திரித்துவம் என்பது யூத ஏகத்துவவாதம் மற்றும் பேகன் பல தெய்வத்தின் ஒருங்கிணைப்பு
⭐ஆரம்பகால கிறிஸ்தவம்⭐
✍️கிறிஸ்தவத்தின் திரித்துவக் கொள்கை என்பது எந்த ஒரு தீர்க்கதரிசியும் போதிக்காத சீர்கெட்ட கொள்கை என்று ஆரம்ப காலம் முதல் முஸ்லிம்கள் சொல்லி வருகின்றனர். இது நிச்சயமான உண்மையாகும். திரித்துவம் என்பது சிலை வணக்கத்தை பின்பற்றும் மதங்களின் கொள்கை என்பதற்கு வரலாறு முழுவதிலும் தெளிவான சாட்சியம் இருக்கிறது. உலகம் முழுவதிலும் திரித்துவம் எனும் கொள்கையே சிலை வணக்கத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருந்திருக்கிறது.
👉பாபிலோன்: நிம்ரோட், தம்முஸ் மற்றும் சமிராமிஸ்
👉எகிப்து: ஒசைரிஸ், ஹோரஸ் மற்றும் ஐசிஸ்
👉கிரீஸ்: ஜீயஸ், அப்பல்லோ மற்றும் அதென்னா
👉இந்தியா: பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்
👉ரோம்: ஜூபிடர் மார்ஸ் மற்றும் வீனஸ்
✍️உலகம் முழுவதிலுமுள்ள சிலை வணக்கத்தின் திரித்துவ பிரதிபலிப்பு கிறிஸ்துவத்திலும் எதிரொலிக்கிறது.
👉இதன் காரணமாக பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எனும் கடவுள் என்று திரித்துவக் கொள்கை கிறிஸ்துவத்திலும் புகுந்து விட்டது.
✍️ஆரம்ப காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரையிலும் எந்த ஒரு தீர்க்கதரிசியும் திரித்துவம் என்னும் கொள்கையை போதிக்கவில்லை. பைபிளின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கு தேடி பார்த்தாலும் இதற்கு ஆதாரமாக நேரடியாக எந்த ஒரு வசனமும் இருக்கவில்லை. வேத புரட்டல் காரர்களான கிறிஸ்தவர்கள் பைபிள் வசனத்தை திரித்து விளக்கம் கொடுத்தாலே தவிர திரித்துவத்தை பைபிளில் இருந்து ஒருபோதும் காட்டவே முடியாது. எந்த ஒரு தீர்க்கதரிசியும் திரித்துவத்தை போதிக்கவில்லை என்பதற்கு யூதர்கள் வரலாறு முழு சாட்சியமாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதலே தங்களது வரலாற்றை பதிவு செய்திருக்கும் யூதர்கள் எந்த ஒரு இடத்திலும் யூத இன மக்கள் திரித்துவதை அறிந்து இருந்ததாக எங்கும் பதிவு செய்யவில்லை. ஏனெனில் திரித்துவம் என்பது இயேசுவின் காலத்திற்குப் பிறகு கிறிஸ்தவர்களால் புகுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதால், இஸ்ரவேலர்கள் இயேசுவின் காலம் வரையிலும் திரித்துவத்தை அறிந்திருக்கவில்லை.
✍️கிறிஸ்தவத்தின் ஆரம்பகால வரலாற்றை நன்கு ஆய்வு செய்தால் திரித்துவம் என்பது கிறிஸ்தவர்களால் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை அறியலாம். ஆரம்பகால சர்ச்சுகளின் வரலாற்றையும், சர்ச் பிதாக்கள் எழுதிய கடிதங்களையும் பாதுகாத்து வைத்திருக்கும் கிறிஸ்துவ உலகமே திரித்துவம் என்பது கிறிஸ்தவர்களால் புகுத்தப்பட்ட ஒன்று என்பதற்கும் ஆதாரமாக திகழ்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இதை படிக்க முடியாத காரணத்தினால் திரித்துவத்தின் உண்மைத்தன்மையை அவர்கள் அறியாமல் அதனை நம்பி தங்களைத் தாங்களே அழிவின் பாதையில் உட்படுத்திக் கொள்கின்றனர்.
