யூதர்கள் அல்லாஹ்வை நம்புகிறார்களா? - யூத ரப்பியின் விளக்கம்

யூதர்கள் அல்லாஹ்வை நம்புகிறார்களா? -  யூத ரப்பியின் விளக்கம்




யூத ரப்பியின் உரையின் சுருக்கம்:

முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவனும் ஒன்றா என்று கேள்விகள் கேட்கின்றனர். ஆம். முஸ்லீம்களின் கடவுள் கொள்கையும் யூதர்களின் கடவுள் கொள்கையும் ஒன்றுதான். முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வும் யூதர்கள் வணங்கும் இறைவனும் ஒன்று தான். சிலர் அல்லாஹ்வை சந்திர கடவுள் என்று கூறும் கூற்றானது முட்டாள்தனமானது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் என்ற சொல்லை எந்த இறைவனை வணங்க பயன்படுத்தினர் என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால் இப்போது அல்லாஹ் எனும் நாமத்தை முஸ்லீம்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதையே நாம் பார்க்க வேண்டும். 

God எனும் ஆங்கில சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேனும் ஒரு சிலையை வணங்கவும் பயன்படுத்தி இருக்கலாம். அதற்காக இப்போது  ஒரே இறைவனை வணங்க God என்ற சொல்லை பயன்படுத்துவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் God என்று அவர்கள் வணங்கிய சிலையை குறிக்காது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது இறைவனை தானே தவிர, அந்த God எனும் சொல்லை அல்ல.  அதே போன்று தான் அல்லாஹ் எனும் சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யார் வேண்டுமானாலும் தாங்கள் வணங்கும் இறைவனுக்கு பயன்படுத்தி இருக்கலாம். அதனால் அந்த சொல்லை பயன்படுத்தும் இறைவன் யூதர்கள் வணங்கும் இறைவன் இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது குர்ஆன் எந்த அர்த்தத்தில் அல்லாஹ் எனும் சொல்லை பயன்படுத்துகிறது என்பதே.

யூதர்கள் மஸ்ஜிதிகளுக்கு சென்று முஸ்லீம்களுடன் தங்கள் இறைவனை வணங்க முடியும். ஏனெனில் யூதர்களின் இறை கொள்கையும் முஸ்லீம்களின் இறை கொள்கையும் ஒன்றே.

முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு இப்போது எதுவெனில் முஹம்மது ஒரு இறைத்தூதரா அல்லது இல்லையா என்பதுதான். சில யூதர்கள் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ் யூதர்கள் வணங்கும் இறைவனும் இல்லை என்று சொல்கின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடாகும். இது முட்டாள்தனமானது.

முஸ்லீம்கள் சொல்லும் அல்லாஹூ அக்பர் என்ற சொல்லை நான் சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதே போன்று முஸ்லீம்கள் சொல்லும் ஷஹாதத்தில் உள்ள லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதை சொல்வதிலும் எந்த தவறும் இல்லை. ஏனெனில் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வும் தோராவில் சொல்லப்பட்ட  இறைவனும் ஒன்று தான். இங்கு கருத்து வேறுபாடு எதுவெனில் முஹம்மது இறைத்தூதரா அல்லது இல்லையா என்பதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்