இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு
⭐⭐இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு⭐⭐
✍அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
✍நம்முடைய ஆதி பிதா ஆதாம் (அலை) மற்றும் அன்னை ஏவாள் (அலை) அவர்கள் செய்த முதல் பாவத்தின் (Original Sin) காரணமாக இறுதி நாள் வரை அவர்களுடைய சந்ததியினர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பாவத்துடனே பிறக்கின்றன என்றும் நம்முடைய பாவங்களை நீக்குவதற்காகவே இயேசு நாதர் சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. மேலும் இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாகவும் இருக்கிறது.
✍ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் பாவமற்ற நிலையில் முஸ்லிமாகவே பிறக்கிறது என்றும் அக்குழந்தையின் பெற்றோர்களே அக்குழந்தையை யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது இன்ன பிற மதத்தினராகவோ வளர்க்கிறார்கள் என்றும் கூறுகிறது.
✍மேலும் இஸ்லாம் மார்க்கம் என்பது இயற்கையான மார்க்கம் என்பதால் மனிதனின் இயற்கை குணங்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் என்பவன் பாவம் செய்யும் குணமுடையவன் என்றும் ஆனால் எவர்கள் தம்முடைய பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறாரோ அவரே மனிதர்களில் சிறந்தவர் என்றும் கூறுகிறது.
✅‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.
✍ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்களுடைய பாவச் சுமையை அவர்களின் சந்தததியினர் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கிறிஸ்தவம் கூறிக்கொண்டிருக்க இஸ்லாம் மார்க்கமோ ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்றும் அதனால் இறைவன் அவர்களை மன்னித்து விட்டான் என்றும் கூறுகிறது. மேலும் அவர்களின் சந்ததியினர் செய்கின்ற பாவங்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோரினால் இறைவன் மன்னித்து விடுகிறான் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான் : -
➡️“அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அறிந்து) கொண்டார். (அந்தச் சொற்கள் முலம் மன்னிப்பு கேடடார்) அவரை அவன் மன்னித்தான்” (அல்குர்ஆன் 2:37)
மேலும் இறைவன் கூறுகிறான் : -
➡️“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்”(அல்-குர்ஆன் 66:8)
⭐⭐வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்⭐⭐: -
✍அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -
➡️39:53 ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
➡️39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
✍செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -
✍அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -
➡️3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
➡️3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
✍இஸ்லாத்தில் பாவ மன்னிப்பு பெற நரபலி தேவையில்லை. மனிதர்களின் பாவங்களை மன்னிக்க கிறிஸ்தவர்கள் நம்புவது போல் இறைவன் மனிதனாக வந்து சிலுவையில் கேவலப்பட்டு இறக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மனப்பூர்வமாக பாவ மன்னிப்பு தேடுங்கள். அல்லாஹ் மன்னிக்க தயாராக உள்ளான்.
➡️ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன்(25:70)
➡️இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்” (அல்-குர்ஆன் 25:71)

கருத்துகள்
கருத்துரையிடுக