பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட மத்தேயு 18:11
பைபிளில் இடைச்செருகல் செய்யப்பட்ட மத்தேயு 18:11
மத்தேயு 18:11 புதிய சர்வதேச பதிப்பு (NIV), புதிய நூற்றாண்டு பதிப்பு (NCV), தற்கால ஆங்கில பதிப்பு (CEV) மற்றும் புதிய வாழ்க்கை மொழிபெயர்ப்பு (NLT) போன்ற பல தற்போதைய பைபிள்களில் காணப்படவில்லை. அந்த வசனம் பின்வருமாறு:
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.(மத்தேயு 18:11)
இருப்பினும், இந்த வசனம் நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு, நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு மற்றும் கிங் ஜேம்ஸ் ஆகியவற்றில் உள்ளது.
மத்தேயு 18:11 ஏன் பல பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது?
ஆரம்பகால கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் காணப்படாததால், சில பைபிள்களில் இந்த வசனம் நீக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்வது அவசியம். "ஆட்டோகிராஃப்கள்" என்று அழைக்கப்படும் இந்த அசல் ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகல்களை உருவாக்கும் செயல்பாட்டில், சில நேரங்களில் பிழைகள் ஏற்பட்டும். சில நேரங்களில் வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டும், சில வார்த்தைகள் விடுபட்டும், இன்னும் சில சந்தர்ப்பங்களில், சில நகல் எழுதுபவர்கள் சில வார்த்தைகளைச் இடைச்செருகல் செய்தும் உள்ளனர். இன்று கிறிஸ்தவர்கள் கைவசம் புதிய ஏற்பாட்டின் 5,800-க்கும் மேற்பட்ட கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. கூடுதலாக, புதிய ஏற்பாட்டின் மற்ற கையெழுத்துப் பிரதிகள் மொத்தம் 24,633 என கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. பைபிளில் உள்ள வசனங்களை காட்டிலும் அதன் கையெழுத்துப் பிரதிகளில் இருக்கின்ற முரண்பாடுகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தேயு 18:11 கீழ்க்கண்ட பழமையான மற்றும் சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் காணப்படவில்லை:
B – Vatcanus
א – Sinaitius
L – Regius
Θ – Koridethi
1 – Basle
1582 – Mt. Athos
1346 – Jerusalem
33 – Paris[1]
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
The Expositor’s Bible Commentary, edited by Frank Gaebelein, says that verse 11 was,
Omitted in the earliest witnesses of the Alexandria, pre-Caesarean, Egyptian, and Antiochene text types.
ஃபிராங்க் கெய்பலின் திருத்திய எக்ஸ்போசிட்டர்ஸ் பைபிள் விளக்கவுரை:
ஆரம்பகால சாட்சிகளான அலெக்ஸாண்டிரியா, சிசேரியன் காலத்திற்கு முந்தைய, எகிப்திய மற்றும் அந்தியோசீன் உரைகளில் விடுப்பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
In William Henrickson’s commentary on Matthew he comments,
The words, “For the Son of Man is coming to save that which was lost,” c.f. verse 11 in A.V., are lacking in the best manuscripts and were probably inserted from Luke 19:10.
மத்தேயு 18:11 பற்றிய வில்லியம் ஹென்ரிக்சனின் பைபிள் விளக்கவுரை:
"மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்" என்ற வார்த்தைகள் சிறந்த கையெழுத்துப் பிரதிகள் எதிலும் இல்லாததால், இது லூக்கா 19:10 இலிருந்து செருகப்பட்டிருக்கலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
R. C. H. Lenski, the Lutheran scholar, adds this about verse 11,
The textual evidence against this verse is so strong that we must cancel it from Matthew’s account. It was probably inserted from Luke 19:10.
ஆர்.சி.எச்.லென்ஸ்கி, லூத்தரன் அறிஞர், வசனம் 11,
இந்த வசனத்திற்கு எதிரான உரை விமர்சன ஆதாரம் மிகவும் வலுவானது, அதை மத்தேயுவின் கணக்கிலிருந்து நாம் ரத்து செய்ய வேண்டும். இது லூக்கா 19:10 இலிருந்து செருகப்பட்டிருக்கலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Pulpit Commentary
Verse 11. - This verse is omitted by the Sinaitic and Vatican Manuscripts, and many modern editors, e.g., Lachmann, Tischendort, Tregelles, Westcott and Hort, and the Revised Version;
பிரசங்க விளக்கவுரை:
வசனம் 11. - இந்த வசனம் சைனாய்டிக் மற்றும் வாடிகன் கையெழுத்துப் பிரதிகள், திருத்தப்பட்ட பதிப்பு மற்றும் லாச்மேன், டிசென்டோர்ட், ட்ரெகெல்ஸ், வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் மற்றும் போன்ற பல நவீன ஆசிரியர்களால் தவிர்க்கப்பட்டுள்ளது;
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
#கறைப்படிந்த_பைபிள்
கருத்துகள்
கருத்துரையிடுக