மத்தேயு 28 19 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?

🌟 மத்தேயு 28 19 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?🌟



👉19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
(மத்தேயு 28)

✍️மத்தேயு 28 19 வசனத்தைச் சுட்டிக் காட்டி கிறிஸ்தவர்கள் திரித்துவ இறைவனை மெய்பிக்க விரும்புகின்றனர். உண்மையில் அந்த வசனமானது திரித்துவ இறைவனை ஒருபோதும் போதிக்கவில்லை. ஒரு வசனத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களும் சொல்லப்பட்டிருப்பதால் அந்த மூவரும் இறைவன் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூன்று நபரும் ஒரே தேவனாக செயல்படுகிறார்கள் என்று அந்த வசனம் சொல்லவே இல்லை.

🌟மறுப்பு 1: முரண்பாடு

👉பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
(அப்போஸ்தலர் 2 38)

✍️பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய 3 பேரின் ஞானஸ்தானம் பெறுவது என்பது இந்த மூவரையும் திரித்துவ தேவன் என்று சொல்வதாக இருந்தால், மேற்கண்ட வசனத்தில்(அப்போஸ்தலர் 2:38)  இயேசுவின் பெயரால் மட்டும் ஞானஸ்தானம் எடுங்கள் என்று சொல்லுவது திரித்துவத்திற்கு  முரணானது.

✍️அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் 👉அவருடைய நாமத்தினாலே👈 பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
(லூக்கா 24 47)

✍️அப்போஸ்தலர் நடபடிகள் மற்றும்  லூக்காவும் இயேசுவின் நாமத்தால்  ஞானஸ்தானம் கொடுக்க சொல்கிறது. இது மத்தேயு 28 19 வசனத்திற்கு முரணாக அமைந்துள்ளது. ஏனெனில் மத்தேயு 28:19 வசனமானது 3 பேரின் நாமத்தால் ஞானஸ்தானம் கொடுக்கச் சொல்கிறது. ஆனால் லூக்காவும்  அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசுவின் நாமத்தில் மட்டும் ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இது ஒரு தெளிவான முரண்பாடாகும். கிறிஸ்தவத்தின் அடிப்படையான திரித்துவத்தை விளக்கும் வசனங்களில் ஏன் இந்த முரண்பாடு? முரண்பாட்டை போதிக்கும் வசனத்தை நம்பி எவ்வாறு நம் வாழ்க்கையை இழக்க முடியும்? இந்த முரண்பாடானது மத்தேயு புத்தகத்தில் இந்த வசனம் மனிதர்களால் கறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

✍️சீடர்கள் இயேசுவின்  பெயரால் ஞானஸ்நானம் கொடுத்தனர். (அப்போஸ்தலர் 2:38, 8:12, 10:48, 19: 5);
இயேசுவின்  பெயரால் குணமாக்கினர் (அப்போஸ்தலர் 3: 6, 16; 4:10;);
இயேசுவின் பெயரால்  பிரசங்கித்தனர் (அப்போஸ்தலர் 5:28; 9:27);

🌟மறுப்பு 2: மனித இடைச்செருகல்

✍️மத்தேயுவின் ஆரம்பகால கையெழுத்துப்பிரதிகள் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற மூன்று பெயர்களை குறிப்பிடப்படவில்லை. இயேசுவின் பெயரால் ஞானஸ்தானம் கொடுக்க சொல்லியே மத்தேயுவின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசுவின் சீடர்களும் ஆரம்பகால சர்ச் பாதர்களும்  இயேசுவின் பெயரால் மட்டுமே ஞானஸ்தானம் கொடுத்துள்ளனர்.

✍️வரலாற்று ரீதியாகவும் இயேசுவின் சீடர்கள் வழியாகவும், இயேசுவின் பெயரால் மட்டுமே ஆரம்பகாலத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பிற்காலத்தில்தான் பிதா பரிசுத்த ஆவி என்ற  இரண்டு பெயர்களும் மத்தேயு சுவிசேஷத்தின் கையெழுத்துப் பிரதிகளில் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

✍️யூசிபியஸ் (Eusebius c. 260 - c. 340) செசரியாவின் பிஷப் ஆவார் மற்றும் இவர் "சர்ச் வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

✍️இவரது  எழுத்து பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பிரசங்க வரலாறு என்ற புத்தகம் மிக முக்கியமானது. அந்த புத்தகத்தில் இயேசுவின் சீடர்களான முதல் அவரது காலம் வரையிலான பிரசங்க வரலாற்றை எழுதியுள்ளார். அதில் பல பைபிள் வசனங்களை அவர் குறிப்பிட்டு இருந்தாலும் அதில் மிக முக்கியமானது மத்திய 28:19 வசனமாகும். அந்த வசனத்தை குறிப்பிடும் இடமெல்லாம் இயேசுவின் பெயரால் மட்டுமே ஞானஸ்தானம் எடுக்க சொல்கிறாரே தவிர எந்த ஒரு இடத்திலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூன்று பேரின் ஞானஸ்தானம் எடுக்க சொல்லவில்லை. ஆக மூன்று நூற்றாண்டுகள் வரை இயேசுவின் பெயரால் மட்டுமே ஞானம்நானம்  எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது அதுமட்டுமல்ல மத்தேயு 28 19 வசனமானது இயேசுவின் பெயரால் மட்டுமே ஞானஸ்தானம்  எடுக்க சொல்வதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
(பிரசங்கம் வரலாறு, 3வது புத்தகம்  5வது அத்தியாயம்,  2 வது பிரிவு, ஆரம்பகால கிறிஸ்தவர்களின் யூத துன்புறுத்தல்)

