முதுகு தண்டிற்கும் நெஞ்செலும்புக்கும் மத்தியிலிருந்து இந்திரியம் உருவாகுமா? அல்லது வெளியேறுமா?.
முதுகு தண்டிற்கும் நெஞ்செலும்புக்கும் மத்தியிலிருந்து இந்திரியம் உருவாகுமா? அல்லது வெளியேறுமா?.
பரவலாக குர்ஆனின் மீது அறிவியல் பிழையாக அநேகர் சுட்டிக்காட்டக்கூடிய ஒரே ஒரு இடமாக இவ் வசனங்கள் அமைந்திருக்கின்றன.
ஒரே தேவனின் வார்த்தைகளில் புதைந்துள்ள ஆழமான அறிவியலை இவ் வசனங்கள் பேசுவதை அநேகர் புரிந்து கொள்வதில்லை. இவ் வசனங்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகவும், இவ் வசனங்களில் புதைந்து கிடக்கும் ஆழமான அறிவியல் செய்திகளை எடுத்து முன்னிறுத்துவதற்காகவும் இப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது.
(இப்பதிவில் பேசப்படும் அறிவியல் மற்றும் அரபு சொற்களின் பொருள்களுக்கான ஆதாரங்களை புகைப்படங்களாகவும் , வீடியோவாகவும் மற்றும் லிங்காகவும் இவ் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இவைகள் இவ் வசனங்களை இலகுவாக புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.)
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ
குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.
(அல்குர்ஆன் : 86:6)
يَّخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِ
அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
(அல்குர்ஆன் : 86:7)
சொற்களுக்கான பொருள்கள்.
அ) مَّآءٍ دَافِقٍۙ- குதித்து வெளிப்படும் நீர்
ஆ) يَّخْرُجُ- வெளிப்படுகிறது
இ)الصُّلْبِ - முதுகுதண்டு ( இச் சொல் குர்ஆனில் 4:23 இல் முதுகு தண்டுக்கு பயன்படுத்தப்பட்ட اَصْلَابِكُمْۙ என்ற பன்மை சொல்லின் ஒருமை வார்த்தையாகும். (இவ் வசனம் இறுதியில் தரப்பட்டுள்ளது))
மேலும் இச் சொல்லுக்கு
1. Dictionary of Edward Lane
2. Concordance of Sublime Quran
போன்ற நூற்கள் الصُّلْبِ - முதுகுதண்டு என பொருள் கொடுக்கின்றன.
ஈ)التَّرَآٮِٕبِ- நெஞ்சு எலும்பு( குர்ஆனில் ஒரே ஒரு இடமாகிய இவ் வசனத்தில் மாத்திரமே இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் நடைமுறையில் மிக குறைவான இடங்களிலும் மிக மிக அரிதான அரபு இலக்கிய நூற்களில் இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது)
மேலும் இச் சொல்லுக்கு
1. Dictionary of Edward Lane: இல் التَّرَآٮِٕبِ என்ற சொல்லுக்கு ஆண் பெண் இரு பாலருக்கும் காணப்படும் நெஞ்சு எழும்பு என சொல்லப்பட்டாலும் அதிகமாக பெண்ணின் நெஞ்சு எழும்பு என்றே பொருள் கொடுக்கப்படுகிறது.
2. Dictionary of H.A. Wahr: التَّرَآٮِٕبِ என்ற சொல்லுக்கு நெஞ்சு என்றே மொழி பெயர்த்துள்ளது.
3.Dictionary and Glocary of Quran by JA.Penrice: உம் இச் சொல்லுக்கு நெஞ்சு எழும்பு என்று மொழி பெயர்த்துள்ளது.
4.Al-Mawrid- இச் சொல்லுக்கு நெஞ்சு , மார்பகம் , விலா எலும்பு (Rib), மார்பு பகுதி (Thorax) என்ற பொருள்கள் கொடுக்கப்படுகின்றன.
5.Dictionaru of Holy Quran by AM.Omar- التَّرَآٮِٕبِ என்றால் நெஞ்சு அல்லது நெஞ்சு எலும்பு என பொருள் கொள்ளப்படுகிறது.
மேற்பதிவிட்ட குர்ஆன் வசனத்தின் சொற்களின் பொருள்களை அவதானிக்கும் போது விந்து அணு நெஞ்சுக்கும் முதுகுதண்டுக்கும் இடையில் இருந்து உருவாக்கப்படுகிறது என்று கூறவில்லை . விந்து என்ற பதமோ, உருவாக்கம் என்ற பதமோ அங்கு இல்லாமல் குதித்து வெளியேரும் நீர் முதுகு தண்டிற்கும் நெஞ்சு எலும்புக்கும் இடைப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வருகிறது என்று மிக நுணுக்கமாக பதிவுசெய்கிறது .
இங்கு குதித்து வெளியேறும் நீர் என்பது சுக்கிலம் (semen) ஆகும் , விந்து மட்டுமல்லாது அதனை உள்ளடக்கிய திரவமும் தவிர தனியாக விந்து நீர்(sperm) மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சுக்கிலம் (semen) இல் citric acid, free amino acids, fructose, enzymes, phosphorylcholine, prostaglandin, potassium, and zinc. போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன.
இவ் சுக்கில நீரில் 46%-80% திரவம் விந்து பையில் (seminal vesicles) இருந்து வருபவை , 13%-33% திரவம் புரோஸ்டேட் சுரப்பியில்(prostate gland) இருந்து வருபவை.5% திரவம் விரை முனைப்பை (epididymis) இலிருந்து வருபவை, மேலும் 2%-5% திரவம் சிறுநீர்க்குழாய் (Bulbourethral) மற்றும் சிறுநீர்க்குழாய் சுரப்பிகள் (urethral glands) இருந்து வருபவை. இவை அனைத்தும் சேர்ந்தே இச்சை நீராக மனிதனுக்கு வெளிப்படுகிறது. மற்றும் இதையே குர்ஆன் குதித்து வெளியறும் நீர் என்கிறது. மாறாக வெறும் விந்தை மட்டும் அல்ல.
(Source: https://www.news-medical.net/health/Semen-Physiology.aspx#:~:text=Semen%20contains%20citric%20acid%2C%20free,prostaglandin%2C%20potassium%2C%20and%20zinc.)
semen க்கும் முதுகு தண்டு மற்றும் நெஞ்சு எலும்பு போன்றவற்றிற்கு இடைப்பட்ட பகுதிக்குமான தொடர்பு யாது என பார்ப்போம்.
முதுகு தண்டு மற்றும் விலா எழும்பு பகுதி மனித உடலின் மிக முக்கிய நரம்புகளை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இந்த பகுதியின் செயற்பாடுகளுக்கும் semen வெளியேறுவதற்கான செயற்பாட்டுக்கும் இன்றியமையாத தொடர்பு உள்ளது என அறிவியல் விபரிக்கிறது.
மனித உடலில் இருந்து சுக்கிலம்(semen) வெளியாகும் தொழிற்பாட்டினை அதாவது விந்து தள்ளுதல் (ejaculation) செயற்பாட்டினை நெஞ்சு எலும்பு மற்றும் முதுகு தண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நரம்புகளே கட்டுப்படுத்துகின்றது.
விளக்கமாக பார்ப்போம் : ஆணுக்கு விந்து தள்ளுதல் (Ejaculation) நடைபெறுவதற்கு விரைப்புத்தன்மை (Erection) நடைபெற வேண்டும். இவ் விரைப்புத்தன்மை (Erection) 2 வகையாக இடம் பெறும்.
கீழே குறியீட்டில் பயன்படுத்தும் எலும்புகள் படத்தில் குறித்து காட்டப்பட்டிருப்பதுடன் T - இனால் குறிப்பிடுவது நெஞ்சு பகுதி (Thoracic) , L - இடுப்பு பகுதி (lumbar), S-திருவென்பு (sacrum) என உயிரியலில் அழைக்கப்படுகிறது.
1. சைக்கோஜெனிக் விறைப்பு (Psychogenic Erection):- இது ஓர் ஆண் பெண்ணை இச்சையோடு பார்ப்பதனால் நிகழும். அவ்வாறு பார்க்கும் போது மூளையானது உணர்வு சமிக
சமிக்ஞைகளை முதுகு தண்டின் T11, T12, L1, L2 பகுதிகளுக்கு கடத்தும் இதன் காரணமாகவே சைக்கோஜெனிக் விறைப்பு (Psychogenic Erection) இடம் பெறும். இது ஒருவகை விரைப்புத்தன்மை ஆகும்.
