வெளி 1:17ல் இயேசு ஏன் முந்தினவர் மற்றும் பிந்தினவர் என்று அழைக்கப்படுகிறார்?

வெளி 1:17ல்  இயேசு ஏன் முந்தினவர் மற்றும்  பிந்தினவர் என்று அழைக்கப்படுகிறார்?



✍இயேசு கர்த்தரால் படைக்கப்பட்ட முதல் படைப்பு என்றே Colossians 1:15 சொல்கிறது.

➡️15  அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும் படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார்.

பைபிள் எங்கும் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. வெளி 1:17 ல் சொல்லப்பட்ட முந்தினவர் என்பது Colossians 1:15 படி கர்த்தரால்  முதலில் படைக்கப்பட்டவர் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.  படைக்கப்பட்டவரை இறைவன் என்று சொல்வது முட்டாள்தனம்.  பிந்தினவர்  என்பது இவ்வுலகத்தில்  பிந்திய இறுதி காலங்களில் வரும் இயேசுவின் இரண்டாம் வருகையினால் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஆதலால் இந்த வசனம் எந்த காலத்திலும் இயேசு வை கடவுள் என்று போதிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

சில சொற்கள் இடங்களை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இது அனைத்து மொழி மற்றும் வேதத்துக்கும் பொருந்தும்

வேதத்தில் ஒரு வசனம் இன்னொரு வசனத்துக்கு ஆதாரமாக அமையும். படைப்புகளில் முதலாம் படைப்பு என்று இயேசுவை பற்றி Colossians  1;15 ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தர் முதலில் படைக்கப்பட்டவர் என்று பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆதலால் முந்தினவர் என்பது கர்த்தரை  பொருத்தவரையில் ஆரம்பம் இல்லாத நிலையை குறிப்பதாகும். இயேசுவை பொருத்தவரையில் ஆரம்பத்தில் எல்லாவற்றிலும் முதலாக படைக்கப்பட்டவர்(பைபிள் படி) என்பதாகும்.

இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பும் கிறிஸ்தவர்கள் இயேசு கர்த்தரால்  படைக்கப்பட்டவர் என்பதை நம்புவதில் சிரமப்படுகின்றனர். அது அவர்களின் தவறான உபதேசத்தின் வெளிப்பாடாகும். இயேசு முதலில் கர்த்தரால் படைக்கப்பட்டவர் என்றே பைபிள் போதிக்கின்றது கீழ்வரும் உதாரண வதனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும்  மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மரித்தோரிலிருந்து எழுந்த முதற்போறானவர் என்பது இறந்தோரிலிருந்து எழுந்த  உயிர்பெற்று எழுந்த முதல் நபர் என்று எவ்வாறு குறிக்குமோ அவ்வாறே கொலந்தியர் 1:15 ல் இயேசுவை பற்றி சொல்லப்பட்டுள்ள படைப்புகளில் முதற்பேறானவர்(first born)  என்பது படைக்கப்பட்டவர்களில் முதலில் படைக்கப்பட்டதையே குறிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்