இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து
✍️சிலை வணக்கத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் மதங்கள் அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை நேரடியாக அல்லது மறைமுகமாக போதிக்கின்றன. இதில் கிறிஸ்தவமும் விதிவிலக்கல்ல. சிலை வணக்க மதத்தை சார்ந்தவர்கள் இடத்திலிருந்து ஆதிபாவம் திரித்துவம் சிலுவைப் பலி போன்றவற்றை உள்வாங்கிய கிறிஸ்தவம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை போதிக்கும் தீண்டாமையையும் உள்வாங்கியது.
✍️கிறிஸ்தவ மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உருவாக்கப்பட்டு ஒரு இனம் மற்றொரு இனத்திற்கு நிரந்தர அடிமையாக சித்தரிக்கிறது.
🖋️நோவாவுக்கு ஹாம் ஷேம் ஜாவித் என மூன்று மகன்கள்.
🔘திராட்சை ரசம் குடித்து போதை தலைக்கேறி நிர்வாணமாய் கிடந்த நோவாவை அவரது மகன்களில் ஒருவனான ஹாம் ஏதேச்சையாக பார்த்ததை அறிந்து கொண்ட நோவா ஹாமின் மகனான கானானை ஷேம் மற்றும் ஜாவீதுக்கு அடிமைகளின் அடிமையாய் இருக்கும் படி சபித்தார் என்று பைபிள்(ஆதியாகமம் 9:18-27) கதை கூறுகிறது. ஷேம் மற்றும் ஜாவீதின் வாரிசுகளை ஆசிர்வதித்த நோவா, ஜாமின் மகனான கானானை சபித்தார். இந்த கதைகள் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர் திராட்சை ரசத்தை குடித்துவிட்டு போதை தலைக்கேறி நிர்வாணமாய் கிடந்தது என்பது பெரிய தவறாக இருக்கும் பொழுது அதை எதேச்சையாக பார்த்த அவரது மகன்களில் ஒருவரான ஹாமை கண்டிப்பதற்கு கூட நோவாவிற்கு உரிமையில்லாத பொழுது, ஹாமின் மகன்களில் ஒருவனான காளானை சபித்தது மாபெரும் முட்டாள்தனமாகும். இந்த முட்டாள்தனத்தை பைபிளில் கர்த்தர் கண்டிக்காதது படுகேவலமாகும்.
✍️இந்த முட்டாள்தனமான கதை தான் பின்னாளில் இஸ்ரவேலர்கள் கானானியர்களை அவர்களது நாட்டை விட்டு விரட்டி அங்குசென்று இஸ்ரவேலர்கள் குடியேறவும், பின்னாளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மக்களை அடிமைப்படுத்தவும் நியாயத்தை கற்பித்தது. ஏனெனில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சர்வாதிகார கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மக்களை கானானின் வாரிசுகளாக பார்த்தனர். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும் தாங்கள் விரும்பும் மக்களை அடிமைப்படுத்துவதற்கு, அவர்கள் கானானின் வாரிசுகள் என்ற ஒற்றை குற்றச்சாட்டே கிறிஸ்தவர்களுக்கு போதுமானதாக இருந்தது. இந்த பைபிள் கதை தான் வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் இந்திய மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமையாக மிருகத்தனமாக நடத்தி கொன்று குவிப்பதற்கு காரணமாக அமைந்தது.
🖋️கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி யூதர்கள் இயேசுவை சிலுவையில் நிர்வாணமாக தொங்க விட்ட போதிலும், அன்னை மேரியை விபச்சாரி என்று இழிவுபடுத்தி கூறிய போதிலும், கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக யூதர்களை நேசிப்பதற்கு காரணம் யூதர்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று பைபிள் கூறுவது தான். இதன் காரணமாகவே பலஸ்தீனத்தில் அரபுகளுக்கு எதிரான யூதர்களின் மிருகத்தனமான தீவிரவாத போக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிறித்தவ நாடுகள் ஆதரிக்கின்றன. சாராவின் அடிமையாக இருந்து ஆபிரகாமின் இரண்டாவது மனைவியான ஹாஜர் மற்றும் அவரது மகனான இஸ்மாயில் மற்றும் அவரது சந்ததிகளான அரபுகளை இன்றும் யூதர்களுக்கு அடிமையாக பார்க்கும் கிறிஸ்தவர்களின் கேவலமான எண்ணமே பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரவேலின் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு காரணமாக உள்ளது. பைபிளின் மூலமாக அடிமை முறை என்பது கிறிஸ்தவர்களின் ரத்த நாளங்களில் கலந்து விட்டது. அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கிறிஸ்தவம் ஒழிக்கப்பட வேண்டும்.
