அல்லாஹ் மர்ம உறுப்பில் ஊதினானா?


கிறிஸ்துவ சகோதர்கள் "மரியம் (அலை) அவர்களுடைய மறைவான பகுதியில் ஜிப்ரீல் (அலை) மூலமாக  அல்லாஹ் தனது  ஆன்மாவை ஊதினான்" என தவறாக புரிந்து கொண்டமைக்கான விளக்கத்தினை இப்பதிவு பேச இருக்கிறது.








"அல்லாஹ் மரியம் (அலை) அவர்களின் பெண் உறுப்பில்  ஜிப்ரீல் மூலமாக ஆன்மாவை ஊதியதாகத்தான்" குர்ஆன் கூறுகிறது என்றும், ஆனால் முஸ்லிம்கள் இதை மறைத்து உண்மைக்கு புறம்பாக பலவாறு மொழி பெயர்க்கின்றனர் என கிறிஸ்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


கிறிஸ்தவர்களால் கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தில் எந்த குறைபாடும் காண முடியாவிட்டாலும் பைபிளில் உளள ஆபாச செய்திகளை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டும் சமயத்தில் தங்களது வேதத்திலுள்ள ஆபாசச் செய்திகளை கொண்டு இருப்பது உண்மையான வேதத்தன்மையை இழக்க செய்கிறது என்பதை உணர்ந்ததனால், தங்கள் வேதத்தில் உள்ள குறைபாட்டை மறைப்பதற்கு குர்ஆனிலும் ஆபாசம் உள்ளது என காட்ட முயல்கின்றர்.


ஆகவே குர்ஆனை தவறாக மொழி பெயர்த்து  திரித்து தங்களுக்கு உதவியாக பன்படுத்தி கொள்கின்றனர். அல்குர்ஆன் 21:91 மற்றும் 66:12 வசனத்தை மேற்கோள் காட்டி அல்லாஹ் மர்யம் அவர்களின் பிறப்புறுப்பில் தனது ஆன்மாவில் இருந்து ஊதியதாக கொச்சைப்படுத்தி முயற்சிக்கின்றனர். அதுக்குறித்து இனி காண்போம்.



அல்குர்ஆன் 21:91 மற்றும் 66:12 வசனத்தில் பர்ஜ் فَرْجَا என்ற இச்சொல்லை மனிதனுடன் தொடர்புபடுத்தும் போது மனிதனின் முன், பின் பகுதியின் அவ்ரத் ( மறைக்க வேண்டிய பகுதி) என பொருள் கொள்ளலாம். மேலும் பிறப்புறுப்பையும் இச்சொல் குறிக்கும். மொத்தமாக சுருங்க சொல்வதாயின் இச் சொல் மனிதனின் மறைவான பகுதியை குறிக்கும். 



فَرْجَ எனும் சொல் நேரடியாக பிறப்புறுப்பை குறிக்க பயன் படுத்தப்பட்டாலும் குர்ஆன் வசனத்தில் ஆணோ அல்லது பெண்ணோ தவறான முறையில் உடலுறவு கொள்வதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதை குறிக்கப் பொதுவாக இச் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இங்கு கற்பு என்னும் அர்த்தத்தையே இச்சொல் குறிக்கும். எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தப்படும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் வேறுபடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்காரணமாக அல்-குர்ஆன் 66 :12 மற்றும் 21:91 வசனத்தில் உள்ள فَرْجَهَا எனும் சொல் அவளது கற்பு என்னும் அர்த்தத்திலேயே வரும்.






மேலும் فَرْجَ எனும் சொல்லுக்கு கற்பு எனும் அர்த்தமும் உண்டு என்பதற்கான ஆதாரம்:





மேலும் " اَحْصَنَتْ فَرْجَهَا" என்றால் மறைவான பகுதியை பாதுகாத்து கொண்டாள் என்று பொருள். அதாவது கற்பை பாதுகாத்து கொண்டாள் என பொருள்படுகிறது. எனவே وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا என்ற வாசகத்தை மொழி பெயர்க்கும் போது "இன்னும் அவள்(மர்யம்) தனது கற்பை பாதுகாத்து கொண்டாள்" என குர்ஆன் கூறுகிறது.


