கிறிஸ்தவத்தால் சாகும் வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட கலீலியோ
💎 கிறிஸ்தவத்தால் சாகும் வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட கலீலியோ 💎
✍இறைவனின் வேதம் என்பது சத்தியத்தை மட்டும் கொண்டதாக இருக்கும். அந்த சத்திய வேதம் நிருபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருப்போதும் முரண்படாது. ஆனால் கிறிஸ்தவர்கள் வேதம் என்று நம்பும் கறைப்படிந்த பைபிள் பல இடங்களில் அறிவியலுக்கு முரணாக நிற்கிறது. கறைப்படிந்த பைபிளை பின்பற்றும் மக்கள் அறிவியல் ஆய்வாளர்களுக்கு எதிராக இருந்தனர் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. கிறிஸ்தவத்தால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அறிவியல் அறிஞர்களில் ஒருவரை இப்போது பார்ப்போம்.
✍வியாழன் கோளின் நான்கு நிலவுகளைக் கண்டறிந்த பின்னர் பூமியை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றவில்லை எனும் முடிவுக்கு வந்தார் இத்தாலியைச் சேர்ந்த கலீலியோ கலீலி. பல்வேறு அறிவியல் ஆய்வு களுக்குப் பிறகு ‘சூரியன்தான் பிரபஞ்சத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்துதான் பூமி சுற்றுகிறது’ என்று அறிவித்தார். கலீலியோவுக்கு முன்னரே சூரிய மையக் கோட்பாட்டைக் கண்டு பிடித்திருந்தார் கோபர்நிக்கஸ். ஆனால் மத நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் கண்டு பிடிப்பாக இருந்ததால் அச்சத்தின் காரணமாக அதை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டார்.
✍பூமிதான் மையத்தில் இருப்பதாகவும், சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனவும் கத்தோலிக்கத் திருச்சபை நம்பியது. பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்றும் நம்பியது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது. கீழ்கண்ட பைபிள் வசனங்கள் அறிவியலுக்கு முரண்பட்டு நின்றதோடு மட்டுமல்லாமல் அறிவியலாளர்களை தண்டிக்கவும் காரணமாக அமைந்தது.
➡️பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
1 நாளாகமம் 16:30,
1 நாளாகமம் 16:30,
➡️கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
சங்கீதம் 93:1,
சங்கீதம் 93:1,
➡️கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
சங்கீதம் 96:10,
சங்கீதம் 96:10,
➡️சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.
பிரசங்கி 1:5
பிரசங்கி 1:5
✍சூரியன்தான் மையம் என கலீலியோ கூறியபோது பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு இரு நண்பர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் சூரிய மையக் கொள்கைக்குப் பல ஆதாரங்கள் அளித்து ’டயலாக் கன்செர்னிங் தி டூ சீஃப் வேர்ல்ட் சிஸ்டம்ஸ்’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்ற புத்தகத்தை வெளியிட்டார் கலீலியோ. இது திருச்சபையின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியதால் கோபமடைந்தார் எட்டாவது போப் அர்பன்.
✍உடனடியாக கலீலியோ மீது புலன் விசாரணை நடத்தி அவரைக் குற்றவாளி என அறிவித்தது திருச்சபை. இந்தக் கருத்தை வைத்துக்கொள்ளவோ, ஆதரிக்கவோ கற்பிக்கவோ தடை விதிக்கப்பட்டது. தனது கருத்துகளை கலீலியோ திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ரோமின் அரசும் மதச் சக்திகளோடு கைகோக்கவே வேறுவழியின்றி 1633 ஜூன் 22 அன்று தன் சூரிய மையக் கொள்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் கலீலியோ. அதன் பிறகும் சாகும் வரை அவரை வீட்டுச் சிறையில் அடைத்தன கிறிஸ்தவ மதமும், அரசும்.
✍கலீலியோவிற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே அல் பிருனீ என்ற முஸ்லீம் அறிவியலாளர் பூமியின் சுழற்சியை கண்டுபிடித்தார். அல் பிருனீயின் காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அரசு அவரை ஊக்குவித்தது. இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு தடையாக என்றும் இருந்ததில்லை. ஆனால் கறைப்படிந்த பைபிள் அறிவியலுக்கு தடையாக இருந்தது மட்டுமல்லாமல் அறிவியலாளர்களை தண்டிக்கவும் செய்தது. இத்தகைய சம்பவங்கள் கறைப்படிந்த வேதம் ஒருப்போதும் நேர் வழி காட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக