கர்த்தரின் தாசன் இயேசு
கர்த்தரின் தாசன் இயேசு
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசினங்கள் அவரை கர்த்தரின் தாசன் என்றே அடையாளப்படுத்துகின்றன.
ஏசாயா
42:1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
கர்த்தரின் ஆவி இயேசுவின் மேல் இருப்பதால் இயேசுவை இறைவன் என்றும், திரித்துவத்தின் இன்னொரு ஆள் தத்துவம் என்றும், கர்த்தரும் இயேசுவும் ஒருவர் தான் என்று சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு இந்த வசனம் சவுக்கடி தருகிறது. தன் ஆவியை இயேசுவின் மீது அமரப் பண்ணுவேன் என்று சொல்லும் கர்த்தர் இயேசுவை தன்னுடைய தாசன் என்று மிக தெளிவாக சொல்லியுள்ளார். இதன்மூலம் இயேசுவும் கர்த்தரும் ஒருவரல்ல என்பதையும் இயேசு கர்த்தரின் தாசன் என்பதையும் புரிந்து கொள்ளலாம்
49:3. அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
49:4. அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.
ஏசாயா 49 ல் தனது நியாயத்தீர்ப்பு கர்த்தரிடமே உள்ளது என்று சொல்லும் மேசியாவான இயேசு தனது செயல்களுக்கான பலனும் கர்த்தரிடமே இருக்கிறது என்று தெளிவாக சொல்லுகிறார். நாளை மறு உலக வாழ்க்கையில் இவ்வுலகில் செயல்களுக்கான கூலியையும் அதற்கான நியாயத்தீர்ப்பையும் தனது இறைவனிடம் எதிர்பார்த்திருக்கும் ஒருவரை இறைவன் என்று எந்த வகையிலும் சொல்ல முடியாது.
யோவான்
5:30. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
தான் சுயமாக ஒன்றையும் செய்யாமல் தன்னை அனுப்பிய பிதாவின் சித்தப்படியே செயல்படுவதால் தன் தீர்ப்பு நீதியாக இருக்கிறது என்று சொல்லும் இயேசு தன்னை பிதாவின் தாசனாகவே அடையாளப்படுத்துகிறார்.
யோவான்
14:31. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
பிதாவின் கட்டளையின்படியே தான் செயல்படுவதாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் இயேசுவை இறைவன் என்று சொல்வது பைபிளையே அசிங்கப்படுத்துவதற்கு சமம் என்று தான் சொல்ல வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக