⭐மனிதர்களின் பாவத்திற்கு பரிகாரமாக இயேசு சிலுவையில் மரணிக்க வேண்டுமா?⭐

⭐மனிதர்களின் பாவத்திற்கு பரிகாரமாக இயேசு  சிலுவையில் மரணிக்க வேண்டுமா?⭐




✍1. துன்மார்க்கன் தான் செய்த பாவங்களை விட்டும் மனப்பூர்வமாக திரும்பி, கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளும் போது, அவன் மன்னிக்கப்படுவான் என்று கர்த்தர் சொல்கிறார். இங்கு பாவங்களை மன்னிக்க மனப்பூர்வமான மனம் திரும்புதல் போதுமானது என்று கர்த்தர் சொல்லும்போது, ஏன் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும்?

👉துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
(எசேக்கியேல் 18:21)
                 ➖➖➖➖➖➖➖➖

✍2. பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கான தண்டனை மரணம் இல்லை. அதனால் தான் தாவீது பாவம் செய்த போது, அவர் கொல்லப்படாமல் பாவங்களை கர்த்தர் நீங்க செய்தார்.

👉அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
(2 சாமுவேல் 12:13)
                    ➖➖➖➖➖➖➖

✍3. பாவம் செய்கிற ஆத்மாவே சாகும். தந்தையின் பாவத்தின் காரணமாக பிள்ளைகள் கொல்லப்படக்கூடாது, பிள்ளைகள் நிமித்தம் தந்தை கொல்லப்படக்கூடாது என்று கர்த்தர் சொல்லும்போது ஆதாமின் பாவத்திற்காக பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இயேசுவை ஏன் பலி கொடுக்க வேண்டும்? ஒருவரின் பாவத்திற்கு இன்னொரு அப்பாவியை கொல்வது என்பது கர்த்தரின் நீதிக்கு விரோதமானதாகும்.

👉பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
(எசேக்கியேல் 18:20)
                  ➖➖➖➖➖➖➖➖

✍4. இயேசுவின் மரணத்திற்கு முன்பு வரை, பாவ மன்னிப்புக்கு இரத்தப்பலி வேண்டுமென்றால், இயேசு ஏன் விபச்சாரம் செய்த பெண்ணை(யோவான் 8:1-11) மன்னிக்க வேண்டும்?

👉அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(யோவான் 8:11)
                   ➖➖➖➖➖➖➖➖

✍5. இயேசுவின் சிலுவை மரணம் என்பது பழைய ஏற்பாட்டில் குற்றப்பரிகாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள பலி கொடுத்தல் போன்று செய்யப்படவில்லை. எந்த பரிசேயரும் இயேசுவின் சிலுவை பலியை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பலி போன்று நடத்தவில்லை. பிறகு எப்படி இயேசுவின் சிலுவை மரணம் பாவ நிவாரணம் ஆகும்?

✍கர்த்தரால் அனுப்பப்பட்ட ஒருவரை கொல்வது என்பது மாபெரும் பாவமாகும். அந்த வகையில் இயேசுவை கொன்றது மிகப்பெரிய பாவமாகும். எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமைகின்றன. பாவப்பலியாக அல்லாமல் இயேசுவின் மீது அவநம்பிக்கை கொண்டு தான் அவரை யூதர்கள் கொல்ல முயற்சித்தனர். இது மாபெரும் பாவம். பாவத்திற்கு பாவம் எப்படி பரிகாரம் ஆகும்?
                  ➖➖➖➖➖➖➖➖

✍6. பாவத்தில் இருந்து விடுதலை பெற்று தரும் பழைய ஏற்பாட்டு சட்டங்கள் மனிதர்களால் பின்பற்ற முடியாது என்றால், கர்த்தர் ஏன் அத்தகைய சட்டங்களை தர வேண்டும்? மனிதனது குற்றம் செய்யும் இயல்பை அறியாதவரா கர்த்தர்?

👉துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
(எசேக்கியேல் 18:21)
                   ➖➖➖➖➖➖➖➖

✍7. யோவான் 17:4இல் கர்த்தர் கொடுத்த கிரியைகளை செய்து முடித்து விட்டதாக இயேசு சொல்கிறார். யோவான் 17:4 வசனம் உண்மையென்றால் இயேசு மனிதர்களின் பாவங்களுக்காக மரணிக்க வந்தார் என்று சொல்வது பொய்யாகும். ஏனெனில் இயேசு தனது சிலுவை மரணத்திற்கு முன்பே கர்த்தர் தனக்கு கொடுத்த கிரியைகளை செய்து முடித்து விட்டதாக சொல்கிறார்.

👉பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
(யோவான் 17:4)

மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் மனிதர்களின் பாவத்திற்கு இரத்தப்பலி அவசியம் இல்லை என்பதை உறுதி செய்கிறது. இயேசுவுக்கு முன் எந்த தீர்க்கதரிசியும் மனித பாவத்திற்கு நிவாரணம் சிலுவை பலி அவசியம் என்றும் போதிக்கவில்லை.  இயேசுவும் தன் வாழ்நாளில், தான் சிலுவை மரணத்திற்குகாக இந்த பூமிக்கு வந்ததாக என்றும் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களின் சிலுவை நம்பிக்கை நித்திய ஜீவனை தராது. உண்மையான மனம் திரும்புதலும், கர்த்தரின் கட்டளைகளை கை கொள்ளுதலுமே நித்திய ஜீவனை பெற்று தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்