மஸ்ஜிதில் தொழுகும் யூதர்.

மஸ்ஜிதில் தொழுகும் யூதர்






ஸலோம் என்ற அறிமுகத்துடன் வரும் யூதர் முஸ்லிம்களிடம் மஸ்ஜிதில் தனது மத நம்பிக்கை படி வழிபாடு செய்ய அனுமதி கேட்கிறார். முஸ்லீம்களும் அனுமதி கொடுக்கவே அந்த யூதர் மஸ்ஜிதில் தனது மத நம்பிக்கைப்படி வழிபாடு செய்கிறார்.

தனது வழிபாடு முடித்தவுடன்.....

மஸ்ஜிதின் மேனேஜர் ஒசாமா அந்த யூதரிடம் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவர் பெயரை கேட்கின்றார். லெவி என்று தனது பெயரை யூதர் அறிமுகப்படுத்தி கொள்கின்றார். #நாம்_அனைவரும்_வணங்குவது_ஒரே_இறைவனை_தான் என்று பரஸ்பரம் கூறி கொள்கின்றனர்.

அந்த யூதர் "நீங்கள் யூதர்களை வெறுக்கிறீர்களா" என்று முஸ்லீம்களிடம் கேட்கிறார். இல்லை என்று முஸ்லீம்கள் மறுக்கின்றனர். அப்படியென்றால் "முஸ்லீம்கள் யூதர்களை தங்கள் எதிரியாக பார்ப்பது இல்லையா?" என்று யூதர் கேட்க முஸ்லீம்கள் இல்லை என்று மறுக்கின்றனர். யூத முஸ்லீம் மோதல் அரசியல் காரணங்களால் தான் உண்டாகிறது என்றும் முஸ்லீம்கள் விளக்குகின்றனர்.

குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தில் தோராவை இறை வேதம் என்று நம்ப சொல்வதை காணலாம் என்றும் இன்னும் தோராவில் உள்ள வரலாற்று சம்பவங்களையும் நீங்கள் குர்ஆனில் காண முடியும் என்றும் முஸ்லீம்கள் யூதரிடம் சொல்கின்றனர்.

முஸ்லீம்கள் மற்றும் யூதர்களிடம்  நடக்கும் மோதல் உண்மையில் அவர்களின் வேதங்கள் போதிப்பது அல்ல, மாறாக அது அரசியல் காரணங்களை கொண்டது என்றும் முஸ்லீம்கள் லெவி என்ற யூதரிடம் கூற, அந்த யூதரோ ஏன் உங்களை போன்ற முஸ்லீம்களை மீடியாவில் பார்க்க முடியவில்லை என்று கேட்கிறார். அதற்கு முஸ்லீம்கள் நம்மை போன்றவர்களை மீடியாவில் உள்ளவர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறுகின்றனர். முஸ்லீம்கள் மற்றும் யூதர்களிடம் உள்ள வெறுப்புணர்வை நீக்க என்ன செய்யலாம் என்று யூதர் கேட்க அதற்கு முஸ்லீம்கள் உங்களை போன்று மற்ற யூதர்களும் மஸ்ஜிதில் சென்று வழிபாடு செய்து உறவாடலாம் என்று முஸ்லீம்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

(இந்த வீடியோவில் உள்ளவை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்