பவுலை நிராகரித்த எபியோனிய கிறிஸ்தவர்கள்
பவுலை நிராகரித்த எபியோனிய கிறிஸ்தவர்கள்
✍️எந்த ஒரு தீர்க்கதரிசியும் போதிக்காத ஆதிபாவம் திரித்துவம் போன்ற சிலை வணக்கக் கொள்கைகள் கிறிஸ்தவத்தில் எவ்வாறு புகுந்தது என்பதை அறிந்து கொள்ள கிறிஸ்தவர்களின் ஆரம்பகால வரலாற்றையும், புதிய ஏற்பாடு தொகுக்கப்பட்ட முறையையும் இன்னும் புறக்கணிக்கப்பட்ட சுவிசேஷங்கள் மற்றும் ஆரம்பகால சபையின் பாதிரிமார்கள் கடிதங்களையும் ஆராய்வது மிகவும் தேவை.
✍️இயேசுவின் போதனைகளின் மீது உண்மையாக விசுவாசம் கொள்ளும் எவரும் பவுலின் போதனைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஏனெனில் பவுலின் போதனைகள் என்பது இயேசுவின் போதனைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். ஆரம்ப காலகட்டத்தில் இயேசுவை கடுமையான முறையில் எதிர்த்த பவுல், இயேசு விண்ணுலகத்திற்கு உயர்த்தப்பட்ட பிறகு இயேசுவின் பெயரால் பவுல் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் முரணான புதிய போதனைகளை யூதரல்லாத மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். இன்னும் சொல்வதாக இருந்தால் பவுலின் போதனைகள் இயேசுவின் உண்மையான சீடர்களின் போதனைகளுக்கும் முரணானதாக அமைந்திருந்தது.
✍️நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசுவும்(மத்தேயு 5:17), பரலோக சாம்ராஜ்யத்தை அடைய விசுவாசம் மட்டுமில்லாமல் கற்பனைகளையும் கைக்கொள்ள வேண்டும் என்று இயேசுவின் சீடர்களும் உபதேசித்து இருக்கும்பொழுது(யாக்கோபு 2:14), இயேசுவின் மீதான நம்பிக்கை ஒன்றே பரலோக ராஜ்யத்தை அடைய போதுமானது என்றும் நியாயப்பிரமாணத்தை பின்பற்ற அவசியமில்லை என்றும் கூறி மக்களை வழி கெடுத்தார் பவுல்(கலாத்தியர் 3:23-25). எந்த ஒரு தீர்க்கதரிசியும் போதிக்காத ஆதி பாவம் மற்றும் திரித்துவம் போன்ற சிலை வணக்க கொள்கைகளை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களை நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுவித்தால் மட்டுமே அவர்களை மேற்கண்ட சிலை வணக்க கொள்கைகளை பின்பற்ற வைக்க முடியும் என்பதால்தான் பவுல் நியாயப்பிரமாணம் தேவையில்லை என்று கூறுகிறார். நியாயப்பிரமாணத்தை பின்பற்றிய எந்த ஒரு ஆரம்பக்கால கிறிஸ்தவனும் இயேசுவை இறைவன் என்றோ அல்லது ஆதி பாவத்தையோ நம்பவில்லை.