 அல்குர்ஆன் 21:91இல் فَرْجَهَا ]  فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا فَـنَفَخْنَا  ( நாம் ஊதினோம்)  فِيْهَا  (அவளில் ) مِنْ رُّوْحِنَا (தனது உயிரிலிருந்து )] அதாவது நாம் தமது உயிரிலிருந்து அவளில் ஊதினோம் என்கிறது. இவ்வசனத்தில் கிறிஸ்தவர்கள் சொல்வது போல் மறைவான பகுதியில் உயிரை ஊதியதாக எங்கும் வரவில்லை. மாறாக  "அவளின் மீது ஊதியதாகவே" குர்ஆன் பேசுகிறது. மேலும் புரிந்து கொள்ள (فَرْجَ ) பர்ஜ்   என்ற சொல் மனிதர்களின் மறைவான பகுதியை குறிக்கின்ற போதும் அரபு இலக்கண ரீதியில் பர்ஜ் فَرْجَ என்பது ஆண்பால் பெயர்ச்சொல் ஆகும் . அச்சொல்லுடன் "هَا"(ஹா) பெண்பால் பெயர்ச்சொல் விகுதியை சேர்க்கும் போது அவளுடைய மறைவிடம் என பெண்ணுக்குறிய மறைவிடமாக பொருள் பயன்படுத்தப்படுகிறது.


அரபு இலக்கணம் புரியாதவர்கள் அரபு சொல் ரீதியாக ஆண்பால் பெண்பால் பிரிந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆகவே சிறிது தெளிவை கொடுக்க நினைக்கிறேன். அரபியில் சொல் ரீதியில் மேசை என்பது ஆண்பால் சொல் ஆகும். ஆனால் தமிழில் அவ்வாறு மேசைக்கு பாலினம் இல்லை.  மேலும் மனித உடலில் இரண்டு(சோடியான)  உறுப்புக்கள் அனைத்தும் பெண்பாலையும் தனி உறுப்புக்கள் அனைத்தும் ஆண்பாலையும் குறிக்கும் எனலாம். 


உதாரணமாக கண், கை போன்ற சொற்கள் ஆணின் உடலில் இருந்தாலும் சரி பெண்ணின் உடலில் இருந்தாலும் சரி  சொல் ரீதியில் அது பெண்பால் சொல்லாகும். தனி உறுப்பாகிய மூக்கு , கழுத்து போன்ற சொற்கள் பெண்ணிலிருக்கும் உறுப்பை குறிப்பதானாலும் சொல் ரீதியில் அந்த உறுப்புக்களின் பெயர் ஆண்பால் சொல்லாகும். அது போன்று فَرْجَ (பர்ஜ்) என்பது ஆண்பால் சொல்லாகும்.


மேலும் மேற்கண்ட வசனத்தில் இரண்டாம் பகுதியில் வரும்  فِيْهَا (பீஹா )  என்ற சொல்லில் இறுதியில் வரும் "هَا"(ஹா) ஒரு பெண் பால் பிரதி பெயர் சொல்லாகும் (அரபு இலக்கணத்தில் இதனை லமிர் என்று அழைப்பர்). ஆகவே فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا என்பது அவளின் மீது நாம் எமது உயிரை ஊதினோம் என்றே குறிக்கும் .  மாறாக மறைவான பகுதியில் எமது உயிரை ஊதினோம் என பொருள் கொள்ள முடியாது. அப்படி பொருள் கொள்ள வேண்டுமாயின் மேற்பதிவிட்ட வசனத்தில் அரபு இலக்கண ரீதியில் "பீஹா" என்ற சொல் வந்திருக்கும்  இடத்தில் "பீஹி" என ஆண்பால் பெயர்ச்சொல் வர வேண்டும். காரணம் பர்ஜ் எனும் சொல் ஆண்பால் சொல்லாகும். அதனை குறிக்க "பீஹி" என்றே அரபி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.


அத்தோடு இவ் வசனம் முழுக்க பயன்படுத்தப்படும் "هَا"(ஹா)  விகுதியை உடைய அனைத்து  சொற்களும் மர்யம் (அலை) அவர்களையே (அவ் பெண்ணையே) குறிக்கும்.  (فَرْجَهَا,فِيْهَا,جَعَلْنٰهَا, وَابْنَهَاۤ).



அதே சமயம் அல்குர்ஆன் 66:12 வது வசனத்தில் ஃபீஹீ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஃபர்ஜஹாவில் ரூஹ் ஊதப்பட்டதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு சொல்லப்பட்டதை கிறிஸ்தவர்கள் திரித்து மரியம் தனது ஆடையை கலைந்து இருக்கும் நிலையில் அவரது பிறப்புறுப்பில் வானவர் வாயை வைத்து ஊதியது போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இது அவர்களின் கட்டுக்கதையை அன்றி வேறில்லை. இஸ்லாத்தை பொறுத்தவரையில் ஆடை கலைந்து இருக்கும் நிலையில் வானவர்கள் வர மாட்டார்கள் என்பது ஆதாரபூர்வமாக செய்தியாகும். அப்படி இருக்கும் பொழுது வந்த வானவர் மரியமின் ஆடை கலந்து இருக்கும் நிலையில் ரூஹை ஊதியிருக்க மாட்டார் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ என்னைக் கண்டபோது (வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று உனக்குத் தெரியாமல் மறைவாக அவரிடம் சென்றேன். (பொதுவாக) நீ உனது ஆடையை கழற்றிவைத்துவிட்ட நேரங்களில் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வரமாட்டார்- (எனவே தான், மறைவாக நின்று அவர் என்னை அழைத்தார்.) 

ஸஹீஹ் முஸ்லிம் : 1774. 


ஆடை களைந்து இருக்கும் நிலையில் வானவர்கள் வர மாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் கிறிஸ்தவர்களின் பொய்யான வாதம் முறியடிக்கப்படுகிறது. மேலும் ஒரு வாதத்திற்கு பிறப்புறுப்பின் மூலமாக  ரூஹ் ஊதப்பட்டது என்று எடுத்து கொண்டாலும் அது ஆபாசத்துக்கு உரிய செயல் அல்ல. இதை ஆபாசமாக சித்தரிக்க முயல்வது அவர்களின் இழிவான எண்ணமே தவிர வேறு ஒன்றும் இல்லை. பெண்ணின் பிறப்புறுப்பின் மூலமாக வந்த இயேசுவை தெய்வமாக வணங்கும் அவர்கள் இவ்வாறு பேசுவது தங்களது நம்பிக்கைக்கு எதிரான ஒன்றாகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகளின் பிறப்புறுப்பு எந்த ஒரு தாய்க்கும் ஆபாசமாக தெரிவதில்லை என்கிற அடிப்படை ஞானம் கூட கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அப்படி இருக்கும் பொழுது நம் அனைவருக்கும் கண் காது மூக்கு வாய் கை கால் மற்றும் பிறப்புறுப்பு போன்றவற்றை சரியாக படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முன் பிறப்புறுப்பு என்பது ஆபாசமான ஒன்று இல்லை என்கிற அடிப்படை ஞானத்தை கிறிஸ்தவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.



மேலே குறிப்பிட்டு இருப்பது போல் فَرْجَ எனும் சொல் நேரடியாக பிறப்புறுப்பை குறிக்க பயன் படுத்தப்பட்டாலும் குர்ஆன் வசனத்தில் ஆணோ அல்லது பெண்ணோ தவறான முறையில் உடலுறவு கொள்வதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதை குறிக்கப் பொதுவாக இச் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இங்கு கற்பு என்னும் அர்த்தத்தையே இச்சொல் குறிக்கும். எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தப்படும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் வேறுபடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்காரணமாக அல்-குர்ஆன் 66 :12 வசனத்தில் உள்ள فَرْجَهَا எனும் சொல் அவளது கற்பு என்னும் அர்த்தத்திலேயே வரும். ஆகவே அல்குர்ஆன் 66:12 வசனத்தில் பீஹீ எனும் சொல் கற்பில் உயிர் ஊதப்பட்டது என்று பொதுவாக சொல்வதை புரிந்து கொள்ளலாம். இங்கு கற்பு என்று பொதுவாக தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அதை விடுத்து பிறப்புறுப்பு என்று அர்த்தம் கொள்ளலாகாது.



வானவர் மனித உருவில் வந்தது மர்யமுக்கு கருவுறும் தகவலை சொல்வதற்கே. பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக விந்தை செலுத்தி கறுவறச் செய்ய வேண்டிய அவசியம் மனிதர்களுக்கு இருக்கலாம். வானவர்களுக்கு அத்தகைய அவசியம் இல்லையே. நேரடியாக கருப்பையிலேயே உயிரை ஊதும் ஆற்றல் கொண்டவர்கள் தான் வானவர்கள் என்ற அடிப்படை ஞானம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.



5145. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாக சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 46. (தலை)விதி


மேற்கண்ட ஹதிஸ் அட்டை போன்று இருக்கும் கருப்பையின் மீது தான் வானவர்கள் உயிரை ஊதுகிறார்கள் என்று மிக தெளிவாக கூறுகிறது. இந்த ஹதிஸில் பிறப்புறுப்பில் ஊதுகிறார்கள் என்று இல்லை. மாறாக கருவில் ஊதுகிறார்கள் என்பது தான் இஸ்லாம் கூறும் செய்தியாக இருக்கிறது. அதேசமயம் அல்குர்ஆனில் மர்யமுடைய கருவில் தான் ரூஹ் ஊதப்பட்டது என்று நேரடி அர்த்தம் தரும் வகையில் வசனம் பேசவில்லை என்றாலும் கூட, கற்பு என்று பொதுவாக குறிப்பிட்டு அவ்வசனம் பேசி இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் மர்யம் அவர்களை எந்த ஒரு ஆணும் தீண்டாத நிலையில் வானவர் ரூஹை ஊதுவதற்கு எவ்வாறு கரு உண்டாகி இருக்க முடியும் என்கிற கேள்விக்கு பதிலையும் குர்ஆன் சொல்கிறது.


(அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்?" என்று கூறினார். (அதற்கு) "இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை "ஆகுக" என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான்.

(அல்குர்ஆன் 3:47)



இதன் மூலம் அரபு இலக்கணப்படியும், மொழி பெயர்ப்பின் படியும் கிறிஸ்தவர்களில் சிலர் சுமத்தும் ஆபாச குற்றச்சாட்டு அபத்தமானது என்பது தெளிவாகிறது. மேலும் இதுப்போன்ற ஆபாசக் குற்றச்சாட்டுகளை பைபிள் போன்ற ஆபாச புத்தகத்தை படிப்பதாலேயே இவர்கள் வைக்கின்றனர் என்பது வருத்தத்திற்கு உண்மையாகும்.


பெண் தனது ஆடையை களைந்து வானவர்கள் முன் நிற்பதை எந்த அளவு அசிங்கமோ, அதை காட்டிலும் பயங்கரமான அசிங்கம் பைபிள் போதிக்கும் தேவன் பெண்ணின் ஆடையை தூக்கி அவளது பிறப்புறுப்பை மற்றவர்களுக்கு காட்டுவது என்ற அடிப்படை ஞானம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? உவமையாக பேசுவதில் கூட தனது வக்கிர புத்தியை காட்டும் பைபிள் போதிக்கும் தேவனை நம்பும் கிறிஸ்தவர்கள் வக்கிர புத்தியுடனே இஸ்லாத்தையும் அணுகுவார்கள் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.






இதுக்குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று இனி காண்போம்:


இயேசுவை கருத்தரிக்க மரியாவுடன் உடலுறவு கொண்ட பைபிள் தேவன்:


அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; 👉 பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; 👈 ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

(லூக்கா  1:34-35)


👉 உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் என்றால் மேரியின் மீது படுத்து உறவு கொள்வது ஆகும் 👈


இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே,👉 அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் 👈என்று காணப்பட்டது.

(மத்தேயு 1:18)



இயேசுவின் மாம்ச உடலுக்கு ஒரு தாயும் ஒரு தந்தையும் தேவை.  ஆகையால், இயேசுவின் பிதாவும் தாயும் மாம்சத்தின்படி, கணவன் மற்றும் மனைவியின் திறனில் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும்;  ஆகவே, கன்னி மரியா, பிதாவாகிய தேவனுடைய சட்டபூர்வமான மனைவியாக இருந்திருக்க வேண்டும்: நாங்கள் சட்டபூர்வமான மனைவி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம், ஏனென்றால் 👉 அவர் அவள் மீது நிழலிலிட்டார்(அதாவது உடலுறவு) அல்லது இரட்சகரை சட்டவிரோதமாகப் பெற்றெடுத்தார் 👈 என்று சொல்வது மிக உயர்ந்த அளவில் அவதூறாக இருக்கும்.  

(ஆர்சன் பிராட், தி சீர், பக்கம் 158)



"நம்முடைய ஆவிகளின் பிதாவாகிய தேவன் மாம்சத்தின்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவானார் ... இயேசுவின் மாம்ச உடலுக்கு ஒரு தாயும் ஒரு பிதாவும் தேவைப்பட்டனர். ஆகவே, இயேசுவின் பிதாவும் தாயும்,  மாமிசத்தின் படி, கணவன் மற்றும் மனைவியின் திறனில் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும்; ஆகவே, கன்னி மரியா, பிதாவாகிய கடவுளின் சட்டபூர்வமான மனைவியாக இருக்க வேண்டும் ... கன்னி மரியாவின் மீது 👉 கணவனாக நிழலிலிட(அதாவது உடலுறவு), ஒரு மகனைப் பெற்றெடுக்க, 👈 பிதாவுக்கு சட்டபூர்வமான உரிமை இருந்தது. அவள் வேறொருவருடன் இணைந்திருந்தாலும்; (அச்சட்டம்) ஆண்களையும் பெண்களையும் ஆள அவர் கொடுத்த சட்டம், தன்னை ஆளவோ அல்லது தனது சொந்த நடத்தைக்கு விதிகளை பரிந்துரைக்கவோ அல்ல"

(தி சீர், ஆர்சன் பிராட்  , பக். 158).


பைபிளில் உள்ள  ஆபாசத்தை மறைக்க அல்லது திசை திருப்ப உண்மை வேதத்தை பாெறாமையின் காரணமாக பிழையாக திரிபுபடுத்த எடுத்த முயற்சி வெளிப்படையாக தகர்ந்து வருவது கண் கூடு.


اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا  بَيْنَهُمْ‌ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்.  வேதம் அளிக்கப்பட்டவர்கள் ("இதுதான் உண்மையான வேதம்" என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.

(அல்குர்ஆன் : 3:19)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்