பைபிளின் பார்வையில் கர்த்தர் சாத்தானா?

பைபிளின் பார்வையில் கர்த்தர் சாத்தானா?



பைபிளில் சொல்லப்பட்டுள்ள சாத்தான் யார்? சாத்தானின் பண்புகள் எப்படி கர்த்தருக்கு பொருந்துகின்றன என்று பார்ப்பது தான் இந்த பதிவின் நோக்கம்.  அல்லாஹ்வை பைபிளில் சொல்லப்பட்ட சாத்தானோடு ஒப்பீடு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதத்தில், அவர்கள் இறைவன் என்று நம்பும் கர்த்தரை, பைபிளில் சொல்லப்பட்ட சாத்தானோடு ஒப்பீடு செய்கிறோம் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

👉🏽1. அழிக்கிறவன்

✍சாத்தானுக்கு அழிக்கிறவன் என்று அர்த்தம் கொண்ட எபிரேயத்தில் அபெத்தோன் என்றும், கிரேக்கத்தில் அப்பொல்லியோன் என்றும் நாமும் உண்டு என்று பைபிள் கூறுகின்றது. யோபு 26:6ன் படி அபெத்தோன் என்றால் அழிக்கிறவன் என்று அர்த்தம்.

➡️அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; 👉🏽எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன்👈🏽 என்றும் அவனுக்குப்
 பெயர்.
(வெளி 9:11)

✍சாத்தானுடைய நாமத்தை தமது பண்பாக கொண்டவராக கர்த்தரை பைபிள் காட்டுகிறது.

➡️ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் 👉🏽அழிக்கிறார்👈🏽.
(யோபு 9:22)
➖➖➖➖➖
👉🏽2. பொல்லாத ஆவி

✍சாத்தானை பொல்லாத ஆவி என்று குறிப்பிடுகின்றது. அந்த பொல்லாத ஆவிகளோடு மனிதர்களுக்கு என்றும் போராட்டம்  உண்டு என்பதையும் பைபிள் பதிவு செய்கிறது.

➡️ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள 👉🏽பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு👈🏽.
(எபேசியர் 6:12)

✍மனிதர்களுடன் போராடும் அந்த பொல்லாத ஆவியை கர்த்தர் தனது அடியார்களில் ஒருவரான சவுல் மீது ஏவியதாக கூறி கர்த்தரையும் சாத்தானையும் ஒன்று என்கிறது.

➡️I சாமுவேல் 19:9 👉🏽கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது👈🏽; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.
➖➖➖➖➖➖
👉🏽3. சோதனை

✍இயேசுவை சோதனை செய்த சாத்தானை சோதனைக்காரன் என்று பைபிள் கூறுகிறது.

➡️அப்பொழுது 👉🏽சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து👈🏽: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
(மத்தேயு 4:3)

✍சோதனைக்காரன் என்று சாத்தானை அழைக்கும் பைபிள், கர்த்தர் பெரிய சோதனைகளை செய்பவராக சொல்கிறது. ஒரு வேளை கர்த்தரை பெரிய சாத்தான் என்று பைபிள் சொல்கிறது போலும்.

➡️உபாகமம் 29:3 👉🏽கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும்👈🏽, பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
➖➖➖➖➖
👉🏽4. பொய்

✍சாத்தானை பொய்யன் என்றும் பொய்யின் பிதா என்றும் பைபிள் வர்ணிக்கிறது.

➡️அவன் 👉🏽பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால்👈🏽 அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
(யோவான் 8:44)

✍சாத்தானை பொய்யன் என்று விமர்சிக்கும் பைபிள், பொய்யின் ஆவியை தீர்க்கதரிசிகள் மீது ஏவும் சாத்தானாக கர்த்தரை சித்தரிக்கிறது.

➡️II நாளாகமம் 18:22 ஆனதினால் 👉🏽கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்👈🏽; கர்த்தர்உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
➖➖➖➖➖
👉🏽5. வஞ்சகம்

✍ முழு உலகத்தையும் மோசம் செய்கின்ற அதாவது  வஞ்சிப்பவன் என்று சாத்தானை பைபிள் கூறுகிறது.

➡️உலகமனைத்தையும் 👉🏽மோசம்போக்குகிற பிசாசு👈🏽 என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him.
(வெளி 12:9)

✍ சாத்தானை வஞ்சகனாக சித்தரிக்கும் பைபிள், கொடிய வஞ்சகத்தை அனுப்பும் வஞ்சகனாக கர்த்தரை சொல்லி பெரிய சாத்தானாக கர்த்தரை சித்தரிக்கிறது.

➡️அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் 👉🏽கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்👈🏽.
(2 தெசலோனிக்கேயர் 2:11-12)

➡️எசேக்கியேல் 14:9 ஒரு தீர்க்கதரிசி ஏமாற்றப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக்  👉🏽கர்த்தராகிய நானே ஏமாற்றப்படப்பண்ணினேன்;👈🏽 நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

➖➖➖➖➖➖➖➖
👉🏽6. கொல்பவன்

✍ ஆதி முதல் கொலை பாதகனாக சாத்தான் இருக்கின்றான் என்று பைபிள் சொல்கிறது.

➡️நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு 👉🏽மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்👈🏽;
(யோவான் 8:44)

✍கொலை பாதகன் என்று சாத்தானை சொல்லிவிட்டு, நான் கொல்லுகிறேன் என்று கர்த்தர் பெருமை பேசும் வசனத்தை பதிவு செய்து கர்த்தரை சாத்தானுக்கு சமமாக்குகிறது.

➡️நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 👉🏽நான் கொல்லுகிறேன்👈🏽, நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
(உபாகமம் 32:39)
➖➖➖➖➖➖

👉🏽7. பிரபஞ்சத்தின் தேவன்

✍இந்த உலகத்தின் தேவன் என்று சாத்தானை பைபிள் கூறுகிறது.

➡️தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, 
👉🏽இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்👈🏽 அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
(2 கொரிந்தியர் 4:4)

✍சாத்தானை இவ்வுலகின் இறைவன் என்று சொல்லிவிட்டு, மறுபுறமோ கர்த்தர் பூமியிலும் இறைவன் என்று கர்த்தரையும் சாத்தானையும் ஒன்று இன்று நேரடியாகவே பைபிள் சொல்கிறது.

➡️உபாகமம் 4:39 ஆகையால், உயர வானத்திலும் 👉🏽தாழ பூமியிலும்👈🏽 கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
➖➖➖➖➖➖➖
👉🏽8. பெருமை

✍ சாத்தானை பெருமைப்பாராட்டுபவன் என்று பைபிள் சொல்கிறது.

➡️உன் அழகினால் உன் இருதயம் 👉🏽மேட்டிமையாயிற்று👈🏽; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
(எசேக்கியேல் 28:17)

✍சாத்தானை பெருமைப்பாராட்டுபவன் என்று சொல்லிவிட்டு, கர்த்தருடைய நாள் பெருமையும் மேட்டிமையும் நிறைந்தது என்று பைபிள் சொல்கிறது

➡️எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது 👉🏽பெருமையும் மேட்டிமையுமானவை👈🏽 எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
(ஏசாயா 2:12)

➖➖➖➖➖
👉🏽9. தாவீதை ஏவுதல்

✍சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலை தொகையிட தாவீதை தூண்டியது என்று பைபிள் ஒரு இடத்தில் சொல்கிறது.

➡️👉🏽சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி👈🏽, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை 👉🏽ஏவிவிட்டது👈🏽.
(1 நாளாகமம் 21:1)

✍ மற்றொரு இடத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மீது கொண்டதால் தாவீது இஸ்ரவேலை கண்க்கிட தூண்டப்பட்டான் என்று சொல்லி கர்த்தரும் சாத்தானும் ஒன்று நேரடியாக பைபிள் சொல்கிறது.

➡️கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு 👉🏽தாவீது ஏவப்பட்டான்👈🏽.
(2 சாமுவேல் 24:1)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்