இறை நம்பிக்கை நன்மை தரும்

இறை நம்பிக்கை நன்மை தரும்



✍வெகு காலமாக தத்துவவாதிகள், உளவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் எப்போதும் கடவுளுடைய இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்குப் முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, கடவுள் நம்பிக்கை என்பது வெற்று நம்பிக்கையல்ல, மறைந்திருக்கும் உண்மைதான் என்பதை உண்மைப்படுத்தியுள்ளனர்.

✍மூளை செயல்பாடு மற்றும் மத நடைமுறைகளுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

✍டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க், எம்.டி., தாம்சன் ஜெபர்சன் யுனிவர்சிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இருந்து செய்யப்பட்ட ஆய்வில், நாத்திகர்கள் தியானம் செய்வதற்கு முன்பும் பின்பும், இறை  நம்பிக்கையுள்ள தனிநபர்கள் வழிபாடு செய்வதற்கு முன்பும் பின்பும் மூளை செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்துள்ளனர்.

✍இந்த வேறுபாடுகள் மூளையின் மிக முக்கியமான பகுதியான முன்புற மடலில் காணப்பட்டது. பாதிப்பில்லாத கதிரியக்க சாயங்களை செலுத்தி, ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலமாக கவனிப்பதன் மூலம் பிரார்த்தனைக்கு முன்பும் பின்பும் மனித மூளையில் என்ன மாற்றும் நடைபெறுகிறது என்பதை கண்காணித்தனர். இந்த ஆராய்ச்சி முஸ்லீம் இமாம்கள், திபெத்திய துறவிகள் மற்றும் நாத்திகர்கள்  மீது நடத்தப்பட்டது.

⭐மனித மூளை
முன் மடல்(frontal lobe), சுவர் மடல் (parietal lobe) , பக்க மடல் (temporal lobe), பிடரி மடல் (occipital lobe), சிறுமூளை(cerebellum) மற்றும் மூளைத்தண்டு(brain stem) என ஆறு கூறுகளாக உள்ளது.

✍மூளையின் முன் மடல் அளவில் மூளையின் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது. மூளையின் முன் மடல் மூளையின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆகும். மேலும் நெற்றியில் பின்னால் அமைந்துள்ளது.

✍முன் மடல்கள் முதன்மையாக முடிவெடுத்தல், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், பணி நினைவகம், சுய நிர்வகித்தல் மற்றும் உணர்ச்சி மனப்பான்மை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உரையாடலின் போது முன்னணி மடல்கள் செயலில் உள்ளன. மேலும் இது பேசவும் கேட்கவும் அனுமதிக்கிறது.

✍மூளையின் பின்பகுதியில் சுவர் மடல் அமைந்துள்ளது. மேலும் இது இரண்டு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. டாக்டர் நியூபெர்க் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மூளையின் சுவர் மடல் பகுதி பிரார்த்தனையின் போது பெரும் தாக்கம் ஏற்படுத்தியதை கண்டறியப்பட்டது.

✍ஸ்பெக்ட்(SPECT, single photon emission computed tomography) மூளையின் இரத்த ஓட்டத்தை கணக்கிட பயன்படுத்தப்படுகிறது. மூளையில் அதிக இரத்தம் ஓட்டமுள்ள பகுதி  (சிவப்பு> மஞ்சள்> பச்சை> நீல> கருப்பு) என வகைப்படுத்தப்படுகிறது.

✍ஒரு நபர் பிரார்த்தனை செய்யும்போது,
கவனம் மற்றும் உரையாடலுக்குப் பொறுப்பேற்கிற முன்னணி மடலின் செயல்பாடு அதிகரிக்கிறது. இது நேரடி உரையாடலில் மூளையில் ஏற்படும் மாற்றத்தை ஒத்திருக்கிறது. அதாவது  ஒரு இறை விசுவாசி நேரடியாக இறைவனுடன் கலந்துரையாடல் செய்வதை காட்டுகிறது.

✍வேறுவிதமாகக் கூறினால், ஸ்கேன்களைக் கவனிப்பதன் மூலம், ஒருவர் பிரார்த்தனையில் கடவுளிடம் பேசுவது, உலகில் உள்ள ஒரு நபருடன் நேரடியாக பேசுவது போலவே உள்ளது. SPECT ஸ்கேனின் முடிவுகள் இரண்டு உரையாடல்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. பிரித்தறிய முடியாததாக இருந்தது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

✍மூளையின் சுவர் மடலில் அமைந்துள்ள கவனத்திற்கான பகுதியின் செயல்பாடு குறைந்துள்ளதை காட்டுகிறது.

✍டாக்டர் நியூபெர்க்கின் கருத்துப்படி, பிரார்த்தனை மற்றும் தியானத்தில் முழுமையாக கவனம் செலுத்தும் போது மூளையில் முழு செறிவு வெளியில் இருந்து உணர்ச்சி மற்றும் புலனுணர்வு உள்ளீடுகளை தடுக்கிறது. எனவே இது  நோக்குநிலை பகுதியின்  செயல்பாடுகள் குறைய வழிவகுக்கிறது என்கிறார்.

✍அதே சமயம் இறை நம்பிக்கையில்லாத ஒருவர் தியானத்தில் ஈடுபடும் போது எந்த மாற்றமும் நடைப்பெறுவதில்லை. இதனால் தியானத்திற்கு முன்பும் பின்பும்  நாத்திகர்களின் மூளையின் முன்பகுதியில் எந்த மாற்றமும் நடைப்பெறவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாததே அவர்களின் மூளையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் போனதற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.

✍டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் கூறுகிறார்:  நலம் பெறுவதற்காக பிரார்த்தியுங்கள் என்று மக்களிடம் சொல்வது  உண்மையில் பயன் தரும் காரியமே. பிரார்த்தனை பலன் தரும். ஏனென்றால் இது அந்த நபரின் நம்பிக்கைக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

✍ஆய்வின் இறுதியில் டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் "மூளை அதன் காரியத்தை(சுய பராமரிப்பு மற்றும் சுயமதிப்பீடு) செய்ய உதவுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவிகளாக கடவுளும் மதமும் உள்ளது. நம் மூளை செயல்பாட்டின் அடிப்படையில் எந்த மாற்றமும் வராத வரை , கடவுள் கொள்கை  மிக நீண்ட காலம் நம்மோடு இருக்கும்", என்று கூறுகிறார்.

👉நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
(அல்குர்ஆன் 41:53)

➡️ஆதாரம்:
http://aboutislam.net/science/faith-science/status-of-brain-during-prayers/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்