🔘பைபிளின் அடிப்படையில் தான் இந்தியாவை தங்களுக்கு அடிமைப்படுத்த உரிமை உண்டு என்றும் பிரச்சாரம் செய்தனர். இந்தியாவை அடிமையும் படுத்தினர். இந்திய மக்களை பிறப்பின் அடிப்படையில் அடிமைகள் என்று முத்திரை குத்தினர்.
✍️இது இந்தியாவில் மட்டும் நிகழவில்லை ஆப்பிரிக்க நாடுகளிலும் இதுவே தான் நடந்தது.
✍️ஆப்பிரிக்க மக்களை கொத்துக் கொத்தாக அடிமைகளாக்கி அமெரிக்கவுக்கு கடத்திச் சென்றனர்.அங்கே அந்த கருப்பின மக்களை மலம் அள்ளும் தொழிலாளர்களாகவும் வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக வைத்திருந்தனர் வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள்.
✍️பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தை அதாவது யூதர்கள் மற்றும் வெள்ளையின சமூகத்தை உயர்த்திப் பிடித்து பிற நாட்டு மக்களை அடிமைப் படுத்திய மதம் தான் கிறிஸ்தவம்.
✍️ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கருப்பர் அமெரிக்க காவல்துறையினரால் அநியாயமான முறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள கருப்பு இன எழுச்சி என்பது இன்றும் கருப்பர்கள், வெள்ளையின கிறிஸ்தவர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
🖋️அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்ற கருப்பர்கள் தங்களது இன மரியாதையை தற்காத்து கொள்ள இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்து கொண்டிருக்கின்றனர். இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற கொள்கையை கருப்பர்கள் உணர்ந்து இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக செயல்படுத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இன மக்களுக்கு இடையே அன்பையும் சமாதானத்தையும் சம உரிமையையும் சம நீதியையும் நிலைநாட்ட இஸ்லாம் ஒன்றால் மட்டுமே முடியும் என்பதை கருப்பு இன மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் எவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்கள், உயர்ஜாதி கொடுமையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களது மரியாதையை மீட்டுக்கொள்ளவும் எவ்வாறு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தார்களோ, அவ்வாறே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற கருப்பு இன மக்கள் வெள்ளைக்கார கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களது மரியாதையும் ஏற்றுக் கொள்ளவும் இஸ்லாம் ஒன்றே சிறந்த வழி என்று கருதி முஸ்லிமாக மாறி வருகின்றனர். Pew research forum ஆய்வின்படி அமெரிக்க முஸ்லிம்களில், கருப்பு இன முஸ்லிம்களில் 49% இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்றும் 15% வெள்ளையர்கள் என்றும் கூறுகின்றது அதேசமயம் கிறிஸ்தவத்தை ஏற்கும் கருப்பர்கள் 6% என்றும் குறிப்பிட்டுள்ளது. கருப்பு ஊர்களுக்கு இடையே இஸ்லாம் வேகவேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது. பிறப்பின் அடிப்படையில் இன இழிவை போதிக்கும் மதங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களின் மரியாதையை மீட்டுக் கொள்ளவும் இஸ்லாம் ஒன்றே நன்மருந்து என்பதை இந்திய மற்றும் கருப்பு இன மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
⭐"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
➖ என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதர முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.
✍️தீண்டாமையைப் பெயரளவுக்கு இல்லாமல் செயலளவில் ஒழித்து காட்டியது திருக்குர்ஆனும், அதைப் போதிக்க வந்த திருத்தூதர் (ஸல்) அவர்களும் தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் தீண்டாமையை அல்ல, உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் பல்வேறு கோணங்களில் பரவிப் பீடித்துள்ள இந்தத் தீண்டாமை நோயைத் தீர்க்கும் மருந்து திருக்குர்ஆனிலும், அது கூறும் திருத்தூதரின் பாதையிலும் தான் உள்ளது.
⭐மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49:13)
✍️மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இனம், நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த ஒவ்வொரு உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. இறைவனை அஞ்சி ஒழுக்கமாக நடப்பவர்கள் இறைவனிடத்தில் மிகச் சிறந்தவர்கள் என்று கூறி இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான இன ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் அழித்து, மனிதர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை இஸ்லாம் நிலைநாட்டுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக