முஸ்லீம் அல்லாதவர்களுடன் நட்பு பேணக்கூடாது என்று குர்ஆன் போதிக்கிறதா?

⭐⭐முஸ்லீம் அல்லாதவர்களுடன் நட்பு பேணக்கூடாது என்று குர்ஆன் போதிக்கிறதா?⭐⭐



▶️முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
(அல்குர்ஆன் 3:28)

✍முஸ்லீம் அல்லாதவர்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வசனமாக மேற்குறிப்பிட்ட வசனம் உள்ளது. இஸ்லாமிய விரோதிகள் மேற்கண்ட வசனத்தை திரித்து மக்களிடம் இஸ்லாத்திற்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்வதை நாம் கண்டு வருகின்றோம். எந்த புத்தகத்தையும் முழுமையாக படிக்கும்போது தான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை முழுமையாக உள்வாங்க முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆனை முழுமையாக படித்த ஒருவர் மேற்கண்ட வசனம்(குர்ஆன் 3:28) இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் கூட்டத்துடன் நட்பு பேணக்கூடாது என்று சொல்வதாக தான் புரிந்து கொள்வர்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


‍‍‍▶️நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
(அல்குர்ஆன் 60:9)

✍மார்க்க விஷயத்தில் முஸ்லீம்களிடம் போர் செய்து, அவர்களை தங்களது சொந்த வீட்டை விட்டும் வெளியேற்றியவர்கள் மற்றும் இஸ்லாமிய விரோதிகளுக்கு உதவி செய்பவர்கள் இவர்களுடன் நட்பு பேணுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

▶️ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு  அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
(அல்குர்ஆன் 60:1)

மேற்கண்ட வசனத்தின் படி போர்க் காலத்தில் இஸ்லாமிய விரோதிளுடன் ஏன் நட்பு பாராட்டக் கூடாது என்பதை தெளிவாக கூறுகிறது. அதாவது இஸ்லாமிய அரசாங்கத்தின் ரகசியங்களை எடுத்து சொல்லும் அளவுக்கு இஸ்லாமிய விரோதிகளை உற்ற நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள் என்று முஸ்லீம்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.  வெவ்வேறு திசைகளில் செல்லும் இரண்டு குதிரையில் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது. அதே போன்று தான் முஸ்லிம்களுடனும் இஸ்லாமிய விரோதிகளுடனும்  ஒருவரால் ஒரே நேரத்தில் நட்பு பாராட்ட முடியாது என்பதனால் தான் அல்லாஹ் முஸ்லீம்களை இஸ்லாமிய விரோதிகளுடன் ரகசியங்களை பகிரும் அளவுக்கு நட்பு பாராட்டக் கூடாது என்று சொல்கின்றான்.


தனது நாட்டு பிரஜை எதிரி நாட்டுடன் தனது ரகசியங்களை பகிர்ந்து கொள்ள எந்த நாடும் அனுமதிக்காது. ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் பிரஜைகளிடம் எதிர்பார்க்கும் ஓன்றை தான் இஸ்லாமும் தனது விசுவாசிகளிடம் எதிர்பார்க்கிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍அதே சமயம் இஸ்லாமிய விரோதிகள் அல்லாத மற்ற முஸ்லீம் அல்லாதவர்களுடன் நட்பு பேணுவதை அல்லாஹ் தடை செய்யவில்லை.

▶️நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
(அல்குர்ஆன் 60:9)


▶️மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 60:8)

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்காத மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதையும், அவர்களுக்கு நன்மை செய்வதையும் அல்லாஹ் ஊக்குவிக்கவே செய்கிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்