✍️இன்றைய கிறிஸ்தவர்களின் முன்னோடி யார் என்று பார்த்தால் யூத கிறிஸ்தவர்கள் தான் என்பதை கிறிஸ்தவ வரலாறு மிக தெளிவாக சொல்லும். யூத கிறிஸ்தவர்கள் என்றுமே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொண்டதில்லை. இயேசுவை ஏற்றுக்கொண்ட யூத கிறிஸ்தவர்கள் இயேசுவை மேசியாவாக பார்த்தாலும் கூட இயேசுவை இறைவன் என்றும் அல்லது கர்த்தருக்கு சமமானவர் என்றும் ஒருபோதும் பார்த்ததில்லை. கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே பல்வேறுபட்ட பிரிவுகள் கிறிஸ்தவர்களுக்கு இடையே இருந்தது. அதேபோன்று இயேசுவின் மார்க்கத்தை பின்பற்றிய யூத கிறிஸ்தவர்களுக்கு இடையும் பல்வேறுபட்ட பிரிவுகள் இருந்தன. யூத கிறிஸ்தவ பிரிவுகளில் எபியோனியர்கள் என்ற பிரிவும் மிக முக்கியமானதாக இருந்தது. எபியோனியர்கள் என்ற இந்த பிரிவினர் தங்களுக்கென்று சுவிசேஷத்தை வைத்திருந்தனர். அவர்கள் யூத-கிறிஸ்தவ நற்செய்திகளில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தினர். அது எபிரேய மொழியிலான மத்தேயு புத்தகம் மூன்றாம் அத்தியாயத்தில் தொடங்குகிறது; இயேசுவின் சகோதரர் யாக்கோபை பெரிதும் மதித்தனர். அவர்கள் தன்னார்வ வறுமைக்கு ஒரு சிறப்பு மதிப்பைக் கொடுத்ததாக அவர்களின் பெயர் தெரிவிக்கிறது. யூதர்கள் எவ்வாறு இயேசுவின் அதிசயக் பிறப்பை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதேபோன்று இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்ட எபியோனியர்கள் இயேசுவின் அதிசய பிறப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவின் போதனைகளைப் பின்பற்றுவதில் உண்மையாளர்களாக இருந்த யூத கிறிஸ்தவர்கள் பவுலின் போதனைகளை நிராகரித்தனர். யூத கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவான எபியோனிட்களும் பவுலை நிராகரித்தனர். இன்னும் அவர்கள் பவுலை விசுவாச துரோகியாகத் தான் பார்த்தனர்(1).
✍️யூத வெறியர்களாக சித்தரிக்கப்பட்ட எபியோனியர்களின் பற்றிய வரலாற்று பதிவு துண்டு துண்டாகவும், சர்ச்சைக்குரியதாக உள்ளதால் எபியோனியர்களைப் பற்றி அறியப்பட்ட தகவல்கள் பெரும்பாலானவை எபியோனியர்களுக்கு எதிராக வாதங்களை எழுதிய சர்ச் பிதாக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே இயேசு இருந்தார் என்ற கோட்பாடு, அவரது தெய்வீகத் தன்மை, கன்னிப் பிறப்பு, பாவ நிவாரண மரணம் மற்றும் உடலுடன் உயிர்த்தெழுதல் போன்ற நிசீன் மரபுவழிக்கு மையமான பல கட்டளைகளை எபியோனியர்கள் நிராகரித்ததாக சர்ச் பிதாக்களில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள் [2]. ஆனால் எபியோனியர்களின் சில உட்பிரிவுகள் இயேசுவின் அதிசய பிறப்பை ஏற்றுக்கொண்டனர்.
✍️ஒரே இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்ட எபியோனியர்கள், மோசேவைபோன்ற ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். எபிரேயர்களின் நற்செய்தி என குறிப்பிடப்படும் மத்தேயு நற்செய்தியின் எபிரேய (அல்லது அராமைக்) பதிப்பை மட்டுமே எபியோனியர்கள் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மத்தேயுவின் இந்த பதிப்பு, முதல் இரண்டு அத்தியாயங்களை (இயேசுவின் பிறப்பு குறித்து) தவிர்த்துவிட்டு, இயேசுவின் ஞானஸ்நானத்துடன் தொடங்குகிறது. யூதர்கள் மற்றும் புற ஜாதிகள் அனைவரும் இறைவனின் இணக்கத்தை பெறுவதற்கு மோசேக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்று நம்பினார்.
✍️எபியோனியர்களின் பெரும்பாலான நம்பிக்கைகள் இன்று இருக்கின்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு விரோதமாகவும், முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு இணக்கமாகவும் உள்ளது என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் ஆதிபாவம் மற்றும் திரித்துவம் போன்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்பது இயேசுவே அறியாத ஒன்று என்பதை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மூலமாக அறிய முடிகிறது.
தொடரும்.......
ஆதாரங்கள்:
1.Hyam Maccoby (1987). The Mythmaker: Paul and the Invention of Christianity. HarperCollins. pp. 172–183.
2. Klijn, AFJ; Reinink, GJ (1973). Patristic Evidence for Jewish-Christian Sects.

கருத்துகள்
கருத்துரையிடுக