இந்து சகோதரர்களுக்கு ஓர் இஸ்லாமிய அழைப்பு

✍இந்து மதம் என்பது வேதங்கள் உபநிஷங்கள் புராணங்கள் மற்றும் இதிகாசங்களும் ஆகும். இந்து மத ஆதாரங்களின் அடிப்படையில் சிவனும் விஷ்ணுவும் சத்தியும் பரம்பொருளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். இது மறுக்க முடியாத உண்மை. இந்து மதத்தின் முதல் வேதமான ரிக் வேதத்தில் பெரும்பாலும் இந்திரன் அக்னி மற்றும் தோமாவே போற்றப்படுகிறார்கள். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் 10 அத்தியாயங்கள் கூட முழுதாக இல்லை. பிற்காலத்தில் தான் விஷ்ணுவும் சிவனும் பரம்பொருளாக சித்தரிக்கப்பட்டார்கள்.

✍ இந்து மதத்தை பொறுத்தவரையில் உயர்ந்த குணங்களில் ஒன்றான சாத்வீக குணம் தேவ வழிபாட்டை கொண்டது என்று கிருஷ்ணர் கூறுகிறார். தேவ வழிபாட்டை இந்து வேதங்கள் எதுவும் பாவம் என்று தடுக்கவில்லை. தேவ வழிபாடும் ஆன்மீக பாதையில் ஒன்று என்றே சொல்கிறது.

👉ஒளியியல்புடையோர்(சாத்வீக குணமுடையோர்) வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
(பகவத் கீதை 17:4)

👉Bg 14.14 — ஸத்வ குணத்தில் மரணமடையும்போது, ஒருவன் உன்னத சாதுக்கள் வசிக்கும் தூய்மையான உயர் லோகங்களை அடைகின்றான்.

✍உயர்ந்த இறைவனான ஒரே இறைவனை வணங்காமல் பிரம்மா இந்திரன் விஷ்ணு போன்ற தேவர்களை வணங்குபவர்கள் உலக ஆசையால் தங்களது அறிவை இழந்தவர்கள் என்று பகவத் கீதையும் கூறுகிறது.

👉Bg 7.20 — ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.

✍ஒரே ஒரு இறைவனை மட்டும் வணங்க சொல்லி மற்ற தேவர்களை வணங்க கூடாது என்று சொல்லக்கூடிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்படும் வானவர்கள்(அதாவது உங்கள் வார்த்தைப்படி தேவர்கள்) இந்து மதம் சொல்லும் தேவர்களை காட்டிலும் பலமடங்கு கண்ணியம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அப்படி இருந்தும் இஸ்லாமும் யூத கிறிஸ்தவ மதங்கள் அத்தகைய வானவர் வழிபாட்டை தடுக்கிறது. ஆனால் இந்து மதம் கோபம் பொறாமை காமம் கர்வம் கொண்ட தேவர்களை வணங்க சொல்வது அபத்தமானது.

✍இந்து மதத்தில் சொல்லப்பட்ட மூன்று குணங்களை கடந்த உயர்ந்த குணம் ஒன்றும் உள்ளது. அதுதான் இன்பத்திலும் துன்பத்திலும் நடுதிலை தவறாத நடுநிலை குணம். இந்த குணத்தை கொண்ட முனிவர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிக்காமல் ஒரே இறைவனை மனதில் தியானித்து அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்தவர்கள். இதுப்போன்றே முஸ்லீம்களின் நிலையும். முஸ்லீம்கள் தேவர்களை வணங்காமல் அனைத்திற்கும் இறைவனுமான அந்த ஒரே இறைவனையே வணங்குகிறார்கள். இதுதான் குணத்திலும் ஆன்மீகத்திலும் உயர்ந்த படித்தரம். இத்தகைய உயர்ந்த படித்தரத்தை தான் இஸ்லாம் போதிக்கிறது.

👉அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 28:88)

✍ குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டுமே கொண்ட தேவர்களை வணங்காமல் அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்ட அந்த ஒரே இறைவனின் பக்கம் உங்களை அழைக்கின்றோம். வாருங்கள் வெற்றியின் பக்கம்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்