அறிவியல் உலகில் முஸ்லீம்களின் பங்கு

💎அறிவியல் உலகில் முஸ்லீம்களின் பங்கு💎



✍சமீபத்தில் கேலக்ஸியின் ஒரு முற்றிலும் புதிய வகையை கண்டுபிடித்த பிறகு டாக்டர் பர்சின் முத்லு-பக்துல் தலைப்பு செய்தியில் முக்கிய இடம் பெற்றுள்ளார் இதன் காரணமாக கேலக்ஸிக்கு பர்சின் கேலக்ஸி என்ற பெயர் வைக்கப்பட்டது. துருக்கியை தாய்நாடாக கொண்ட  டாக்டர் பர்சின் முத்லு-பக்துல் நம் பிரபஞ்சத்தைப் ஆராய்ச்சி செய்யும் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறார்.

✍துருக்கியில் உள்ள பில்கன்ட் பல்கலைக்கழகத்தில் பி.எஸ் பட்டத்தை பெற்ற பர்சின் முத்லு  M.sc பட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்திலும் PHdயை மின்னசொடா பல்கலைக்கழகம்(Minnesota University) பயின்றார். அவர் இப்போது அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஸ்டீவார்ட் ஆய்வகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.  அங்கு அவர் பல விண்மீன்களின் ஆய்வு மற்றும் விண்மீன் பரிணாம வளர்ச்சி மற்றும் குள்ள விண்மீன்களின் கட்டமைப்புகள் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

✍அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும்100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன. கண்டறியப்பட்ட கேலக்ஸியில் பெரும்பாலும் நமது பால்வெளியை போன்று சுருள் வடிவம் கொண்டவை.  மிகவும் பொதுவான வகை விண்மீன் திரள்களின் பரிணாமத்தைப் பற்றி உறுதியான கோட்பாடுகள் இருப்பதால், அசாதாரண விண்மீன் திரள்களின் அண்டவியல் பரிணாமத்தை புரிந்து கொள்ளவே ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

✍1950களில் ஆர்தர் ஆலன் ஹோக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹோக்'ஸ் ஆப்ஜெக்ட் இது போன்ற அரிய விண்மீன் வகை ஆகும். ஹோக்'ஸ் ஆப்ஜெக்ட் என்பது மோதிரம்(ரிங்) வகை கேலக்ஸியின் ஒன்றாக அறியப்பட்டது. இந்த கேலக்ஸியின் வெளிப்புறம் பிரகாசமான இளம் ஊதா நட்சத்திர கொகுப்புகளால் மோதிரம் போன்றும்  அதன் உட்புற மையப்பகுதி சிவப்பு நிற பழைய நட்சத்திரங்களாலும் ஆனது. இதன் உட்புற பழைய சிவப்பு நிற நட்சத்திரத்திற்கும், மோதிரம் போன்று உள்ள வெளிப்புற  அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாக கண்டறியப்பட்டது.

✍டாக்டர் முத்லு பக்துல் மற்றொரு சிவப்பு வண்ண மோதிரத்தை நடுவில் கண்டார். இது ஹோக் வகை விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவானது என்பது பற்றி புரிதலை தெளிவுப்படுத்தியது. மத்தியில் அமைந்த மோதிர வடிவிலான இந்த சிவப்பு நிற நட்சத்திரங்களே மிக பழமையானதும் என்பதையும், இவையே  இந்த கேலக்ஸியில் முதலில் உருவானது என்றும் கண்டறிந்தார். இந்த இரட்டை மோதிர கேலக்ஸி வீண்மீண் திரள்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஆகும். இந்த வகை விண்மீன் திரள்கள் மிகவும் அரிதானவை. இவை கண்டறியப்பட்ட விண்மீன் மண்டலங்களில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன.

✍இவர் கடந்த 2018 TED(technology, entertainment, design)இல் பர்சின் கேலக்ஸி மற்றும் இயற்பியல் சம்பந்தமாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: https://www.nationalgeographic.com/science/2018/11/meet-woman-discovered-new-type-galaxy-burcin-mutlu-pakdil-astrophysics/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்