகி கொள்ளுங்கள் என்றும் அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்றான்.
(நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடினமானவன்.
(அல்குர்ஆன் : 59:7)
☞It is reported in a narration from Kathir bin Salt that: Zaid (b. Thabit) said: 'I heard the Messenger of Allah say, 'When a married man or woman commit adultery stone them both (to death)', (hearing this) Amr said,
فقال عمرو : لما نزلت أتيت النبي صلى الله عليه وسلم فقلت : أكتبها ؟ فكأنه كره ذلك
'When this was #revealed I came to Prophet and asked if I could write it, he (the Prophet) disliked it.' (Mustadrik Al-Hakim, Hadith 8184. Hakim called it Sahih).
இந்த ஹதிஸில் கல்லெறி சட்டம் அருளப்பட்ட பிறகு குர்ஆனோடு எழுதி வைக்கலாமா என்று கேட்டதற்கு நபி வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதன் அர்த்தம் குர்ஆன் அல்லாத மற்றொரு வெளிப்பாடு ஹதிஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.
✍இந்த சட்டம் நபியின் கட்டளைப்படி ஹதிஸ்களின் வழியாக பாதுக்காக்கப்பட்டு வரும் ஒன்றாகும்.
நபியின் காலத்தில் வேதம் அல்லாத நபியின் செய்திகளும் (ஹதிஸ்கள்) மனனம் செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரம் இதோ....
2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!' என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!'
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்
👉 And Abu Muhammad said:
لِأَنَّ آيَةَ الرَّجْمِ إذْ نَزَلَتْ حُفِظَتْ وَعُرِفَتْ وَعَمِلَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَّا أَنَّهُ لَمْ يَكْتُبْهَا نُسَّاخُ الْقُرْآنِ فِي الْمُصْحَفِ وَلَا أَثْبَتُوا لَفْظَهَا فِي الْقُرْآنِ وَقَدْ سَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ذَلِكَ كَمَا أَوْرَدْنَا فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَى ذَلِكَ
When the verse of stoning was revealed, it was memorized, acknowledged, and it was acted upon by the Messenger of Allah, peace and blessings be upon him, except that he did not have it written in the copies of the Quran, nor did he affirm its wording in the Quran. Umar ibn Al-Khattab asked about that, as we have related, and the Prophet did not obligate him to do it.
தமிழாக்கம்: கல்லெறிதல் வசனம் அருளப்பட்டதும், அது மனப்பாடம் செய்யப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டது, மேலும் அது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. தவிர, அது குர்ஆன் பிரதிகளில் எழுதப்படவில்லை, குர்ஆனில் அதன் வார்த்தைகளை அவர் உறுதிப்படுத்தவுமில்லை. நாங்கள் கேட்டது போல உமர் இப்னு அல்-கத்தாப் அதைப் பற்றிக் கேட்டார், அதைச் செய்ய நபிகள் நாயகம் செய்ய அவரைக் கடமையாக்கவில்லை.
Source: al-Muḥallá 12/177
✍️ கல்லெறிதல் தண்டனை சட்டம் நபிக்கு அருளப்பட்ட பொழுது அதை சஹாபாக்கள் மனனம் செய்து ஓதிவந்தார்கள் என்றும், பிறகு உமர் ரலி உட்பட மற்ற சகாபாக்கள் அதை குர்ஆனில் எழுதி வைக்கலாமா என்று நபியிடம் கேட்டதற்கு, வேண்டாம் என்று நபி தடுத்ததாகவும், மேற்கண்ட ஹதீஸ் மிகத் தெளிவாக கூறுகிறது. மேற்கண்ட இவ்விசயத்தை குறித்து ஸஹீஹ் முஸ்லிம் 3492 ஹதீஸில் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே உமர் ரலி அவர்களும் தனது குர்ஆனில் கல்லெறி தண்டனை சட்டத்தை குறித்து எழுதி வைக்கவில்லை என்பதையும் மேலும் சில ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் திருமணமான விபச்சாரம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு கல்லெறி தண்டனை சட்டம் முகமது நபிக்கு அருளப்பட்டது என்றும், அதை நபியின் தோழர்கள் மனனம் செய்து ஓதி வந்தார்கள் என்பதையும், பிறகு அதன் ஓதல் முறை ரத்து செய்யப்பட்டு, சட்டம் மட்டும் நடைமுறையில் இருந்து வந்தது என்பதையும் இது சம்பந்தமாக வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் மிகத் தெளிவாக உறுதி செய்கின்றன. நபியின் காலத்திலும், முதல் கலீபா அபூபக்கர் ரலி அவர்கள் ஆட்சி காலத்திலும், அதே போன்று இரண்டாவது கலீபாவான உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்திலும் கல்லெறி தண்டனை சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது என்பதை உமர் ரலி அவர்கள் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.
