இயேசுவால் இஸ்லாத்தை ஏற்ற பிரபல கால்பந்து வீரர்
✍️டோகோலீஸ் கால்பந்து வீரர் ஷேய் இம்மானுவேல் அடேபயோர் (Emmanuel Adebayor) கிறிஸ்தவத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இதோ:
✍️பெரும்பாலான கிறிஸ்தவர்களை காட்டிலும் முஸ்லிம்கள் இயேசுவை போன்றவர்கள் மற்றும் இயேசுவை உண்மையில் பின்பற்றுபவர்கள் என்பதற்கு என்னிடத்தில் பதிமூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1️⃣. இயேசு ஒரே ஒரு தேவனையே போதித்தார் மற்றும் அவரது போதனையின் படி ஒரே ஒரு தேவனே வணங்கப்பட வேண்டும். முஸ்லிம்களும் இயேசு போதித்த அந்த ஒரே தேவனையே வணங்குகின்றனர்.
உபாகமம் 6:4, மாற்கு 12:29.
அல்குர்ஆன் 4:171.
2️⃣. இறைவனின் கட்டளையின்படி இயேசு பன்றி கறியை சாப்பிடவில்லை. முஸ்லிம்களும் அவ்வாறு பன்றி கறி சாப்பிடுவது இல்லை.
லேவியராகமம் 11:7
அல்குர்ஆன் 6:145.
3️⃣. அஸ்ஸலாமு அலைக்கும் என்று சலாம் சொல்பவராக இயேசு இருந்தார். அவ்வாறே முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
யோவான் 20:21
4️⃣. எந்த காரியத்தையும் செய்வதற்கு முஸ்லிம்களைப் போன்று இயேசுவும் இறைவன் நாடினால் என்று சொல்பவராக இருந்தார்.
மத்தேயு 26:39,42
அல்குர்ஆன் 18:23-24.
5️⃣. பைபிளில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசிகள் இறைவனின் கட்டளையின்படி பிரார்த்தனை செய்வதற்கு முன் முகம் கை கால் கழுபவர்களாக இருந்தனர். முஸ்லீம்களும் அவ்வாறு ஒளு செய்பவர்களாக இருக்கின்றனர்.
யாத்திராகமம் (40:30-31)
அல்குர்ஆன் 5:6
6️⃣. இயேசுவும் இன்னும் பிற தீர்க்கதரிசிகளும் இறைவனுக்கு சிரவணக்கம் செய்பவர்களாக இருந்தனர். முஸ்லிம்களும் அவ்வாறு செய்பவர்களாக இருக்கின்றனர்.
மத்தேயு : 26:39
அல்குர்ஆன் 3:43.
7️⃣. முஸ்லிம்களைப் போன்று இயேசுவும் தாடி வளர்ப்பவராக இருந்தார்.
8️⃣. நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பவராகவும் முந்திய தீர்க்கதரிசிகளை நம்புபவராகவும் இயேசு இருந்தார். அவ்வாறே முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
மத்தேயு 5:17
அல்குர்ஆன் 3:84, and 2:285.
9️⃣. இயேசுவின் தாயார் அன்னை மரியம் அவர்கள் தனது உடல் மற்றும் தலையை மறைப்பவராகக இருந்தார். முஸ்லிம் பெண்களும் அவ்வாறு இருக்கின்றனர்.
1 தீமோத்தேயு 2:9, ஆதியாகமம் 24:64-65, and கொரிந்தியர் 11:6
அல்குர்ஆன் 33:59.
1️⃣0️⃣. இயேசு மற்றும் முந்தைய தீர்க்கதரிசிகள் 40 நாட்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். கடமையான நோன்பாக முப்பது நோன்புகளும் உபரியாக ஆறு நோன்புகளும் முஸ்லீம்களும் நோற்கின்றனர்.
see யாத்திராகமம் 34:28, தானியேல்
10:2-6. 1இராஜாக்கள் 19:8, and மத்தேயு 4:1
அல்குர்ஆன் 2:183
1️⃣1️⃣. ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும் பொழுது வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக என்று கூற இயேசு போதித்துள்ளார். இவ்வாறு முஸ்லிம்களும் வீட்டிற்குள் பிரவேசிக்கும் பொழுதுஇறைவனின் சமாதானம் உண்டாவதாக என்று கூறுகின்றனர்.
லூக்கா 10:5,
அல்குர்ஆன் 24:61.
1️⃣2️⃣. இயேசு விருத்தசேதனம் செய்து இருந்தார். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் விருத்தசேதனம் என்பது 5 ஃபித்ராக்களில் ஒன்று என்பதால் முஸ்லிம்களும் விருத்தசேதனம் செய்கின்றனர்.
லூக்கா 2:21, ஆதியாகமம் 17:13,
அல்குர்ஆன் 24:61
1️⃣3️⃣. இயேசு (ஸல்) அராமிக் மொழி பேசினார், கடவுளை “இலா(Elah)” என்று அழைத்தார், அராமிக் ஒரு பண்டைய, விவிலிய மொழி.
ஹீப்ரு, அரபு, எத்தியோபிக் மற்றும் அக்காடியனின் பண்டைய அசிரிய மற்றும் பாபிலோனிய மொழி ஆகியவற்றை கொண்ட செமிடிக் மொழிகளின் அராமிக்கும் ஒன்றாகும். அராமிக் ”எலா(Elah)” மற்றும் அரபு “அல்லாஹ்” ஆகியவை ஒன்றே.
✍️அராமிக் “எலா” என்பது அரபு “அல்லாஹ்விலிருந்து” உருவானது. இதன் பொருள் “கடவுள்”. அரபியில் "அல்லாஹ்" என்பது சர்வவல்லமையுள்ள இறைவன் என்று பொருள். அவர்களின் உச்சரிப்பில் உள்ள ஒற்றுமையை நீங்கள் எளிதாகக் காணலாம். எனவே இதன் மூலம் அல்லாஹ் இயேசு மற்றும் முஸ்லிம்களின் இறைவன் என்பதையும் மற்றும் எல்லாருக்குமான இறைவன் என்ற முடிவுக்கும் வரலாம்.
✍️ இப்பொழுது சொல்லுங்கள். உண்மையாக இயேசுவை பின்பற்றுபவர் யார்? நிச்சயமாக அது முஸ்லிம்களே. இப்பொழுது இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்களில் நானும் ஒருவன் என்று நம்புகிறேன்.
👉ஆதாரம்:
www.theheraldng.com/13-reasons-why-i-am-a-muslim-emmanuel-adebayor/
கருத்துகள்
கருத்துரையிடுக