🖋️நைசாவின் கிரிகோரி, கிரேட் கபடோசியர்களின்(great Cappadocians) கடைசி மற்றும் சிசேரியாவின் பாசிலின்(Basil of Caesarea) சகோதரர், கிபி372 இல் நைசாவின் பிஷப்பாக இருந்தவர். கிரிகோரி கூறுகையில், "ஆர்த்தடாக்ஸ்" கோட்பாடு யூத ஏகத்துவவாதம் மற்றும் பேகன் பலதெய்வத்தின் ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு என்று கூறுகிறார்: மேலும் இவர் திரித்துவத்தை தனது கொள்கையாக ஏற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
📝இந்த இரண்டு கருத்தாக்கங்களுக்கிடையில் உண்மை கடந்து செல்கிறது. இது ஒவ்வொரு மதங்களுக்கு எதிரான கொள்கையையும் அழிக்கிறது. இன்னும் ஒவ்வொன்றிலிருந்தும் பயனுள்ளதை ஏற்றுக்கொள்கிறது. வார்த்தையை ஏற்றுக்கொள்வதன் மூலமும், ஆவியின் நம்பிக்கையினாலும் யூதர்களின் மறுக்க முடியாத கொள்கை அழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கிரேக்க பள்ளியின் பிழையான பலத்தெய்வ கோட்பாடானது இயற்கையான ஏகத்துவத்தால் மறைந்து போகிறது.
➖ St. Gregory of Nyssa's The Great Catechism (c. AD 385) Chapter III
✍️கிரிகோரியைப் பின்தொடர்ந்து டமாஸ்கஸின் ஜான் அவர்களும், யூத மதத்திலும் புறமதத்திலும் சிறந்ததை "கிறிஸ்தவம்" எடுத்துக்கொள்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
📝 "ஒருபுறம், யூதர்களின் யோசனையின் அடிப்படையில் நாம் கடவுளின் இயல்பின் ஒருமையைக் கொண்டிருக்கிறோம், மறுபுறம், கிரேக்கர்களின் திரித்துவமும் நமக்கு இருக்கிறது."
➖ St. John of Damascus (675-749 AD)'s De Fide Orthodoxa (An Exact Exposition of the Orthodox Faith) Book I Chapter VII (Concerning the Holy Spirit, a reasoned proof)
✍️பேட்ரிஸ்டிக்ஸ் அறிஞர் வொல்ப்சன் கூறுகிறார்:
📝உண்மையில், திரித்துவத்தைப் பற்றிய அதன் சொந்த கருத்தாக்கம் பிதாக்களால் யூத ஏகத்துவவாதம் மற்றும் பேகன் பலதெய்வத்தின் கலவையாகக் கருதப்பட்டது. தவிர இந்த கலவையானது ஒரு நல்ல கலவையாகும்; உண்மையில் இது யூத ஏகத்துவத்தில் சிறந்தது மற்றும் பேகன் பலதெய்வத்தில் சிறந்ததின் கலவையாக இருந்தது. இதன் விளைவாக அவர்கள் அதை மகிமைப்படுத்தி, தங்கள் நம்பிக்கையின் உண்மைக்கு சான்றாக சுட்டிக்காட்டினர். திரித்துவத்தின் கோட்பாட்டின் தத்துவ சூத்திர வரலாற்றில் ஒரு சிறந்த நபர்களில் ஒருவரான நைசாவின் கிரிகோரியின் சாட்சியம் நம்மிடம் உள்ளது - அவருடைய வார்த்தைகளை சர்ச் பிதாக்களில் கடைசிவரான டமாஸ்கஸின் ஜான் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
➖ Wolfson's book. page 362
✍️ அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒரே தேவனாக செயல்படுகிறார்கள் என்று சொல்வதன் மூலம் யூதர்களின் ஏகத்துவக் கோட்பாட்டையும்(ஒரே தேவன்) அதேசமயம் கிரேக்கர்களின் பலதெய்வ கோட்பாட்டையும்(மூன்று நபர்கள்) கிறிஸ்தவம் இணைக்கிறது. இதனைக் குறித்து தான் ஆரம்பகால சர்ச்சு பிதாக்கள் கிறிஸ்தவம் யூதர்களின் ஏகத்துவ கோட்பாட்டையும் கிரேக்கர்களின் பல தெய்வ கோட்பாட்டையும் இணைக்கிறது என்று கூறுகிறார்கள். இவ்வாறு எந்த ஒரு தீர்க்கதரிசியாக போதிக்கப்படாத மற்றும் மனிதர்களின் கற்பனையால் புகுத்தப்பட்ட திரித்துவம் எனும் கோட்பாடானது, இறைவனை நெருங்குவதற்கு உதவாது என்பதையும், மாறாக அத்தகைய கோட்பாடானது நரகம் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொண்டு ஒரே தேவனை போதிக்கும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்க கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக