பைபிளின் பார்வையில் இயேசு ஒரு பாவி.


பைபிளின் பார்வையில் இயேசு பாவமற்றவரா?





✍கிறிஸ்தவர்கள் இயேசுவை பாவமற்றவர் என்று சொல்லி கொண்டாலும் அவர்களின் வேதமான பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஆராய்வது நமது கடமையாகும். ஏனெனில் வேதத்துக்கு முரண்பட்ட எந்த ஒரு கருத்தும் கட்டுக்கதையே. கிறிஸ்தவர்கள் உண்மையை சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்வதை காட்டிலும், தங்களது சுய கருத்துகளை சொல்லியே மக்களை மயக்கி வருகின்றனர். உண்மை என்னவெனில் அவர்களின் வேதம் அவர்களின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருப்பதையே நாம் பல நேரங்களில் பார்க்கிறோம். இயேசு பாவமற்றவர் என்று பைபிள் சொல்கிறதா என்பதை இனி காண்போம்.


☀️ஞானஸ்தானம்☀️

✍கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கையாக அதாவது பாவங்களை மன்னிக்கும் முக்கிய சடங்காக ஞானஸ்தானம் இருந்துள்ளது.

💎யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
(மாற்கு 1:4)

✍யோவான் இஸ்ரவேலர்களின் பாவமன்னிப்பிற்காக ஞானஸ்தானம் எனும் பணியை இயேசுவின் காலக்கட்டத்தில் செய்துள்ளார் என்பதை மேற்கண்ட வசனம் சொல்கிறது.

✍பாவமற்றவர் என்று கிறிஸ்தவர்கள் மார்தட்டி கொள்ளும் இயேசு யோவானிடத்தில் ஞானஸ்தானம் பெற்றுள்ளார் என்று பைபிள் சொல்கிறது.

💎அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
(மாற்கு 1:9)

✍இயேசு பாவமற்றவர் எனில் ஏன் ஞானஸ்தானம்  எடுத்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதர்களை போன்று இயேசுவும் பாவம் செய்பவராக இருப்பதால் தான் இயேசுவும் ஞானஸ்தானம் எடுத்துள்ளார்.  மேற்கண்ட வசனம் இயேசு பாவம் செய்தவர் என்பதையே தெளிவாக காட்டுகிறது.


☀️கர்த்தரால் சபிக்கப்பட்ட பரம்பரையில் வந்தவர்:☀️

✍அதுமட்டுமல்ல இயேசுவை கர்த்தரால் சபிக்கப்பட்ட எகோனியாவின் பரம்பரை என்று பைபிள் சொல்கிறது. இந்த எகோனியாவின் பரம்பரையில் எவரும் தாவீதின் சிங்காசனத்தை அடைந்து ஆட்சி செய்ய முடியாது என்று கர்த்தர் சபித்துள்ளார். இவ்வாறு கர்த்தரால் சபிக்கப்பட்ட பரம்பரையில் வந்தவராக இயேசுவை பைபிள் அடையாளம் காட்டுகிறது.

💎கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

💎இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர்சொல்லுகிறார்.
எரேமியா 22:28,30

💎பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
மத்தேயு 1:12

✍எந்த பரம்பரை தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய முடியாது என்று கர்த்தர் சபித்தாரோ அந்த பரம்பரையில் மேசியா வந்து தாவீதின் சிங்காசனத்தை அடைந்து ஆட்சி செய்வார் என்று பைபிள் சொல்வது அதன் நம்பகத்தன்மையையும் இயேசுவையும் கேலிக்கூத்தாகிறது. கர்த்தர் தனது வார்த்தைக்கு முரண்பட்டவராக நடந்தார் என்று கர்த்தரையும் பைபிள் அவமதிக்கிறது.


☀️இயேசு விபச்சார சந்ததியில் வந்தவர்:☀️

✍இயேசுவை மேசியா என்று சொல்லும் புதிய ஏற்பாடு அதே இயேசுவை விபச்சார சந்ததியில் வந்தவர் என்று அவரை இகழ்கிறது.

💎‘யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்’ (மத்தேயு 1:3)

✍இயேசுவின் பரம்பரையில் வருகின்ற தாமார் தனது மாமனார் யூதாவுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டு தான் பாரோஸை பெற்றுக் கொண்டதாக ஆதியாகமம் 38ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

💎15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,

💎16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
ஆதியாகமம் 38

✍அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது இராஜா, தனது படைவீரானான உரியாவின் மனைவியிடத்தில் சாலமனை பெற்றதாக பைபிள் சொல்கிறது.

💎தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.
மத்தேயு 1:6

✍இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.

💎‘வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது’ – உபாகமம் 23:2,3


☀️கர்த்தர் ஒருவரே நல்லவர்:☀️

💎17. பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;

💎18. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;
(மாற்கு 10)

✍இவ்வாறு தன்னை நல்ல போதகர் என்று சொன்ன விசுவாசியிடத்தில் இயேசு, என்னை நல்லவன் என்று சொல்லாதே.... பிதா ஒருவரை தவிர வேறு யாரும் நல்லவர் இல்லை என்று இயேசு பதில் அளிக்கிறார். இயேசுவின் இந்த வார்த்தைகள் கிறிஸ்தவர்கள் சொல்லும் இயேசு பாவமற்றவர் என்ற கருத்துக்கு முற்றுபுள்ளி வைப்பதாக உள்ளது.

✍கிறிஸ்தவர்களின் புனித நூலான கறைப்படிந்த பைபிள் இயேசுவை பாவி என்றும் கர்த்தரால் சபிக்கப்பட்ட வம்சாவழியை சார்ந்தவராகவும், விபச்சார சந்ததியாகவும் அடையாளம் காட்டி இயேசுவை தரம் தாழ்த்துகிறது. மேற்கண்ட அத்துனை பைபிள் வசனங்களையும் மறைத்து தான் இயேசுவை பாவமற்றவர் என்று சொல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்