தவ்ஹீத் என்றால் பன்மை தேவனா?

தவ்ஹீத் என்றால் பன்மை தேவனா?





✍️தங்கள் வேதத்தில் இருந்தும் தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலிருந்தும் திரித்துவத்தை நிரூபிக்க முடியாத கிறிஸ்தவர்கள், தங்கள் இயலாமையின் காரணமாக இஸ்லாத்தின் ஆதாரங்களான அல் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இருந்து தவ்ஹீது அல்லது Unity in f Allah என்ற வார்த்தையை கொண்டு தாங்கள் நம்பும் திரித்துவத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்களது முயற்சி என்பது வீணானது ஆகும். ஏனெனில் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை தெள்ளத் தெளிவாக அல்குர்ஆனும் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தெளிவாக போதிக்கின்றன.

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ جَعْفَرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَابِرٍ، فَذَكَرَ هَذَا الْحَدِيثَ وَأَدْرَجَ فِي الْحَدِيثِ عِنْدَ قَوْلِهِ ‏{‏ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ‏}‏ قَالَ فَقَرَأَ فِيهَا بِالتَّوْحِيدِ وَ ‏{‏ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ‏}‏ وَقَالَ فِيهِ قَالَ عَلِيٌّ - رضى الله عنه - بِالْكُوفَةِ قَالَ أَبِي هَذَا الْحَرْفُ لَمْ يَذْكُرْهُ جَابِرٌ فَذَهَبْتُ مُحَرِّشًا ‏.‏ وَذَكَرَ قِصَّةَ فَاطِمَةَ رضى الله عنها ‏.‏

The tradition has also been transmitted by Jabir through a different chain of narrators. He narrated this tradition and added the words "he recited in two rak'ahs the surah relating to #Unity_of_Allaah" and "Say, O disbelievers" to the Qur'anic verse "And take the station of Abraham as a place of prayer. ". This version has "Ali said in Kufah. The narrator said "My father said Jabir did not say these words. I went to complain (against Fatimah). He then narrated the story of Fatimah."

Sahih (Al-Albani)

Sunan Abi Dawud 1909
In-book : Book 11, Hadith 189
English translation : Book 10, Hadith 1904
Abu Dawood

✍️சுன்னத் அபூதாவூது 1909 என்ற ஹதிஸில் இருந்து Unity of Allah என்று சொல்லைக்கொண்டு, அல்லாஹ்வுடன் எத்தனை பேர் கூட்டு வைத்துள்ளனர் அல்லது அல்லாஹ்வுடன் எத்தனை பேர் பங்காளிகளாக இருக்கின்றனர் என்ற கேள்வியை கிறிஸ்தவர்கள் எழுப்புகின்றனர். Unity of Allah என்ற சொல்லின் அரபு பதம் بِالتَّوْحِيدِ என்பதாகும். தவ்ஹீத் என்பது அரபு மூல வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்ட பெயர்ச்சொல்: وحَّدَ-/ يوحِّدُ / (வஹ்ஹ்தா / யுவாஹிது). ஒன்று என்பதை குறிக்கவே அரபியில் وَحَّدَ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

🌟Al-Baqarah 2:163
Arabic
وَإِلَٰهُكُمۡ إِلَٰهٌ #وَٰحِدٌۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ

Tamil - Jan Trust Foundation
மேலும், உங்கள் நாயன் #ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

✍️எந்த ஒரு சொல்லும் பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறும். Unity of Allah என்பதன் அர்த்தம் அல்லாஹ்வின் ஒருமையை மட்டுமே குறிக்கும். அதாவது இறைவனுக்கு உரிய பண்புகள் அனைத்தையும் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே ஒருமைப்படுத்துவது அல்லது ஒன்று சேர்ப்பது. அல்லாஹ் அல்லாத வேறு எவருக்கும் இறைவனுக்குரிய பண்புகளை சேர்க்காமல் இருப்பது. இதன் காரணமாகவே unity of Allah என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

✍️இறைவனுக்கு உரிய பண்புகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு ஒருமைப்படுத்துவதே தவ்ஹீது ஆகும். பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்கும் மதங்கள் அனைத்தும் இறைவனுக்கு உரிய பண்புகளை பல தெய்வங்களுக்கும் பகிர்ந்து போதிக்கின்றன. ஆனால் அனைத்து தீர்க்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட சத்திய மார்க்கமான இஸ்லாம் இறைவனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே ஒருமைப்படுத்துகிறது. இன்னும் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென்று மனிதர்களுக்கு புரிய வைப்பதற்காகவே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒருவன் தான் என்றும் அவனுக்கு பங்காளிகள் யாரும் இல்லை என்றும் இஸ்லாத்தின் ஆதாரங்களான அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கும் போது அல்லாஹ் வேறு எவரோ ஒருவர் உடன் கூட்டு வைத்திருக்கிறான் என்று சொல்வது என்பது நகைப்புக்குரியது.

✍️தவ்ஹீத் என்ற சொல்லை ஹதீஸிலிருந்து சுட்டிக்காட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் அறியாமையை அடிப்படையாகக் கொண்டு திரித்துவத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர். அந்தோ பரிதாபம்! இறுதித் தூதரான முகமது நபி அவர்கள் தவ்ஹீத் என்றால் என்னவென்று முஸ்லிம்களுக்கு மிக தெளிவாகவே போதித்து இருக்கும்பொழுது கிறிஸ்தவர்களின் இந்த வாதம் மிக எளிமையாகவே உடைப்பட்டு விடும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். உதாரணத்திற்கு ஒரு சில ஹதீஸ்களை பார்ப்போம்.

✍️ஹஜ் மற்றும் உம்ராவின் போது முஸ்லிம்களால் தொடர்ந்து சொல்லப்படும் தவ்ஹீது தல்பியா முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது ஒரு நீண்ட ஹதீஸ் என்பதால் தேவையான சில பகுதியை மட்டும் இங்கு நான் பதிவு செய்கிறேன்.

⭐அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று #ஏகத்துவ_உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம் : 2334)

⭐பின்னர் அவர் #ஏகத்துவத்தின்_தல்பியாவைத் தொடங்கினார்: “லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் ('இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.') ”  மக்கள் அவருடைய வார்த்தைகளை மீண்டும் சொன்னார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அதற்கு ஒப்புதல் அளித்தார்.  அல்லாஹ்வின் தூதர் (ﷺ) தொடர்ந்து தல்பியாவை ஓதிக் கொண்டிருந்தார். ’ஜாபீர் கூறினார்:‘ நாங்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எதையும் செய்ய விரும்பவில்லை.  (ஹஜ் சடங்குகள் தொகுதி 4, புத்தகம் 25, ஹதீஸ் 3074 பற்றிய சுனன் இப்னு மஜா அத்தியாயங்கள்)

✍️உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை என்ற ஏகத்துவ விளக்கத்துடன் கூடிய தவ்ஹீது தல்பியாவை முஹம்மது நபியவர்கள் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கும்பொழுது கிறிஸ்தவர்களின் பொய்யான வாதம் முறியடிக்கப்பட்டு விடுகிறது. முகமது நபி அவர்கள் போதித்த தவ்ஹீத் தல்பியாவில் எந்த ஒரு இடத்திலும் அல்லாஹ் எவருடனும் கூட்டு வைத்திருக்கிறான் என்று சொல்லவில்லை. மாறாக அல்லாஹ்விற்கே அனைத்து ஆட்சியும் அதிகாரமும் என்றும், அல்லாஹ்வுக்கு இணை எவருமில்லை என்று கூறியும் கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டு முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு விடுகிறது.

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ   لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏
🌟மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் : 2:163)

لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ‌ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ   وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
🌟நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
(அல்குர்ஆன் : 5:73)

✍️தவ்ஹீத் என்று சொல்லின் மூல சொல்லான யுவாஹீது(يوحِّدُ) என்று சொல்லும் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை குறிக்கும் வகையிலேயே நபியின் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ #يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلُّوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ ‏"

⭐இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், 'நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, #அல்லாஹ்_ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7372.
அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

✍️இதுபோன்று ஏராளமான ஆதாரங்கள் தவ்ஹீது மற்றும் வஹ்ஹ்தா / யுவாஹிது போன்ற சொற்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன் என்றும், அவனுக்கு இணை எவரும் இல்லை என்றும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதிலிருந்து கிறிஸ்தவர்களின் பொய்யான வாதம் தவிடுபொடியாகிறது


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்