பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என்று குர்ஆன் சொல்கிறதா?


முந்தைய வேதமான பைபிள்  கறைப்பட்டுவிட்டது என்று குர்ஆன் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தை பாதுகாத்து கொள்ள குர்ஆனின் உதவியை நாடுகின்றனர். 






இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன் 18:27)

மேற்கண்ட வசனத்தை சுட்டிகாட்டி அல்லாஹ்வின் வார்த்தையை யாராலும் மாற்ற முடியாது.  எனவே அல்லாஹ்வின் வார்த்தையான பைபிளை யாராலும் மாற்ற முடியாது என்றே குர்ஆன் சொல்வதாக விஷம பிரச்சாரம் செய்கின்றனர். அதுக்குறித்து  இந்த பதிவில் காண்போம்.
மேலேயுள்ள வசனத்தில் அல்லாஹ்வுடைய வார்த்தைகளை மாற்றுபவர் யாருமில்லை என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். குர்ஆனை முழுமையாக படிக்கும்போது தான் அதன் உள் அர்த்தத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அதாவது அல்லாஹ்வின் முடிவுகள் அல்லது கட்டளைகள் என்பதை யாராலும் மாற்ற முடியாது என்ற அர்த்தத்தில் தான் அந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு முந்தைய வேதங்களான தோரா இன்ஜீல் ஜபூர் போன்றவை யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் சிதைக்கப்பட்டாலும் அதில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசினங்கள், கட்டளைகள், நியதிகள், தீர்க்கதரிசிகள் வருகை போன்றவை நடந்தே தீரும். அதை மாற்றும் சக்தி எவருக்கும் இல்லை என்ற அர்த்தத்தில் தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள வேதத்தில் தவறுதலாக அச்சு பிழை ஏற்படுவதால் இறைவனின் வார்த்தைகளை மாற்றி விட்டோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாளதனமோ அது போன்று தான் முந்தைய வேதங்களை இஸ்ரவேலர்கள் கறைப்படுத்தியதால் இறைவனின் வார்த்தைகளை மாற்றி விட்டோம் என்று சொல்வதும்.

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்  6:115)

அல்லாஹ்வின் வார்த்தை என்பது உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையடைந்தது. வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்க வேண்டிய சம்பவங்கள் அவ்வேதம் மனிதர்களால் மாற்றத்திற்குட்பட்டு இருந்தாலும் அந்த சம்பவம் நடக்க வேண்டிய காலத்தில் நடந்தே தீரும் என்பதையே அல்குர்ஆன்  6:115 வசனம் நமக்கு சொல்கிறது.
அதே சமயம் இஸ்ரவஸர்களான யூதர்ளும் கிறிஸ்தவர்களும் தங்களது வேதத்தில் உள்ள வசனங்களை திருத்தினார்கள் என்ற உண்மையையும் முன் வைக்கிறது.

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அன்றியும் எவர்கள் தங்களை, 

"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
(அல்குர்ஆன் 5:13-14)

வேதக்காரர்களால் முந்தைய வேதங்கள் கறைப்படுத்தப்பட்டு இருந்தாலும் வேதங்கள் அனைத்தும் லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(அல்குர்ஆன்  57:22)
பூமியில் உள்ள வேதங்களில் ஒன்றை எடுத்து அதனை எரித்துவிட்டு இறைவனின் வார்த்தைகளை அழித்து விட்டேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதே போன்று முந்தைய வேதங்கள் இஸ்ரவேலர்களால் கறைப்படுத்தப்பட்டு இருப்பதால் இறைவனின் வார்த்தைகளை அழித்து விட்டோம் என்று சொல்வது. ஏனெனில் இறைவனின் வார்த்தைகள் அனைத்தும்  லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அவனது வார்த்தைகள் நிறைவேறக்கூடியதாகவும் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்