✍️மேலும் இவரது புத்தகத்தை ஆய்வு செய்த Fredrick C. Conybeare  என்ற ஆய்வாளரும் மத்திய 28:19 வசனத்தை குறிப்பிடும்போது இயேசுவின் பெயரால் மட்டுமே ஞானஸ்நானம் எடுக்க சொல்லி இருப்பதாக கூறுகிறார்.

👉(மத்தேயு 28:19, வசனத்தின் யூசெபியன் படிவம், பக். 275-288)

✍️இவ்வாறு வரலாற்று ரீதியாக 28 19 வசனமானது மனிதர்களால் திருத்தப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மனிதர்களால் திருத்தப்பட்ட வசனத்தை கொண்டு திரித்துவத்தை நம்புவது என்பது முட்டாள்தனமானது.

🌟மறுப்பு 3: சுயமாக அதிகாரம் இயேசுவுக்கு இல்லை.

✍️எந்த வசனத்தையும் அதன் முன் பின் வசனங்களோடு படிக்கும்போது அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். மத்தேயு 28 18 வசனமானது இயேசுவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. கர்த்தரால் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஒரு நபர் எவ்வாறு கர்த்தருக்கு சமமாக இருக்க முடியும்? அதிகாரம் கொடுத்தவர் இறைவனாக இருக்க வேண்டும் அதிகாரம் வாங்கியவர் அவரது ஊழியக்காரனாக இருக்க வேண்டும்.

👉18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(மத்தேயு 28)

🌟மறுப்பு 4:

👉ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 2 36)

✍️மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் கர்த்தரால் ஆண்டவராகவும் மேசியாகவும் ஆக்கப்பட்டுள்ளார் என்று சொல்கிறது. இவ்வாறு கர்த்தரால் ஆண்டவராகவும் மேசியாவாக ஆக்கப்பட்ட இயேசு எப்படி கர்த்தருக்கு சமமாக இருக்க முடியும்? இன்னும் திருத்துவத்தில் உள்ள இரண்டாவது நபராக எவ்வாறு  இயேசு இருக்க முடியும்?

🌟மறுப்பு 5: நாமம் என்ற ஒருமை சொல் திரித்துவத்தை குறிக்காது

👉26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
For whosoever shall be ashamed of me and of my words, of him shall the Son of man be ashamed, when he shall come in #his_own_glory, #and_in_his_Father's, #and_of_the_holy_angels.
(Luke 9)

✍️மேற்கண்ட வசனத்தில் பிதா குமாரன் #பரிசுத்த_வானவர்கள் ஆகியோர்களின் மகிமையை குறிக்க  மகிமை(#glory) என்ற ஒருமை சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருமை சொல்லை பைபிள் தமிழ் மொழிப்பெயர்ப்பை காட்டிலும் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் தெளிவாக காண முடியும். மேற்கண்ட வசனத்தில் பிதா குமாரன் #வானவர்கள் என அனைவரும் மகிமையோடு வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனத்தில் வானவர்கள் என்று பன்மையில் சொல்லப்பட்டுள்ளது அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தேவதூதர்கள். இந்த வசனத்தில் பிதா குமாரன் பரிசுத்த வானவர்கள் என்ற அனைவருக்கும் மகிமை என்ற ஒருமை சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இதில் உள்ள அனைவரையும் இறைவன் என்று சொல்லமுடியுமா? அவ்வாறு சொன்னால் தேவ தூதர்கள் அனைவரும் இறைவன் என்று ஆகிவிடுவார்கள். இதனால் மத்தேயு 28 19ம் வசனத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என மூன்று பேருக்கும் நாமம் என்ற ஒருமை சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த மூவரையும் இறைவன் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அந்த வசனத்தை சொல்லப்பட்ட மூன்று பேரையும் இறைவன் என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் மேற்கண்ட வசனத்தில்(லூக்கா 9 26) சொல்லப்பட்டுள்ள பிதா குமாரன் பரிசுத்த வானவர்கள் என அனைவரையும் இறைவன் என்று எடுத்துக்கொள்ள வேண்டி வரும் அதாவது பல தெய்வக் கோட்பாட்டை பைபிள் போதிக்கிறது என்றாகிவிடும்.  உண்மையில் பைபிள் பலதெய்வ கோட்பாட்டை போதிக்கவில்லை. அதே போன்று மத்தேயு 28 19 வசனமும் திரித்துவத்தை போதிக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்