இயேசு மனித பாவங்களுக்காக மரணித்தாரா?

இயேசு மனித பாவங்களுக்காக மரணித்தாரா?



✍இந்த உலகில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காக இயேசு வரவில்லை. இயேசு சுயமாக வரவில்லை. இயேசுவே கர்த்தரால் அனுப்பப்பட்டவர் தான்.

👉யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

✍நித்திய ஜீவனை அடைய இயேசுவை விசுவாசித்தாலே போதுமானது. நித்திய ஜீவனை அடைய இயேசு மரணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது.

👉தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(யோவான் 3:16)

✍ஒருவேளை இயேசு மனித பாவங்களுக்காக மரணிக்க வந்திருந்தார் என்றால் அதை ஏன் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட சொல்லவில்லை. மேலும் இயேசு சிலுவையில் மரணிக்கவும் விரும்பவில்லை. அதனால் தான் தனது இந்த பாத்திரம் நீக்கும்படி கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கியார்.

👉பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
(லூக்கா 22:42)

✍மனித பாவங்களுக்காக மரணிக்க வந்தவர் இந்த பாத்திரம் நீக்கும்படி கர்த்தரிடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்? அதுவும் தனது சித்தத்தின் படி அல்ல, கர்த்தரின் சித்தப்படியே  தனது பாத்திரம் நீங்கும்படி பிரார்த்தனை செய்கிறார்.

✍யோவான் 17:4இல் கர்த்தர் கொடுத்த கிரியைகளை செய்து முடித்து விட்டதாக இயேசு சொல்கிறார். யோவான் 17:4 வசனம் உண்மையென்றால் இயேசு மனிதர்களின் பாவங்களுக்காக மரணிக்க வந்தார் என்று சொல்வது பொய்யாகும். ஏனெனில் இயேசு தனது சிலுவை மரணத்திற்கு முன்பே கர்த்தர் தனக்கு கொடுத்த கிரியைகளை செய்து முடித்து விட்டதாக சொல்கிறார்.

👉பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
(யோவான் 17:4)

✍ஆதிபாவம் என்பதும், அதற்காக இயேசு சிலுவையில் மரணித்தார் என்பதும் மனித கற்பனையே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்