முஹம்மது நபியவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை இல்லறத்திற்கு கட்டாயப்படுத்தினாரா?

திரித்துவத்திற்கு ஆதாரம் தேடி பைபிள் வசனத்துக்கு பொய்யான விளக்கம் சொல்லி அலையும் கிறிஸ்தவர்கள், இப்போது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விசயங்களை தவறான விளக்கம் கொடுத்து திரித்து இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர். இவர்களது நோக்கம் உண்மையில் சத்தியத்தை அறிந்து அதன் பக்கம் மற்றவர்களை அழைப்பது அல்ல, மாறாக சத்தியத்தை அறிந்து அதனை விட்டும் மக்களை திசை திருப்புவது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நபியை பெண் மோகம் கொண்டவராக சித்தரிக்கும் வேலையில் ஒரு ஹதிஸை எடுத்து அதற்கான விளக்கத்தை திரித்து கூறி மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த ஹதில்:
5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)

இந்த ஹதிஸை ஆதாரமாக எடுத்து கொண்டு நபி அவர்கள் ஒரு அந்நிய பெண்ணிடம் சென்று "உன்னை அர்ப்பணித்து விடு" என்று சொன்னதாகவும், அந்த பெண் அதற்கு உடன்படாமல் அவரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடியதாகவும் சொல்லி நபி அவர்களை பெண் மோகம் கொண்டவராக சித்தரிக்கும் வேலையை செய்கின்றனர். நபியவர்களுக்கும் அந்த பெண் மனைவி அல்ல, அவள் ஒரு அந்நிய பெண் என்பதே இவர்களின் மிக முக்கிய குற்றச்சாட்டு. இவர்களின் இந்த குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கும் உண்மை அடுத்தடுத்த ஹதிஸ்களிலேயே இருந்தும் கூட அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் நபியின் மீது அவதூறு சொல்கின்றனர்.
5256 5257. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
மேற்கண்ட ஹதிஸில் நபியவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்பவரை மணமுடித்து இருந்தார்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டும் அந்த உண்மையை ஏற்றுக்க கொள்ள கிறிஸ்தவர்களுக்கு மனம் வரவில்லை.
தனது மனைவியாக இருந்தாலும் இல்லறத்திற்கு விருப்பம் இல்லை என்றால் அந்த பெண்ணை திருப்பி அனுப்பி வைக்கும் நபியவர்களின் பரந்த மனம் அவர் இந்த உலகத்தின் மிகச்சிறந்த முன்மாதிரி என்பதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல வெறுமனே திருப்பி அனுப்பாமல் இரண்டு ஆடைகளையும் அன்பளிப்பு செய்து அனுப்பி வைக்கும் அளவுக்கு தயாளக் குணம் கொண்டவர் என்பதை என்பதை உறுதிப்படுத்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக