கர்த்தரால் ஆண்டவராக்கப்பட்ட இயேசு

கர்த்தரால் ஆண்டவராக்கப்பட்ட இயேசு





✍இறைவன் என்பவன் அனைத்தையும் படைத்து அதன் அதிகாரம் அனைத்தையும் தன்னில் கொண்டவனாக இருப்பான். பைபிளின் பழைய ஏற்பாடு கர்த்தர் தான் அனைத்தையும் படைத்ததாகவும் அதன் அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டவராக காட்டுகிறது.

✍இயேசுவை குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்தால் அது நமக்கு அதிர்ச்சியை மட்டுமே பரிசாக தருகிறது.  கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட இயேசுவையையே பைபிள் காட்டுகிறது.  கிறிஸ்தவர்கள் இறைவன் என்று நம்பகின்ற இயேசுவை இறைவன் என்று  தெள்ளத்தெளிவாக சொல்லும் ஒரு வசனத்தையும் பைபிளில் காண முடியவில்லை. கிறிஸ்தவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை நமக்கு வியப்பை தருகிறது.

✍பழைய ஏற்பாட்டில் மோஸே எவ்வாறு கர்த்தரால் ஆரோனுக்கும் பார்வோனுக்கும் தேவனாக்கப்பட்டாரோ அதேப்போன்று தான் இயேசுவும் கர்த்தரால்  தேவனாக்கப்பட்டுள்ளார். பழைய ஏற்பாடு மோஸேயை தேவன் என்று குறிக்க  கர்த்தரின் நாமமான எலோஹிம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. இந்த சிறப்பும் கூட இயேசுவுக்கு இல்லை. மோஸேயை இறைவன் என்று சொல்லாத கிறிஸ்தவர்கள் இயேசுவை மட்டும் இறைவன் என்று சொல்வது நகைப்புக்குரியது.


➡️யாத்திராகமம்
7:1. கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.





➡️யாத்திராகமம் 4:16. அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.



➡️Acts 2:
36. ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
Therefore let all the house of Israel know assuredly, that #God_hath_made that same Jesus, whom ye have crucified, both Lord and Christ.

✍இப்படி கர்த்தரால் ஆண்டவர் மற்றம் கிறிஸ்துவாக ஆக்கப்பட்ட இயேசு எப்படி இறைவன் ஆக முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்