குர்ஆன் தூதரின் சொல்லா??

குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை.







Al-Haqqah 69:40

إِنَّهُۥ #لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Tamil - Jan Trust Foundation

➡️நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின்  சொல்லாகும்.

✍இந்த வசனத்தில் கண்ணியமிக்க தூதரின் சொல் என்பதை குறிக்க 'கவ்லு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தை என்பதை குறிக்க 'கலாமல்லாஹ்' என்ற சொல் மூல மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

✍அல்லாஹ்வின் வார்த்தை(கலாமல்லாஹு) என்பதற்கும் தூதரின் சொல்(கவ்லு ரஸூலின்) என்பதற்கும் தனித்தனி அரபுச் சொற்களே பயன்படுத்தப்பப்டுள்ளன.  இவை இரண்டும் வெவ்வேறு  அர்த்தங்கள் கொண்டவை.

➡️At-Taubah 9:6

وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ #كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ

English - Sahih International

And if any one of the polytheists seeks your protection, then grant him protection so that he may hear the #words of Allah . Then deliver him to his place of safety. That is because they are a people who do not know.

Tamil - Jan Trust Foundation

➡️(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய  வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

✍மேலேயுள்ள இந்த வசனத்தில்  அல்லாஹ்வின் வார்த்தை என்பது குறிக்க கலாமல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது.

✍வார்த்தை அல்லாஹ்வுடையது என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் வேதம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைத் தன் குரலில் வாசிப்பவர் என்ற அடிப்படையில் ஜிப்ரீலின் கூற்று என்றும் சொல்லப்ப்டடுள்ளது.

✍இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

➡️Al-Ahzab 33:32

يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِۚ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ #بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

English - Sahih International

O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in #speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech.

Tamil - Jan Trust Foundation

➡️நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

✍பேச்சு என்பதை குறிக்க தான் இங்கு கவ்லு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை மேலேயுள்ள வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

✍இந்த விளக்கத்தில் இருந்து  குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்