குர்ஆன் எழுதி வைத்த தாள்களை ஆடு தின்றதா?
☉☉குர்ஆன் எழுதி வைத்த தாள்களை ஆடு தின்றதா?☉☉
✍கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை குறை சொல்ல பலவீனமான ஹதிஸ்களின் பக்கம் ஓடுவது வாடிக்கையான ஒன்று. பலவீனமான பைபிளை படித்து பழகி போன கிறிஸ்தவர்கள் குர்ஆனை குறை சொல்ல மீண்டும் பலவீனமான ஹதிஸின் பக்கம் சென்றுள்ளனர். அந்த ஹதிஸ் பற்றி ஆராய்வோம்.
➡️கல்லெறிதல் மற்றும் வயது வந்தவர் பால்குடி சம்பந்தமான வெளிப்படுத்தப்பட்ட சட்டத்தை தாளில் எழுதி கட்டிலில் கீழ் வைத்திருந்தோம். அல்லாஹ்வின் தூதர் இறந்த சமயத்தில் நாங்கள் அதில் முழ்கியிருந்தபோது ஆடு புகுந்து அந்த தாள்களை தின்று விட்டது.
(1944, சுனன் இப்னு மாஜா)
(1944, சுனன் இப்னு மாஜா)
✍முதலாதவது, இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானது. ஏனெனில் இந்த ஹதிஸ் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற முஹம்மது இப்னு இஸ்ஹாக் என்பவர் ஹதிஸ் கலையில் பலவீனமானவர் என்று அறியப்படுபவர்.
✍இரண்டாவதாக, எழுதப்பட்ட குர்ஆன் தனிப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மட்டும் தொகுக்கப்படவில்லை. மனனம் செய்யப்பட்ட சஹாபாக்கள் சாட்சிகளின் மூலமாகவும் தொகுக்கப்பட்டது. குர்ஆனை மனனம் செய்த சஹாபாக்கள் ஒருவர் இருவர் அல்ல, அவர்களில் பலர் (ஆயிரக்கணக்கில்) குர்ஆனை மனனம் செய்து இருந்தனர். இவ்வாறுகல்வியாளர்களின் உள்ளங்களில்குர்ஆன் பாதுகாக்கப்படுதாகக் குர்ஆனும் கூறுகிறது.
☞அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
குர்ஆன் 29:49
குர்ஆன் 29:49
✍மூன்றாவது இதே ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதிஸில் குர்ஆனில் கடைசியாக இறக்கப்பட்ட வசனம் சூரத்துல் மாயிதாவில் ஹலால் ஹராம் பற்றி பேசும் வசனத்தை குறிப்பிடுகின்றார்.
☞ஜூபைர் இப்னு நுஃபைர் கூறுகிறார்:
நான் ஹஜ் செய்து முடித்துவிட்டு வரும்போது, என்னை கண்ட 'ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்: ஓ ஜபீர்! அல் மாயிதாவை நீங்கள் படிக்கிறீர்களா? நான் சொன்னேன்: ஆம். அவர் கூறினார்: இது கடைசியாக வெளிப்படுத்தப்பட்ட சூரா. அதில் ஹலால் என்று சொல்லப்பட்டதை ஹலால் என்றும் ஹராம் என்று சொல்லப்பட்டதை ஹராம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். "[அஹ்மத்: 25588].
▶கடைசியாக இறக்கப்பட்ட வசனம்
☞இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்.
குர்ஆன் 5:3
குர்ஆன் 5:3
✍ நான்காவதாக முஹம்மது நபி இறைச் செய்தியை முழுமையாக மக்களிடம் சமர்பித்து விட்டார்கள் என்பதற்கு நபியின் ஹஜ் இறுதி பேருரையின் போது மக்கள் கூட்டாக சாட்சியம் பகர்ந்துள்ளார்கள்.
4403. 'அறிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் உங்களின் இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகிறதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, 'நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் (சேர்த்து விட்டீர்கள்)' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நீ சாட்சியாக இரு' என்று மும்முறை கூறிய பின், 'உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ!' அல்லது 'அந்தோ பரிதாபமே!' கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
✍ஐந்தாவதாக குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் தன்னளவில் வைத்துள்ளான்.
☞அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக இந்த நினைவூட்டலை நாமே இறக்கினோம். இதனை நாமே பாதுகாக்கவும் செய்வோம். (அல்குர்ஆன் 15.9)
நிச்சயமாக இந்த நினைவூட்டலை நாமே இறக்கினோம். இதனை நாமே பாதுகாக்கவும் செய்வோம். (அல்குர்ஆன் 15.9)
✍குர்ஆன் வாய்மொழியாகவும் எழுத்து வழியாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட்ட நூல் உலகில் வேறு எதுவும் இல்லை. ஒன்றை ஒன்று அதன் ஆதாரத்தன்மைக்குச் சாட்சியாக, உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகில் இந்தப் பிரதி மட்டுமே வார்த்தைக்கு வார்த்தை மாற்றமுறாமல் அப்படியே மனனம் செய்யப்பட்டு உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களால் ஓதப்படுகிறது. இந்த வகையில் குர்ஆன் தன்னில் ஓர் அற்புதமாக நிலைக்கிறது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குசிறப்பு.மேலும்,நமக்கு கிறித்தவர்களுக்கும்,நாத்திக சங்கிகளுக்கு பதிலளிக்கும் விதமாக யூடியூப் சேனல் ஒன்று அவசியம்.இது காலத்தின் கட்டாயம்.
பதிலளிநீக்கு