அழிக்கப்படும் இறைவனின் இயற்கை அருளும் மனிதனின் வேண்டுதலும்

🍃அழிக்கப்படும் இறைவனின் இயற்கை அருளும் மனிதனின் வேண்டுதலும்🌿





நமது தேவைகளுக்காகவும், விருப்பத்திற்கு உரியவர்களுக்காகவும் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும்
 உழைத்து விட்டு அதனினும் அதிக துஆக்களை அல்லாஹ்விடம் கேட்கின்றோம். அவ்வாறு கேட்க்கப்படும் துஆக்கள் நிறைவேறாமல் போகும்
போது மனம் உடைந்து இனி துஆ கேட்கவே மாட்டேன், ஏமாற்றங்கள் போதும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றோம். அப்படி இருப்பவர்களிடம் அல்லாஹ்வின் கருணை வேண்டாமா என்று கேட்டால்
வேகமாக அல்லாஹ்வின் கருணை நிச்சயமாக வேண்டும் என்கின்றனர்.

ஒரு குழந்தை பிடிக்காத, தகாத  செயல்களை செய்து விட்டு அவன் பெற்றோரிடம் ஒன்றை  கேட்கும் போது அது நிராகரிக்கப்படும். அப்படி தான் விரும்பியதுக்  கிடைக்காத போது வரும்
 கோபத்தின் வெளிப்பாடுப் போன்றுள்ளது நமது ரப்பை நோக்கிய நம் செயல்பாடுகள்.
"நம் வாழ்வில் நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை தான் பெறுவோம்". அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், நம் கடமை மற்றும்
 உரிமைகளையும் முறையாக உணர்ந்து வாழ்வது நம்பிக்கையாளர்களின் கடமையாகும். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட இயற்கை வாழ்வில் நாம் உரிமையுடன் வாழ்கின்றோம் அதைப் போல் சக மனிதர்களும் நம் குடும்பம் மற்றும் நண்பர்களும் வாழ்கின்றார்களா என்று அறிந்துக் கொள்ள முடியாத மனித தன்மையற்ற செயல்களில் இருந்து வெளிவர வேண்டும். நல்லாடியார்களின் செயல்களில் ஒன்று  நமக்கு அல்லாஹ் தந்த இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பது ஆகும். ஆனால் நல்லதோர் வருவாய்க்காக  நச்சுத்தன்மை வாய்ந்த வேதியியல் காரணிகளைப் பயன்படுத்துவதுக் கூட அல்லாஹ்வின் அருளாகிய இயற்கையை மாசுப்படுத்தும் என்று அறிந்தும்
 துணிந்து செய்வதனைப் பார்த்தும் அமைதியாக  இருக்கின்றோம் .

♻இயற்கையில் நமது உடல் அமைப்பும், சுற்றுச்சூழலும் நமது உடல் நோய்களை தானாகவே சரி செய்துக் கொள்ளும்
 தன்மைப் பெற்றது.

♻ஆனால் நாம் தான் அதனை கடினாமாக்கிக் கொண்டிருக்கின்றோம் . 

மிக தெளிவான உதாரணம் மது அருந்தும் ஒருவரின் உடல் நிலையாகும்.  ஹராம் (விலக்கப்பட்டது) என்று அறிந்தும் அதிக அளவில் மதுவினை எடுத்து கல்லீரல் பாதிப்பைப் பெற்றதன் பின் அல்லாஹ் தனக்கு துன்பம் கொடுத்து விட்டதாக எண்ணி வருந்துகின்றான். தன் இளமைக்காலத்தில் குடும்பத்தை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளதவன் முதுமையில் அல்லாஹ்வைக் குற்றம் கூறி தனிமையில் இறக்கின்றான்.  தனக்கு ஒரு நோய் வரும்போதும் துன்பம் நிகழும்போதும் அல்லாஹ்வை அழுது தொழுகின்றோம். அல்லாஹ் மிக்க கருணையுடையவன். நம்மை நேர் வழியில் செலுத்த நம் வேண்டுதல் ஏற்று அருள் புரிகின்றான். ஆனால் நாமோ மீண்டும் அவனுடைய அருளை மாசுப்படுத்தவே நாடுகின்றோம் .

💎மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன்: 3:110)

✍இறை நம்பிக்கைக் கொண்டோர் தன்னைப் போன்ற சக மனிதர்களுக்காகவும், தனக்கு வழங்கப்பட்ட இயற்கை எழிலைப் பேணி அடுத்தத் தலைமுறைக்கு எடுத்து செல்லும் நல்லடியானாக இருக்க வேண்டும். வாளால் பரப்ப பட்டது அல்ல இஸ்லாம், அன்போடும் , ஒற்றுமையோடும் சமூக நீதிக்காகவும், வன்முறையை எதிர்த்து, இயற்கையை பாதுகாப்பதற்காகவும் போராட வேண்டும் என்ற செயல்பாட்டால் உயர்ந்தது என்று நம் செயல்பாட்டால்  வாழ்ந்துக் காட்ட வேண்டியது ஓவ்வொரு இறை அடியானுக்கும் உரியது . 

💎"இறை நம்பிக்கையில் உறுதிக் கொண்டோர் ஒரு தவறு நடக்கும் போது கைக் கொண்டுத் தடுக்க வேண்டும். இல்லையேல் நாவினைக் கொண்டு தடுக்க வேண்டும். அதற்கும் வலிமை இல்லை எனில் இறை நம்பிக்கையின் இறுதியாக அத்தவறை முழு மனதுடன் வெறுத்து விட வேண்டும்"(முஸ்லீம்)

✍தனது சுய இலாபத்திற்காக பூமியில் நஞ்சினை விதைத்து பிறர் முதுகில் ஏணிப் போல் ஏறி செல்பவரின் துஆ என்றும் நிறைவேற்றப்படாது. ஆனால் அல்லாஹ்வின் வரம்பை மீறாதவரின் துஆ நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்.

💎நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
(அல்குர்ஆன்: 23:51)

💎நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
(அல்குர்ஆன்: 2:172)

✍தமக்கு ஒரு பிரச்சனை வரும் போது நேர் வழி அல்லாமல் எளிய வழியினைத் தப்பிக்க நாடுவதும், அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தரும் காரியங்களை தள்ளிப்போடுதலும் நம்பிக்கையாளர்களின் செயல் இல்லை .

✍அல்லாஹ்வின் கருணை எங்கும் நிறைந்துள்ளது. இதனை உணர்ந்து அல்லாஹ்வின் அருளை பேணி பாதுகாத்து  அல்லாஹ்வை நெருங்க முற்ப்படுவதும் நம்பிக்கையாளரின் மிக முக்கியக் கடமை ஆகும். அதன் நற்கூலி அல்லாஹ்விடமே உள்ளது.

💎அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(அல்குர்ஆன்: 40:17)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்