👉 Umar ibn Al-Khattab, may Allah be pleased with him, said:
رَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَمَ أَبُو بَكْرٍ وَرَجَمْتُ وَلَوْلَا أَنِّي أَكْرَهُ أَنْ أَزِيدَ فِي كِتَابِ اللَّهِ لَكَتَبْتُهُ فِي الْمُصْحَفِ فَإِنِّي قَدْ خَشِيتُ أَنْ تَجِيءَ أَقْوَامٌ فَلَا يَجِدُونَهُ فِي كِتَابِ اللَّهِ فَيَكْفُرُونَ بِهِ
The Messenger of Allah, peace and blessings be upon him, stoned (the married adulterer), Abu Bakr stoned, and I stone. Were it not that I hate adding to the book of Allah, I would have written it in the copy of the Quran. I fear that people will come and not find it in the book of Allah, so they will disbelieve in it.
தமிழாக்கம்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது, (திருமணமான விபச்சாரி) கல்லெறிந்தார். அபூபக்கர்(ரலி) அவர்களும் கல்லெறிந்தார். நானும் கல்லெறிந்தேன். அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்ப்பதை நான் வெறுக்கவில்லை என்றால், நான் அதை குர்ஆன் பிரதியில் எழுதியிருப்பேன். மக்கள் வந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் அ(ச்சட்டத்)தை காணவில்லை என்பதால் அவர்கள் அதை நம்ப மறுத்துவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.
Source: Sunan al-Tirmidhī 1431, Grade: Sahih
✍️ மேற்கண்ட ஹதீஸில் திருமணமான விபச்சாரம் செய்த நபர்களுக்கு கல்லெறிந்து கொலை செய்யப்படும் தண்டனை சட்டம் முஹம்மது நபி அவர்கள், அபூபக்கர் ரலி அவர்கள் மற்றும் உமர் அலி அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது என்றும், அச்சட்டம் அல்குர்ஆனில் இல்லை என்பதால் எங்கே முஸ்லிம்கள் அச்சட்டத்தை மறுத்து விடுவார்களோ என்று உமர் ரலி அஞ்சினார்கள் என்பதையும், அல்லாஹ்வின் வேதத்தில் வேறு எதையும் சேர்க்க தான் விரும்பவில்லை என்பதால் அச்சட்டத்தை அல்குர்ஆனில் எழுதிவைக்கவில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸில் உமர் அலி அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்னொரு அறிவிப்பில்:
👉 In another narration, Umar said:
وَلَوْلَا أَنْ يَقُولَ قَائِلُونَ زَادَ عُمَرُ فِي كِتَابِ اللَّهِ مَا لَيْسَ مِنْهُ لَكَتَبْتُهُ فِي نَاحِيَةٍ مِنْ الْمُصْحَفِ
Were it not that some would say Umar has added to the book of Allah what does not belong in it, I would have written it in the margins of the Quran.
தமிழாக்கம்: உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் இல்லாததைச் சேர்த்துள்ளார் என்று சிலர் சொல்வார்கள் என இல்லாமல் இருந்திருந்தால், நான் அதை குர்ஆனின் ஓரங்களில் எழுதியிருப்பேன்.
Source: Musnad Aḥmad 157, Grade: Sahih
✍️ அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாததை உமர் சேர்த்து விட்டார் என்று எவரும் சொல்ல மாட்டார்கள் என்று நான் நினைத்திருந்தால் அல்லாஹ்வின் வேதத்தின் ஓரக் குறிப்புகளில் அச்சட்டத்தை எழுதி வைத்திருப்பேன் என்று உமர் ரலி கூறுகிறார். இதன்மூலம் இச்சட்டம் ஒதல் முறை ரத்து செய்யப்பட்ட, அதே சமயம் நடைமுறையில் இருக்கின்ற சட்டம் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
👉 இது குறித்து அல்-பைஹகி கூறுகிறார்:
فِي هَذَا وَمَا قَبْلَهُ دَلالَةٌ عَلَى أَنَّ آيَةَ الرَّجْمِ حُكْمُهَا ثَابِتٌ وَتِلاوَتُهَا مَنْسُوخَةٌ وَهَذَا مِمَّا لا أَعْلَمُ فِيهِ خِلافًا
இதிலும், அதற்கு முன் வந்தவை, கல்லெறியும் வசனத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டு, அதன் ஓதுதல் ரத்து செய்யப்பட்டதற்கான சான்றுகளாகும். எந்த கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆதாரம்: அல்-சுனன் அல்-குப்ரா 15553
திருமணமான விபச்சாரம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை சட்டம் முகமது நபிக்கு அருளப்பட்டது என்றும், அதை நபியின் தோழர்கள் மனனம் செய்து ஓதி வந்தார்கள் என்பதையும், பிறகு அதன் ஓதல் முறை ரத்து செய்யப்பட்டு, சட்டம் மட்டும் நடைமுறையில் இருந்து வந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
#ரஜ்ம்,
கருத்துகள்
கருத்துரையிடுக