2. Reflexogenic Erection: இது இரண்டாவது வகை விரைப்புத்தன்மை (Erection) . இவ் வகை விரைப்புத்தன்மை (Erection) மூளையினால் கட்டுப்படுத்தப்படாத S2,S3,S4 பகுதிகளால் முழுவதுமாக கட்டுப்படுத்தக்கூடிய விரைப்புத்தன்மை (Erection) ஆகும். இது ஆண் பெண் உடலுறவின் போது S2-S4 பகுதி ஆணுறுப்பு நரம்புகளை கட்டுப்படுத்தி இவ் வகை விந்து தள்ளுதல் (Ejaculation) நடைபெரும்.
ஆகவே விந்து தள்ளுதல் (Ejaculation) நடைபெறும் படிநிலைகளை அவதானிக்கும் போது இச்சைகள் அதிகரிக்க அதற்கான சமிக்ஞைகள் மூளையில் இருந்து T11-L2 பகுதிகளுக்கு கடத்தப்பட்டு அதன் காரணமாக பிறப்புறுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்க அவை புரோஸ்டேட் பாயம் (Prostatic fluid), சுக்கிலப்பாயம் (Seminal Fluid ) போன்றவற்றை சுரக்கின்றன, இவ் உணர்வு நிலையில் சிறு நீர்ப்பை வாயில் விந்து உள் நுளையாமல் இருக்க மூடிக் கொள்கின்றன. மேலும் உணர்ச்சி பெருக்கில் S2-S4 பகுதிகளின் தூண்டுதலினால் விந்து தள்ளுதல் (Ejaculation) நடைபெறுகின்றன.
இந் நீரையே குர்ஆன் குதித்து வெளியேறும் நீர் என்றும் மேலும் எந்த எந்த நரம்புகள் எந்த எந்த பகுதிகளுக்கு இடையில் , எந்த இரண்டுவகை எலும்புக்கிடையில் காணப்படுகிறது என மிக நுணுக்கமாக பதிவு செய்கிறது.
அதாவது குர் ஆன்
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ
குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.
(அல்குர்ஆன் : 86:6)
يَّخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِ
அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
(அல்குர்ஆன் : 86:7)
என எவ்வெவ் எழும்புகளுக்கிடையில் எவ்வெவ் நரம்புகள் தொடர்புபட்டு சுக்கிலப்பாயத்தை (semen) அதாவது விந்து தள்ளுதல் (Ejaculation) நடைபெறுகிறது என மிக மிக கட்சிதமாக வேதம் 1400 வருடங்களுக்கு முன் ஓர் எழுத வாசிக்க தெரியாத நபரினால் பதிவு செய்திருப்பது குர்ஆன் இறை வேதம் என நிரூபிக்கிறது.
மேலும் இன்றைய அறிவியலில் முதுகு , நெஞ்சு எலும்பு பாதிப்பு எவ்வாறு விந்து தள்ளுதலை (Ejaculation) பாதிக்கிறது என்பதையும் தெளிவு படுத்தி வருகிறது.
எவ் இறை வசனம் அறிவியலுக்கு முறண் என வாதிடப்பட்டதோ அவ் வசனம் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் ஆய்வாளர்களை பிரமிக்க வைக்கிறது என்பது மகிழ்ச்சி.
நன்றி.
MUM.FARIS (BSc)
Oddamavadi.
குறிப்பு மற்றும் உசாத்துணை.
01. குர்ஆன் 4:23 வசனம்.
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ
(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:23)
02.சுக்கிலம் (semen) மற்றும் விந்து நீர்(sperm) இடையிலான வித்தியாசம்.
https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/de-stress/the-difference-between-semen-and-sperm-and-more/photostory/71081656.cms?picid=71081919
03.அரபு சொற்களான التَّرَآٮِٕبِ,الصُّلْبِ போன்ற சொல்லுக்கான பொருள். புகைப்படமாகவும் தரப்பட்டுள்ளது.
http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A2002.02.0017%3Aroot%3Dtrb%3Aentry%3DtaraAy%5Eibu
04.சுக்கிலம் கொண்டுள்ள கலவைகள்.
https://www.news-medical.net/health/Semen-Physiology.aspx#:~:text=Semen%20contains%20citric%20acid%2C%20free,prostaglandin%2C%20potassium%2C%20and%20zinc
(ஏனையவை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டுள்ளேன்.)
கருத்துகள்
கருத்துரையிடுக