ஆப்ராஹமின் மார்க்கம் இஸ்லாம்


ஆப்ராஹமின் மார்க்கம் இஸ்லாம்





கிறிஸ்தவர்கள் இஸ்லாமை பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விசயங்களில் மிக முக்கியமானது அல்லாஹ் என்ற நாமம் ஆகும்.  யூத கிறிஸ்தவர்கள் வணங்கும் இறைவன் அல்லாத வேறொரு நபரை தான்  முஸ்லீம்கள் வணங்குகிறார்கள் என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல.
அரபுக்களின் இறைவன் அல்லாஹ் என்றும், முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்விற்கும் தாங்கள் வணங்கும் இறைவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கிறிஸ்தவர்களில் சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். 

உண்மையில் இந்த கூற்று அவர்களின் நம்பிக்கைக்கு முரணாகவே அமையும்.  ஏனெனில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவனின் நாமங்கள் எதுவும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படாமல் இறைவனை குறிக்க ஏலி, தியோஸ் போன்ற கிரேக்க சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள இறைவனும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவனும் வேறு வேறு நபர்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அறியாமையோ அதே   காரியத்தை தான் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக செய்கின்றனர். 

பைபிளில் தேவன் இஸ்ரவேவர்களின் தேவன் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்வதால் இஸ்ரவேல் அல்லாத மற்ற மக்களுக்கு கர்த்தர் இறைவன் இல்லை என்று சொல்வது போன்று உள்ளது இவர்களின் இந்த அறியாமை.
இறைவன் என்பவன் குறிப்பிட்ட ஒரு இனத்தோடு அல்லது  மொழியோடு தன்னை சுருக்கி கொள்ளவில்லை என்ற உண்மையை கிறிஸ்தவர்கள் அறியாதது தான் இவர்களின் இந்த அறியாமைக்கு காரணம்.
நோவாவும் ஆப்ராஹமும் மோஸஸூம் தாவூதும் இயேசுவும் வணங்கி வந்த அந்த ஒரே இறைவனை தான் முஸ்லீம்களும் வணங்கி வருகின்றனர். யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒரே இறைவனையே வணங்கி வந்த போதிலும், இறைவன் எப்படிப்பட்டவன் என்பதை புரிந்து கொள்ளும் விஷயத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு. உதாரணத்திற்கு கிறிஸ்தவர்கள் சொல்லும் திரித்துவ இறைவனை முஸ்லீம்களும் யூதர்களும் ஏற்று கொள்வதில்லை. இருந்தபோதிலும் யூதர்கள் வணங்கும் அதே இறைவனை தான் நாங்களும் வணங்குகின்றோம் என்று கிறிஸ்தவர்கள் சொல்லி கொள்வார்கள்.  அதே சமயம் யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கு இறைவன் பற்றிய புரிதலில் ஒற்றுமைகள் நிறைய உண்டு.  இவ்வாறு இறைவனை பற்றிய புரிதலில் இந்த மூன்று சமயங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்த போதிலும் இவைகள் ஒரே இறைவனையே வணங்கும் ஆப்ராஹமின் மதங்களாகவே  பார்க்கப்படுகின்றன.


இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
(அல்குர்ஆன் 3:67)


அரபு யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைத்த போதிலும் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வை கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை. முந்தைய வேதத்தில் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட நாமங்களுக்கும் அல்லாஹ் என்ற நாமத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்த போதிலும் கிறிஸ்தவர்கள் மனம் அதை குறித்து சிந்திப்பதில்லை. முந்தைய வேதங்களில் சொல்லப்பட்ட இறை நாமங்களான எலோஹிம், எல், எலாஹ் போன்ற நாமங்கள் அல்லாஹ் என்ற நாமத்துடன் தொடர்பில் உள்ள நாமங்களாகும்.   அதுமட்டுமல்ல இறைவனால் அனுப்பப்பட்ட முந்தைய தீரக்கதரிசிகள் மற்றும் வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக குர்ஆன் உள்ளது.


(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:163-164)

முந்தைய வேதமான பைபிள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட வழிகாட்டுதல். ஆனால் குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி வேதமாகும். அந்த வேதத்தின் பக்கம் உங்களை நாங்கள் அழைக்கின்றோம். ஆப்ராஹமும் தாவூதும் மோஸஸூம் இயேசுவும் வணங்கிய அந்த ஏக இறைவனின் பக்கம் வாருங்கள். 


"நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல, இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
(அல்குர்ஆன் 12:38)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்