இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை நெறி
இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை நெறி
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து நான் வருகிறேன். இஸ்லாம் பற்றி நான் அறிந்தவள் அல்ல. நான் இஸ்லாத்தை பற்றி அடக்குமுறை செய்யும் மதமாகவே அறிந்து இருந்தேன். நான் மலேசியா செல்லும் வரை இல்லாமை பற்றி இந்த எண்ணமே என்னில் இருந்தது. அங்கு சென்ற பிறகு நான் நினைத்திராத வகையில் அல்லாஹ் என்னை வழிநடத்தினான்.
மேற்குலகம் தங்கள் நாட்டு பெண்களுக்கு கொடுத்த உரிமையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்திருந்ததை அறிந்தேன்.
மரினா மஹாதீர் போன்ற ஆளுமை வாய்ந்த பெண்களின் சந்திப்பு இஸ்லாம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியது. என் வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைக்க முடியும் என்று நம்பினேன். இஸ்லாத்திற்கு திரும்பினேன். அல்ஹம்துலில்லாஹ்..
ஒரே இறைவனான அல்லாஹ்வை ஒவ்வொரு நாளும் வணங்கும் அழகிய வாழ்க்கை முறையே இஸ்லாம்.
ஏன் பெண்கள் தங்கள் அழகை மறைத்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து முஸ்லீம் மற்றும் முஸ்லிமல்லாத பலரிடம் இது குறித்து பேசியிருந்தேன்.
எனக்கு இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்த இமாம் மற்றும் அவரது மனைவி தகுந்த விளக்கங்கள் தந்திருந்தனர். பர்தா என்பது பாலியல் உணர்வை தூண்டுவதை வியாபாரமாக கொண்ட இந்த உலகத்தில் பெண்கள் தங்கள் அழகை தங்கள் கணவனுக்காக மட்டும் பாதுகாப்பதாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
பர்தா அணிவதை தங்கள் உரிமையாக நினைத்த ஆளுமை வாய்ந்த பல பெண்களை சந்தித்தேன்.
அல்லாஹ் உள்ளங்களை புரட்டி போடுபவன். நான் முஸ்லீமாக மாறுவேன் என்று என் வாழ்நாளில் என்றும் நினைத்து பார்த்தது இல்லை. அல்லாஹ் என் மீது அருள்புரிந்தான். என் உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் விசாலமாக்கினான்.
இதுவே அல்லாஹ் மிக்க அன்பானவன் என்பதை புரிந்து கொள்ள காரணமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்க விரும்புகிறேன்.
ஆதாரம்: www.aboutislam.net
கருத்துகள்
கருத்துரையிடுக