தாவரங்களுக்கு பிறகு மனிதனா அல்லது மனிதனுக்கு பிறகு தாவரங்களா???

தாவரங்களுக்கு பிறகு மனிதனா அல்லது  மனிதனுக்கு பிறகு தாவரங்களா??? 




12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.


ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் மூன்றாம் நாளில் மரங்களையும் பற்பூண்டுகளையும் உண்டாக்கியதாக சொல்லும் கர்த்தர் ஆறாம் நாளில் மனிதனை படைத்ததாக சொல்கிறார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.


31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.



ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் 4 முதல்  9 வரை உள்ள  வசனங்களில் மனிதனை படைத்த பிறகே செடி புறபூண்டு போன்ற தாவரங்களை உருவாக்கியதாக சொல்லி கர்த்தர்  முரண்படுகிறார். 



4. தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும்  உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

5. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

6. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

9. தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான #சகலவித_விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும்  பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.


உண்மையில் இது இறைவனின் வார்த்தையில் உள்ள முரண்பாடா அல்லது பைபிளில் புகுத்தப்பட்ட மனித கற்பனைகளில் உள்ள முரண்பாடா என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.


பைபிள் மனித கரங்களினால் சிதைக்கப்பட்டு விட்டது என்பதற்கு இந்த வசனங்கள் ஆதாரம். மனித கரங்களில் சிதைக்கப்பட்ட பைபிள் எவ்வாறு மனிதர்களுக்கு நேர் வழி காட்டும்?

கிறிஸ்தவர்கள் சிந்திக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்