ஆதியாகமம் திரித்துவத் தேவனை போதிக்கிறதா?
ஆதியாகமம் திரித்துவத் தேவனை போதிக்கிறதா?
சிலை வணங்கிகளை போன்று திரித்துவத்தை நம்பும் கிறிஸ்தவர்கள், பழைய ஏற்பாட்டில் இருந்து தாங்கள் நம்பும் திரித்துவத்தை நிருபிக்க சில வசனங்களை திரித்து பேசி வருகின்றனர். அப்படி பேசும் வசனங்களில் மிக முக்கியமானது ஆதியாகமம் 1:26 ஆகும்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;
(ஆதியாகமம் 1:26)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள "நமது சாயல் நமது ரூபத்தின் படி" மனுஷனை உண்டாக்குவோமாக என்ற வசனத்தில் சொல்லப்பட்டுள்ள பன்மை சொல்லை தாங்கள் நம்பும் திரித்துவ கொள்கைக்கு சாதகமாக எடுத்து கொள்கின்றனர். உண்மையில் அந்த வசனம் திரித்துவ அடிப்படையில் சொல்வப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். அந்த வசனத்தில் சொல்லப்பட்ட பன்மை சொல்லான "நமது சாயல்" என்ற சொல் என்றாலும் அது திரித்துவம் என்ற வரையறைக்குள் கொண்ட வர முடியாது. அது ஒன்றுக்கு மேல் இரண்டு மூன்று பத்து நூறு என அனைத்திற்கும் இந்த பன்மை சொல் பொருந்தும். உண்மையில் இந்த வசனம் பன்மையில் பேசினாலும் அது "மரியாதை பன்மை" ஆகும். மனிதன் ஒரே தேவனாகிய கர்த்தரின் சாயலில் தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை ஆதியாகமத்தின் அடுத்த வசனம் உறுதிப்படுத்துகிறது.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்.
So God created man in his own image
(ஆதியாகமம் 1:27)
மேற்கண்ட வசனத்தில் தேவன் தம்ம்டைய சாயலில் மனிதனை படைத்தார் என்று சொல்லும்போது ஒருமை சொல்லை பயன்படுத்தியுள்ளான். கிறிஸ்தவர்கள் நம்புவது போன்று தேவன் திரித்துவம் என்றால் முதல் வசனத்தில் பயன்படுத்திய பன்மை சொல்லை விடுத்து அதற்கு அடுத்த வசனத்திலேயே ஒருமை சொல்லை பைபிள் பயன்படுத்துவது தெளிவான முரண்பாடாக அமைந்து இருக்கும். பைபிளில் எந்த முரண்பாடும் இல்லை என்று நம்பும் கிறிஸ்தவர்கள் மேற்கண்ட முரண்பாட்டை ஏற்க மாட்டார்கள். உண்மையில் அந்த வசனம் தேவன் ஒருவன் தான் என்பதையும், அவன் பன்மை தன்மையில் இல்லை என்பதையும், ஆதியாகமம் 1:26 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பன்மை சொல் மரியாதை பன்மை என்பதையும் உறுதிப்படுத்தவே அதற்கு அடுத்த வசனத்தில் கர்த்தர் தன்னை குறிக்க ஒருமை சொல்ல பயன்படுத்தியுள்ளார்.
பைபிளை பொறுத்தவரையில் மரியாதை பன்மை சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கர்த்தர் ஒருவரையே இறைவன் என்பதை பைபிள் பல இடங்களில் பதிவு செய்துள்ளது. பழைய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் சொல்வது போன்று கர்த்தர் இயேசு பரிசுத்த ஆவி இம்மூவரும் சேர்ந்து படைப்பில் செயல்படவில்லை, கர்த்தர் ஒருவர் தான் மனிதன் உட்பட அனைத்தையும் படைத்தார்.
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர்சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
(ஏசாயா 44:24)
கர்த்தர் ஒருவனே அனைத்தையும் படைத்து இருக்கும் போது, மரியாதைக்குரிய பன்மையில் சொல்லப்பட்ட எலோஹிம் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தி கிறிஸ்தவர்கள் திரித்துவத்தை நிருபிக்க முயல்வது அவர்களது அறிவீனனம். இயேசு உட்பட எந்த தீர்க்கதரிசியும் திரித்துவத்தை நம்பவும் இல்லை. அதை போதிக்கவும் இல்லை. கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை திரித்துவம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றிலும் இல்லை, பைபிளிலும் இல்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக