அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்
⭐⭐ அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன்⭐⭐
💎"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
(அல்குர்ஆன் 37:125)
✍படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளன் என்று குர்ஆன் ஒரு சில இடங்களில் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் விஷம பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அவர்களுக்கு விளக்கம் தரும் பதிவே இது.
✍அரபு மொழியில் "காலிக்" என்ற சொல் படைத்தல் மற்றும் உருவாக்குதல்("சனி") என இரண்டையும் குறிக்கும். எனவே எவர் எதைச் செய்தாலும், எதை உற்பத்தி செய்தாலும் அவர் அரபியில் "காலிக்" என்றே அழைக்கப்படுகின்றார்.
✍இரண்டு வகையான படைப்புகள் உண்டு.
➡️ஓன்று இல்லாமையில் இருந்து படைப்பது.
➡️மற்றொன்று இருக்கின்ற பொருள்களில் இருந்து படைப்பது அதாவது உருவாக்கம்.
✍படைப்பு மற்றும் உருவாக்கம் என இரண்டையும் குறிக்க அரபியில் காலிக் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
✍மனிதர்களுக்கு பொருள்களை கொண்டு மற்றொரு பொருளை உருவாக்கும் அதிகாரத்தை அல்லாஹ் தந்துள்ளான். அதனால் தான் இங்கு படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளன் என்று சொல்லப்படுகிறது.
✍அல்லாஹ் எல்லா பொருட்களின் படைப்பாளன் என்று 40:62இல் சொல்லப்பட்டுள்ளதற்கான காரணம் மனிதர்கள் தயாரிக்கும் கார்கள் மற்றும் எல்லா பொருட்களும் அல்லாஹ் உருவாக்கின உலோகங்களில் இருந்தே படைக்கப்படுவதனால் ஆகும். அல்லாஹ் மட்டுமே இல்லாமையில் இருந்து படைப்பவன். மனிதனோ அல்லாஹ்வின் அனுமதியின் படி அல்லாஹ் படைத்த உலோகங்கள் கொண்டு மற்ற பொருட்களை படைப்பவன் அதாவது உருவாக்குபவன்.
💎நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 64:11)
✍அதுமட்டுமல்ல அல்லாஹ்வின் அனுமதியின் படி சிலர் படைக்கும் ஆற்றலை பெற்று இருந்ததாக இஸ்லாமிய ஆதாரங்கள் கூறுகின்றன.
அவற்றில் முக்கியமான இரு நபர்கள்.
1. இயேசு
2. தஜ்ஜால்
⭐இயேசுவின் அற்புதங்கள்:
💎அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
(அல்குர்ஆன் 5:110)
✍மேற்கண்ட வசனத்தில் ஈஸா நபி அல்லாஹ்வின் அனுமதி கொண்டு களிமண்ணில் இருந்து பறவையை உருவாக்கும் அற்புததத்தை செய்துள்ளதாக சுட்டி காட்டியுள்ளது.
⭐தஜ்ஜாலின் அற்புதங்கள்:
💎திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக
வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக்
கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்.
நூல்: முஸ்லிம் 5629
💎மழைபொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும் ,
முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை)
முளைப்பிக்கும் ” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5629
✍படைப்புகளில் ஒருவனான தஜ்ஜால் வார்த்தைக்கு பூமி தனது பயிரை வெளிப்படுத்தும் என்று முஹம்மது நபியால் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
✍குர்ஆன் மற்றும் ஹதிஸில் சொல்லப்படாத எத்தனையோ நபர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு படைக்கும் அற்புததத்தை செய்துள்ளனர். அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எவரும் எதையும் செய்ய முடியாது. முஸ்லீம்கள் அல்லாத மற்றவர்கள் வணங்கும் எவரும் படைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை. மாறாக அவர்கள் எல்லாம் படைக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்பதையும் குர்ஆன் மிக தெளிவாக சொல்கிறது.
💎(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் 25:3)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக